For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு மருந்துகள் கல்லீரல் புற்றுநோயை தடுக்கும்-ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Diabetes drug may help prevent liver cancer
டைப் 2 நீரிழிவிற்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணமாக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயை தடுப்பது குறித்து மேரிலாண்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

50 சதவிகிதத்திற்கு மேல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு டைப் 2 நீரிழிவுக்கு உட்கொள்ளப்படும் மெட்டாபார்மின் மருந்துகளை கொடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எலிகளுக்கு இருந்த புற்றுநோய் 37 சதவிகிதம் குணமடைந்தது கண்டறியப்பட்டது. டைப் 2 நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்தான மெட்பார்மின் ஆரம்பகட்டத்தில் உள்ள கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுக்கட்டி அதிகம் வளர்ச்சியடையாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உடலில் குளுக்கோசானது கொழுப்பு அமிலமாக மாற்றப்படுகிறது. இது கல்லீரல் மூலமாக லிப்போகெனிசிஸ் ஆக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தில் பிரச்சினை எழும்போதுதான் மனிதர்களுக்கு நீரிழிவு, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்று போன்றவை ஏற்படுகின்றன. அதேசமயம் டைப் 2 நீரிழிவுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மெட்டோபார்மின் மருந்து குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. அதோடு கல்லீரல் புற்றுநோயையும் படிப்படியாக கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

English summary

Diabetes drug may help prevent liver cancer | நீரிழிவு மருந்துகள் கல்லீரல் புற்றுநோயை தடுக்கும்

Metformin, a drug that is widely used to treat Type II diabetes, may help to prevent primary liver cancer, a new study has claimed.
Story first published: Wednesday, April 4, 2012, 10:28 [IST]
Desktop Bottom Promotion