Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 7 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க... இல்ல மரணத்தை விரைவில் சந்திப்பீங்க..எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
Unhealthy Foods: தற்போது நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிறைய பேர் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு இதய நோய், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களாலும் பலர் இறக்கின்றனர். அத்துடன் கல்லீரல், சிறுநீரகம், குடல் தொடர்பான நோய்களாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இப்படி நோய்கள் அதிகரிக்க முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுகளும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் தான். எனவே உலக சுகாதார அமைப்பு இந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், தடுக்கவும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 7 உணவுகளை பட்டியலிட்டுள்ளன. முக்கியமாக இந்த உணவுகள் நாம் தினசரி உணவில் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களாகும்.

இந்த உணவுப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டாலோ அல்லது முழுமையாக தவிர்த்தாலோ, பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். இப்போது உலக சுகாதார அமைப்பு எந்தெந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பட்டியலிட்டுள்ளது என்பதைக் காண்போம்.
1. சர்க்கரை
சர்க்கரை உணவிற்கு இனிப்புச் சுவையைத் தரலாம். ஆனால் இந்த சர்க்கரை தான் உலகளவில் பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு முக்கிய காரணியாகும். மேலும் சர்க்கரையை ஒருவர் தினந்தோறும் தொடர்ந்து அதிகளவில் எடுக்கும் போது, அது கல்லீரல், கணையம் மற்றும் செரிமான மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே நீங்கள் இதுவரை அதிகமாக சர்க்கரை எடுத்து வந்தால், இனிமேல் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
2. வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளில் கலோரிகள், உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் அதிகமாக இருக்கும். இப்படியான உணவுகளை தொடர்ந்து எடுத்து வந்தால், அது இதய நோய் போன்ற பல்வேறு கொடிய நோய்களின் அபாயத்திற்கு வழிவகுக்கும்.
3. பாஸ்தா மற்றும் பிரட்
பாஸ்தா, பிரட் போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் ஆரோக்கியமற்றவையாக கருதப்படுகின்றன. இப்படி சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் உட்கொண்டால், அது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை அதிகரித்துவிடும். எனவே இப்படியான உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த கைக்குத்தல் அரிசி, பார்லி, திணை, சிறுதானியங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
4. காபி
காபியில் காப்ஃபைன் உள்ளன. இந்த காப்ஃபன் தலைவலி, மன இறுக்கம், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், உடல் சோர்வு போன்றவற்றை உண்டாக்கும். அதுவும் அதிகளவில் காப்ஃபைனை உட்கொண்டால், அது இதய நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே காபியை அளவாக குடிக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
5. உப்பு
உப்பு தான் உணவின் சுவையை அதிகரிக்கிறது. உடலின் திரவ சமநிலை, இதயத் துடிப்பு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசைச் சுருக்கம் ஆகியவற்றிற்கு உப்பு அவசியம் என்றாலும், அதிகளவு உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே உணவில் அளவாக உப்பை சேர்க்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது.
6. உருளைக்கிழங்கு சிப்ஸ்
ஸ்நாக்ஸ் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது உருளைக்கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் போன்றவை தான். ஆனால் இந்த பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள், உப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே ஆரோக்கியமாக வாழ நினைத்தால், இப்படியான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என WHO எச்சரிக்கிறது.
7. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பேகான், சாசேஜ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். அதுவும் இதில் உள்ள நைட்ரேட்டுகள் செரிமானத்தின் போது நைட்ரைட்டுகளாக மாற்றமடைந்து, மிகவும் ஆபத்தான நச்சான நைட்ரோசமைனை உற்பத்தி செய்து, புற்றுநோயை உண்டாக்கும். எனவே இந்த மாதிரியான உணவையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications