Latest Updates
-
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்..
நீரிழிவு நோயின் தாக்கத்தைத் தடுக்கும் காய்கறிகள்!!
உலகத்திலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் ஒரே நோய் நீரிழிவு தான். இதற்குப் பலவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை நல்ல ரிசல்ட்டுகளைக் கொடுத்து வந்தாலும், கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாதவைகள்!!!
இயற்கையாக நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இருக்கின்றன. இவற்றைச் சாப்பிட்டு வந்தால், ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மற்றவர்கள் இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு நோயையே நெருங்க விடாமல் தடுக்க முடியும்.
இப்போது நீரிழிவைத் தடுக்கக்கூடிய பத்து காய்கறிகளைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இது தொடர்பான வீடியோவைப் பார்க்க...

ப்ராக்கோலி
உலகிலேயே மிகவும் சத்தான காய்கறிகளில் ப்ராக்கோலிக்குத் தான் முதலிடம். இதிலுள்ள சல்ஃபோரபேன் என்ற கூட்டு வேதிப் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளும், அவ்வியாதியைத் தடுக்க நினைப்பவர்களும் தங்கள் உணவில் கண்டிப்பாக ப்ராக்கோலியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பசலைக் கீரை
பசுமையான கீரை வகைகள் அனைத்துமே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை. குறிப்பாக, பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயே நமக்கு வராமல் தடுத்து விடலாம் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பீட்ரூட்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பீட்ரூட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. எனவே நாம் எல்லோரும் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இந்தக் கிழங்கில் உள்ள ஆந்தோசையனின் என்ற பொருளுக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எரிச்சல் மற்றும் வைரஸுக்கு எதிரான பண்புகளும் இக்கிழங்கில் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான உணவாகும்.

கேல்
கோஸ் வகையைச் சேர்ந்த இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களான பி-6 மற்றும் கே ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன. இவை எல்லாம் நீரிழிவின் முக்கிய எதிரிகள் ஆகும்.

முட்டைக்கோஸ்
நீரிழிவு நோயைத் தடுப்பதில் முட்டைக்கோஸுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. இரத்தத்தில் உள்ல சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கணையங்களின் முறையான இயக்கத்திற்கும் அது உதவுகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரப்பதே இந்தக் கணையங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்பாரகஸ்
கணையம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் இயக்கங்கள் சிறப்பாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான உணவாகும். இன்சுலின் அளவை அதிகரித்து, அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இது நன்றாகக் கட்டுப்படுத்துகிறது.

பீன்ஸ்
நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் பீன்சும் ஒன்றாகும். நீரிழிவுக்கு எதிரான பண்புகள் பீன்ஸில் நிறைய உள்ளன.

கேரட்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டினுக்கும் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

பூண்டு
பூண்டில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நீரிழிவைத் தடுப்பதிலும் பூண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால்களைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் பூண்டு குறைக்கிறது.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications