Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
ருவாண்டாவில் பரவும் கண்களில் இரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் கொடிய வைரஸ் - இது எப்படி பரவுகிறது??
Bleeding Eye Virus In Tamil: ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கொடிய வைரஸ் மக்களிடையே பரவி குறுகிய காலத்தில் பல உயிர்களை பறித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றால் மில்லியன் கணக்கான மக்கள் உலகளவில் உயிரிழந்தனர்.
அந்த கொடிய வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடிய ஒரு வைரஸ் சமீபத்தில் ருவாண்டாவில் பரவி, இதுவரை 15 பேரின் உயிரைப் பறித்துள்ளது. அது தான் மார்பர்க் வைரஸ். இந்த வைரஸ் கண்களில் இரத்தப்போக்கை ஏற்படுத்தும் அளவில் கொடியது. இந்த வைரஸ் தொற்றால் ருவாண்டாவில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதோடு அப்பகுதியில் தான் குரங்கு அம்மை, ஓரோபௌச் போன்றவையும் பரவி வருகின்றன. உலக சுகாதார அமைப்பும் இந்த வைரஸ் பரவல் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இப்போது இந்த மார்பர்க் வைரஸ் குறித்தும், அது எவ்வளவு கொடியது மற்றும் அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
மார்பர்க் வைரஸ் எப்போது தோன்றியது?
மார்பர்க் வைரஸ் முதன்முதலாக ஆப்பிரிக்காவில் 1967 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த வைரஸால் 7 பேர் உயிரிழந்தனர். அதன் பின் 2005 ஆம் ஆண்டு அங்கோலாவில் இத்தொற்றால் 227 பேர் உயிரிழந்தனர். பின்னர் 2021 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் ஒருவர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வைரஸ் எவ்வளவு கொடியது?
மார்பர்க் வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் 88 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தும் அளவில் கொடியது. இந்த வைரஸ் எபோலா குடும்பத்தை சேர்ந்தது என்பதால், எபோலாவைப் போன்றே மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. முக்கியமாக இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய திறன் கொண்டது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவக்கூடியது என்பதால், விலக்குகளைப் பராமரிப்பவர்கள், வௌவால் இருக்கும் பகுதியில் இருப்பவர்கள், குகை அல்லது சுரங்க பகுதிகளில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு ஏற்படுவற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்
மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதன் அறிகுறிகளை கண்டறிந்து, ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுவதன் மூலம், உயிரிழப்பைத் தடுக்கலாம். இப்போது அதன் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
அதிக காய்ச்சல்
பொதுவாக உடலில் எந்த ஒரு கிருமிகள் நுழைந்தாலும் முதலில் காய்ச்சல் வரத் தொடங்கும். அதுவும் மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதன் விளைவாக அதிக காய்ச்சலை சந்திக்க நேரிடும். அதுவும் காய்ச்சலுடன் குளிர் மற்றும் உடல் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
கடுமையான தலைவலி
மார்பர்க் வைரஸ் தொற்றின் மற்றொரு அறிகுறி தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தலைவலி. இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கி, தாங்க முடியாத அளவில் கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
தசை வலி மற்றும் பலவீனம்
தசை வலி, மூட்டு வலி மற்றும் உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை ஒன்றாக அனுபவித்து, தினசரி செயல்பாடுகளை கூட செய்ய முடியாத அளவில் இருந்தால், அத்தகையவர்களுக்கு மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டால் சந்திக்கும் பிற அறிகுறிகளாவன குமட்டல், வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு. இந்த அறிகுறிகள் தீவிரமாகும் போது, அது நீரிழப்பை அதிகரித்து, நோயாளியின் நிலைமையை மோசமாக்கும்.
விவரிக்க முடியாத சரும அரிப்புகள்
மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்ட 5 அல்லது 7 ஆவது நாளில் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படத் தொடங்கும். அதுவும் இப்படியான அரிப்பை மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் சந்தித்தால், அத்தகையவர்களுக்கு நிச்சயம் மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
இரத்தக்கசிவு
மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது உடலின் வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த தொற்றால் கட்டுப்படுத்த முடியாத இரத்தக்கசிவு ஏற்படலாம். குறிப்பாக மூக்கு, ஈறுகள் மற்றும் துளையுள்ள பகுதிகள் மற்றும் விழிவெண்படலத்திலும் இரத்தக்கசிவு ஏற்படக்கூடும். ஆனால் இது தொற்று தீவிரமான நிலையில் தான் இப்படியான இரத்தக்கசிவு அறிகுறிகள் தெரியும்.
தொற்று ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்
* மார்பர்க் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பழ வெளவால்கள் மற்றும் பிற காட்டு விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.
* கைகளை அடிக்கடி சோப்பு நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
* பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகள், முகமூடிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
* இறைச்சிகளை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும்.
* வெளிநாடு அல்லது தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளைச் சுற்றி பயணங்களை மேற்கொள்ளும் போது, அரசு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











