Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இரவு 10 மணிக்கு மேல இந்த அறிகுறி தெரியுதா? அப்ப இரத்த சர்க்கரை அதிகமா இருக்குன்னு அர்த்தம்...
Symptoms of Diabetes At Night In Tamil: உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. சர்க்கரை நோயானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றால் வரக்கூடிய ஒரு சுகாதார பிரச்சனையாகும். இரத்த சர்க்கரையை கவனித்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சர்க்கரை நோய் இருந்தால், அது உடலில் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதுவும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இரவு நேரத்தில் ஒருசில அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். இப்போது ஒருவரது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் இரவு 10 மணிக்கு மேல் தெரியும் அறிகுறிகளைக் காண்போம்.

அதிகமாக சிறுநீர் கழிப்பது
பொதுவாக வழக்கத்தை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாகும். உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை உடல் சிறுநீரின் வழியே வெளியேற்றும். ஆனால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாமல், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இந்நிலையில் இரத்த சர்க்கரை அளவை உடனே சோதனை செய்து பாருங்கள்.
அதிக தாகம்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இரவு நேரத்தில் அதிகளவு தாகத்தை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படும். இதன் விளைவாக அதிக தாகத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக இந்த தாகம் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே இரவு அடிக்கடி நீங்கள் தாகத்தை அதிகமாக உணர்ந்தால், இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
அதிகமான உடல் சோர்வு
நீங்கள் தொடர்ந்து உடல் சோர்வை அனுபவித்தால், குறிப்பாக இரவு நேரத்தில் இம்மாதிரியான உடல் சோர்வை சந்தித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். உயர் இரத்த சர்க்கரை அளவுகள் குளுக்கோஸை திறம்பட பயன்படுத்துவதிலிருந்து செல்களைத் தடுத்து, உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கப் பெறாமல் செய்யும். எனவே போதுமான ஓய்வை எடுத்த பின்னரும், மிகுந்த சோர்வை உணர்ந்தால், இரத்த சர்க்கரை அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
கால் எரிச்சல்
இரவு நேரத்தில் மட்டும் கால்களில் அதிக எரிச்சலை உணர்கிறீர்களா? அதோடு பாதங்களில் மிகுந்த அசௌகரியங்களை சந்திக்கிறீர்களா? இப்படி கால்களில் சந்திக்கும் அசௌகரியங்களால் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள முடியவில்லையா? அப்படியானால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
தூக்கத்தில் மூச்சுத் திணறல்
தூக்கத்தில் மூச்சுத் திணறல் என்பது உயர் இரத்த சர்க்கரையின் மற்றொரு இரவு நேர எச்சரிக்கை அறிகுறியாகும். இந்த நிலையில் தூக்கத்தின் போது ஒழுங்கற்று சுவாசிக்கக்கூடும். பெரும்பாலும் இம்மாதிரியான நிலை சர்க்கரை நோயாளிகளிடம் தான் காணப்படும். எனவே இம்மாதிரியான அறிகுறியை நீங்களும் சந்தித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது
இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்த்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறியாகும். இரத்த சர்க்கரை அளவில் மாறுபாடுகள் ஏற்படும் போது, அது உடல் வெப்பநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக அதிகமாக வியர்க்க தூண்டுகிறது.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் இரவு நேரத்தில் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து பாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications