Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் வந்துருக்கு-ன்னு அர்த்தம்....
Symptoms Of Diabetes In Tamil: தற்போது உடலுழைப்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் ஒவ்வொருவரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். நமது உடலில் ஏதேனும் சிறு பிரச்சனை என்றாலும், நமது உடல் நமக்கு சிக்னலை அனுப்பும். அதுவும் தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையானது உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொருவரும் சர்க்கரை நோய் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
முக்கியமாக சர்க்கரை நோய் ஒருவருக்கு இருந்தால், அது உடலில் திடீரென்று ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் நமக்கு தெரியப்படுத்தும். சரி, சர்க்கரை நோய் இருந்தால், அதன் ஆரம்ப அறிகுறிகளை எப்படி கண்டறிவது என்று நீங்கள் கேட்கலாம். கீழே சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு
ஒருவர் நல்ல சீரான உணவுகளை உட்கொண்டு, நல்ல சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வந்தும், அந்நபரின் உடல் எடை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகரித்து வந்தால், அது இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப கால அறிகுறியாகும். பெரும்பாலும் இது ப்ரீ டயாபெட்டீஸ் உடன் தொடர்புடையது. அதாவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். எனவே உடல் எடை காரணமின்றி அதிகரித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
2. கழுத்துப் பகுதியில் கருமை
உங்களின் கழுத்துப் பகுதியில் திடீரென்று கருமையாக மாறத் தொடங்குகிறதா? முக்கியமாக கழுத்தின் பின்பகுதியில் கருமையான திட்டுக்கள் காணப்படுகிறதா? அப்படியானால் அது சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய ஒருவித தோல் பிரச்சனையான அகந்தோசிஸ் நிக்ரிகன்களாக இருக்கலாம். உங்கள் கழுத்துப் பகுதியில் இப்படியான மாற்றத்தைக் கண்டால், உடனே சர்க்கரை நோய் சோதனை செய்து பாருங்கள்.
3. மருக்கள்
உங்கள் சருமத்தில் சிறிய அளவிலான மருக்கள் வரத் தொடங்குகிறதா? இப்படி சருமத்தில் திடீரென்று ஒருவருக்கு மருக்கள் வருகிறது என்றால், அது அதிக இன்சுலின் அளவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே மருக்கள் உங்கள் சருமத்தில் புதிதாக வரத் தொடங்கினால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. மனநிலை மாற்றங்கள்
திடீரென்று நீங்கள் எரிச்சலாகவும், சில சமயங்களில் மிகவும் மகிழ்ச்சியாகவும் என உங்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு சீராக இல்லை என்று அர்த்தம். எப்போது இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதோ, அப்போது அது மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
5. ஞாபக மறதி
உங்களால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையா அல்லது எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லையா? அப்படியெனில் அது சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும். இதைக் கொண்டும் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று அறியலாம்.
முக்கியமாக சருமத்தில் வரும் மருக்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தால், அது இன்சுலின் அளவு அதிகரிப்பு அல்லது டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், சில சமயங்களில் வாழ்க்கை முறை காரணிகளாலும் இது ஏற்படலாம். ஆகவே எதுவாயினும், உடலில் ஏதேனும் சிறு மாற்றங்களைக் கண்டாலும், அதை புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து உடனடி சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். இதனால் நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications