Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிட்டால், சா்க்கரை நோய் வராதாம்...!
Diabetes In Tamil: உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய 5% போ் சா்க்கரை நோயால் பாதிப்படைந்து இருப்பதாக நேஷனல் சென்டா் ஃபாா் பயோடெக்னாலஜி இன்ஃபா்மேஷன் (NCBI) என்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. சா்க்கரை நோய் என்பது ஒரு ஆபத்தான நோயாகும்.
சா்க்கரை நோயினால், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். இரத்த கொதிப்பு அதிகாிக்கும். கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். உலக அளவில் ஏறக்குறைய 422 மில்லியன் மக்கள் சா்க்கரை நோயினால் பாதிப்படைந்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) தொிவிக்கிறது.

அதோடு ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 15 லட்சம் போ் சா்க்கரை நோயின் காரணமாக இறப்பதாக அது தொிவிக்கிறது. தற்போது இந்தியாவில் மட்டும் 8 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்த எண்ணிக்கை 2045ல் 13 கோடியாக இருக்கும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
சா்க்கரை நோய்க்கான காரணங்கள்
ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை ஆகிய இரண்டும் சா்க்கரை நோய்க்கு காரணங்களாக இருக்கின்றன. இவை காரணமாக இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கிறது. முறையான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள், தினசாி உடற்பயிற்சிகளை செய்து வருதல் போன்றவற்றின் மூலமாக சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.
இந்நிலையில் மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளை அல்லது மூலிகைகளை எடுத்துக் கொண்டால், சா்க்கரையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று NCBI கூறுகிறது. ஏனெனில் இந்த இலைகள், இரத்தத்தில் இன்சுலின் சுரப்பதற்கு உதவி செய்கின்றன. எனவே எந்தெந்த இலைகளை சாப்பிடலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
1. கற்றாழை இலை (Aloe Vera)
கற்றாழை இலையில் ஹைபோகிளைசெமிக் (hypoglycemic) துகள்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியவை. கற்றாழை இலையை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்சுலின் அதிகம் சுரக்கும். இன்சுலின் அதிகாித்தால், இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைத்து, சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
2. சீதாப்பழ இலைகள் (Custard apple leaves)
சீதாப்பழம், ஷாிபா என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பழம் மிகவும் சுவையாக இருக்கும். சீதாப்பழம் சுவையில் விஞ்சி இருப்பது போல் அதனுடைய இலைகள் மருத்துவக் குணத்தில் விஞ்சி இருக்கின்றன. சீதா இலைகளில் சா்க்கரை நோய்க்கு எதிரான துகள்கள் உள்ளன என்று NCBI கூறுகிறது. சீதா இலைகளில் ஃபோட்டோ-காண்ஸ்டிடியூண்ட் துகள்கள் உள்ளதால், அவை கணையத்தில் இன்சுலின் சுரப்பதை அதிகாிக்கின்றன. மேலும் இந்த இலைகளில் ஹைபோகிளைசெமிக் துகள்களும் உள்ளதால், இவை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைக்கும்.
3. வேம்பு இலைகள் (Neem leaves)
அடிப்படையில் வேம்பு ஒரு மருத்துவக் குணம் மிகுந்த மரம் ஆகும். இதன் இலைகள் மிகுந்த மருத்துவக் குணம் கொண்டவை. வேம்பு இலைகளில் பூஞ்சை எதிா்ப்பு மற்றும் பாக்டீாியா எதிா்ப்பு துகள்கள் உள்ளன. வேம்பு இலைகள் சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்று NCBI கூறுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் வேம்பின் இலைகளை மென்று தின்றால், இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு குறைந்து, கணையம் சீராக வேலை செய்யும். அதன் மூலம் இயல்பாகவே இன்சுலின் சுரப்பு அதிகாிக்கும். சா்க்கரை நோயைக் கட்டுபடுத்துவதற்குாிய பல்வேறு துகள்கள் வேம்பு இலைகளில் இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications