For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதியை குணப்படுத்த தினமும் இருவேளை இந்த 1 ஸ்பூன் காற்றாழை மருந்தை சாப்பிடுங்க!!

சர்க்கரை வியாதிக்கு கற்றாழை மருந்தை சாப்பிடுவதல கிடைக்கும் நன்மைகள் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hemalatha
|

சர்க்கரை வியாதி வந்தவர்களால் படும் பாட்டை எளிதில் சொல்ல முடியாது. மனம் ஆசைப்பட்டபடி இனிப்புகளை சாப்பிட முடியாது. பிடிக்காவிட்டாலும் காலம் முழுவதும்,
மாத்திரைகள், இஞ்செக்ஷன், என கூடவே இழுத்துக் கொண்டு போக வேண்டும். அத்துடன் முடிந்ததா? வருடா வருடம் சுகர் அதிகமாகுதே தவிர கம்மியாக மாட்டீங்குதே.

அரிசி சாப்பாட்டுக்கு தடை, சர்க்கரை இல்லாத காபி, பிடிச்ச பழம் சாப்பிட முடியாது ந்னு வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு எல்லாத்தையும் துறக்கனும்.
இதுக்கு தீர்வே கிடையாதா என குமுறும் சர்க்கரைவியாதி வந்தர்களை கேட்டால் இன்னும் பல கதைகளை சொல்வார்கள். இதற்குதான்.

இந்த வியாதி வருவதற்கு முன்னேயே கட்டுப்பாடோடு வாழ்ந்திருந்தால் இப்படி அவஸ்தை பட தேவையில்லையே..... சரி வந்துடுச்சு என்ன செய்ய என நொந்தவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை.

சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இனிப்பை தொடவே கூடாது. நீங்கள் சாப்பிடும் லட்டு சாப்பிட்டாலும் சரி, அரிசி வகைகள், மைதா போன்றவற்றை சாப்பிட்டாலும் சரி ..சர்க்கரையில் அளவு ரத்தத்தில் கிடுகிடுவென ஏறிடும். ஆனால் முழுகோதுமையில் சப்பாத்தி செய்து சாப்பிட்டால் குறைவான அளவே சர்க்கரை உயரும். ஆகவேதான் சப்பாத்தியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உணவில் கட்டுப்பாடோடு இருப்பது மிக அவசியம். சர்க்கரை வியாதிக்கு ஆயுர்வேதத்தில் கற்றாழை மருந்தாகவே பயன்படுகிறது. எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் கற்றாழை சர்க்கரை வியாதிக்கு நல்லது?

ஏன் கற்றாழை சர்க்கரை வியாதிக்கு நல்லது?

வெந்தயம், பாகற்காய் போலவே கற்றாழையும் அற்புத பலன்களை சர்க்கரை வியாதிக்கு தருகிறது. கற்றாழை எல்லா இடங்களிலும் கிடைக்கும். வீட்டிலேயே வளர்க்கலாம். குடல், கல்லீரல், சர்க்கரை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.

கற்றாழையிலுள்ள சத்துக்கள் :

கற்றாழையிலுள்ள சத்துக்கள் :

விட்டமின் ஏ, ஈ, சி, பி1, பி2, பி3, பி6, பி12, மற்றும் மினரல்கள் உள்ளது. அதிகமாக அமினோ அமிலங்கள் இருப்பதால் சரும பாதிப்புகளை குணப்படுத்தும். இதில் அதிகமாக இரும்பு மற்றும் காப்பர் இருப்பதால் புண்களை ஆற்றும்.

இதயத்திற்கும் ஃப்ரெண்ட்லி :

இதயத்திற்கும் ஃப்ரெண்ட்லி :

கற்றாழை இதய பாதிப்புகளையும் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் இதயத்தில் படியும் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

கற்றாழையை எப்படி உணவில் எடுத்துக் கொள்வது?

கற்றாழையை எப்படி உணவில் எடுத்துக் கொள்வது?

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 முறை ஓடும் தண்ணீரில் கழுவுங்கள். பின்னர் அதனை சாப்பிடலாம். ஆரம்பத்தில் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.

போகப் போக தினமும் 3 ஸ்பூன் வரை கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் ஆற்றல் மிக்க இயற்கை மருந்தாகும். கற்றாழையை ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் மிக எளிது.

கற்றாழை மருந்து :

கற்றாழை மருந்து :

பிரியாணி இலையை பொடி செய்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் கற்றாழையின் ஜெல் போன்றவற்றை கலந்து சாப்பிட வேண்டும். காலை இரவு என உணவிற்கு பின் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை உயராமல் இருக்கும்.

மூலிகை கசாயம் :

மூலிகை கசாயம் :

துளசி, வில்வம், வேப்பிலை, நெல்லி ஆகியவற்றை காய வைத்து எல்லாம் கலந்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீரில் இந்த பொடியை சேர்த்து காற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

7

கற்றாழை ஜூஸ் :

கற்றாழை ஜூஸ் :

தேவையானவை :

கற்றாழை - ஒரு முழு இலை

நீர்- 3 கப்

 செய்முறை :

செய்முறை :

கற்றாழை இலையை இரண்டாக பிரித்து அதிலிருக்கும் ஜெல்லை ஒரு ஸ்பூனால் வழித்து எடுத்துக் கொள்ளுங்கல். அதனை நன்றாக கழுவிய பின் அதனை மிக்ஸியில் ஒரு அடி அடித்த பின் நீர் கலந்து மீண்டும் மிக்ஸியில் அடியுங்கள். நன்றாக இரண்டும் கலக்கும் வரை அரைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜூஸ் ரெடி.

இதில் விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு அல்லது இஞ்சிச் சாறு கலந்து கொள்ளலாம்.

கற்றாழை மற்றும் பனங்கற்கண்டு :

கற்றாழை மற்றும் பனங்கற்கண்டு :

தொடர்ந்து 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை ஜெல்லை மட்டும் எடுத்து 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி பனங்கற்கண்டோடு கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி ஓடியே போய்விடும்.

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

தினமும் ஃப்ரெஷான கற்றாழை ஜூஸை குடிப்பதால் வியக்கத்தக்க அளவிற்கு சர்க்கரை வியாதிக்கு பலனைத் தருகிறது.

கற்றாழையில் இருக்கும் நார்சத்து விரைவில் நீரில் கரையும் தன்மை கொண்டது. இதனால் குளுகோஸின் அளவு ரத்தத்தில் குறைக்கும். இது இயற்கைஉயான வழியில் ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கிறது.

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

கற்றாழை சாப்பிடத் தொடங்கி 2 மாதத்திலேயே 50% சர்க்கரை அளவை ரத்தத்தில் குறைக்கும். இதிலுள்ள லெக்டின் ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கும். அதன் பின்னரும் அப்படியே தக்க வைக்க உதவும்.

 சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

இது நச்சுக்களையும் உடலிலிருந்து வெளியேற்றும். அதனால் அதிகப்படியான க்ளுகோஸ் ரத்தத்திலிருந்து குறைக்கிறது.

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

சர்க்கரை வியாதிக்கு கற்றாழையின் நன்மைகள்

இது இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கிறது.

புற்று நோய்கள் :

புற்று நோய்கள் :

சிறுநீரகம் மற்றும் மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

கண்பார்வை :

கண்பார்வை :

சோற்றுக் கற்றாழையின் சாற்றை தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும். கண் பார்வை குறைதல் மற்றும் கண் பார்வை நோய்கள் ஆகியவை அறவே வராது.

சிறு நீரக நோய்கள் :

சிறு நீரக நோய்கள் :

காற்றாழை ஜெல்லை நீராகரத்தில் கலந்து சாப்பிட்டால் சிறு நீரக நோய்கள் குணமாகும். சிறுநீருடன் ரத்தம் கலந்து வருவது நிற்கும்.

அல்சர் :

அல்சர் :

நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, சோரியாசிஸ், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், கற்றாழையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடை :

உடல் எடை :

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் :

மாதவிடாய் :

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழையை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை நோய்கள் குணமாகும். சீரற்ற மாதிவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.

என்றும் இளமை :

என்றும் இளமை :

தினமும் கற்றாழை ஜெல்லை மிக சுத்தமாக 7 தடவைக்கும் மேல் கழுவி அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையாக இருப்பது உறுதி. முகமும் வசீகரத்துடன் இருக்கும்.

 சூரிய கதிர்களின் ஆபத்து குறையும்.

சூரிய கதிர்களின் ஆபத்து குறையும்.

தொடர்ந்து 9 நாட்களுக்கு வெறும் வயிற்றில் கற்றாழை சாறை குடித்து வந்தால் ஒரு வருடத்திற்கு சூரியக் கதிர்களால் நமக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது.

வயிற்று பாதிப்புகள் :

வயிற்று பாதிப்புகள் :

பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

விந்தணு உற்பத்தி :

விந்தணு உற்பத்தி :

கற்றாழையின் ஜெல்லை தொடர்ந்து ஆண்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat 1 scoop of aloevera daily to treat diabetes to get miracle effects

Eat 1 scoop of aloevera daily to treat diabetes to get miracle effects
Desktop Bottom Promotion