நீங்கள் அதிகமாய் அல்லது குறைவாய் தூங்குகிறீர்களா? சர்க்கரை வியாதி வரலாம்

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

7 மணி நேரத்திற்கும் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால், சர்க்கரை வியாதி வர வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகின்றது.

ஆண்களுக்கு குறைவாக அல்லது அதிகமாக தூங்கும்போது பான்கிரியாஸிலுள்ள பீட்டா செல்கள் தூண்டப்படுவதில்லை. இதனால் இன்சுலின் சுரப்பு குறைகிறது. ஆகவே சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகமாகின்றன.

sleeping less or more may lead to diabetes

ஆனால் பெண்களுக்கு எதிர்மறையாக நடக்கிறது. 7 மணி நேரத்திற்கும் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கட்டுப்பாடோடு இருக்கிறது என்று நெதர்லாந்தில் உள்ள வியூ பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

sleeping less or more may lead to diabetes

கடந்த 50 ஆண்டுகளில் சராசரி தூக்க நேரத்திலிருந்து 2 மணி நேரம் குறைவாக தூங்குபவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் அதே அளவிற்கு சர்க்கரை வியாதியின் எண்ணிக்கையும் இரு மடங்காகியுள்ளது என்று மேலும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வினை உறுதி செய்வதற்காக சுமார் 30- 60 வயதுள்ள 788 பேரிடம் ஆய்வு நடத்தினர். ஆய்வின் இறுதியில் தூக்கம் குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று தெரிவித்துள்ளனர்.

sleeping less or more may lead to diabetes

நீங்கள் ஆரோக்கியமாகவே இருந்தாலும், சரியான முறையில் நல்ல உணவுகளையும் உண்டாலும் குறைவாக அல்லது அதிகமாக தூங்கினால், சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று ஃபெம்க் ரட்டர்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு கிளினிகல் என்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிஸம் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

sleeping less or more may lead to diabetes for men

sleeping less or more may lead to diabetes for men
Story first published: Thursday, July 14, 2016, 17:35 [IST]
Subscribe Newsletter