Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
Cholesterol: கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த டீயை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடிங்க போதும்...
Herbal Tea To Reduce Bad Cholesterol In Tamil: உடலுறுப்புக்களின் சீரான செயல்பாட்டிற்கு கொலஸட்ரால் மிகவும் இன்றியமையாதது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் உடலில் அளவுக்கு அதிகமானால், அதன் விளைவாக உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் அதிகரித்துவிடும். எனவே ஒவ்வொருவரும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இயற்கையாகவே நமது உடல் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ராலைக் கொண்டிருக்கும். இந்நிலையில் நாம் உண்ணும் உணவுகளினாலும் உடலினுள் கொலஸ்ட்ரால் சேர்கிறது. அதுவும் தற்போதைய நவீன உலகில் ஜங்க் உணவுகள் தான் அதிகம் விற்கப்படுகின்றன. இந்த ஜங்க் உணவுகளில் கொலஸ்ட்ரால் ஏராளமான அளவில் இருக்கும்.

இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணும் போது, ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டுமானால், ஜங்க் உணவுகளை உண்பதைத் தவிர்ப்பதோடு, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஒருசில பானங்களையும், உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
அதோடு, தினசரி உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரது உடலில் சாதாரண மொத்த கொலஸ்ட்ரால் 200 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு அதிகமாகும் போது தான் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க ஏராளமான உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ரோஸ்மேரி டீ.
ரோஸ்மேரி நல்ல நறுமணமிக்க ஒரு மூலிகை. இந்த ரோஸ்மேரி மூலிகையில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளன. இந்த ரோஸ்மேரி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் விரைவில் குறைவதோடு, வேறுபல நன்மைகளும் கிடைக்கும். இப்போது ரோஸ்மேரி டீ எப்படி கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் இந்த டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வேறுபல நன்மைகளையும் காண்போம்.
ரோஸ்மேரி டீ எப்படி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது?
மருத்துவர்களின் கூற்றுப்படி, ரோஸ்மேரி மூலிகை நல்ல நறுமணத்தைக் கொண்டது மட்டுமின்றி, ஆயுர்வேத மருத்துவத்திலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்த ரோஸ்மேரியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பது நல்லது.
இந்த டீயில் காப்ஃபைன் இல்லை. மேலும் இந்த டீ மிகவும் சுவையாக இருப்பதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். ஏனெனில் ரோஸ்மேரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இதனால் இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தையும், வீக்கத்தையும் தடுக்கும்.
மேலும் இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்ற பாலிஃபீனோலிக் கலவைகள் இரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து ப்ளேக்குகள் உருவாவதைத் தடுக்கிறது. இது தவிர இதிலிருக்கும் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் பண்புகளைக் கொண்டவை.
எனவே இந்த ரோஸ்மேரியை தினமும் டீ வடிவில் எடுக்கும் போது, அது இரத்தப் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புரோஸ்ரேட் புற்றுநோய் போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ரோஸ்மேரி டீ குடிப்பதால் கிடைக்கும் பிற நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவு குறையும்
இரத்த சர்க்கரை அளவை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அதன் விளைவாக கண்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் போன்றவை மோசமாக சேதமடையும். எனவே சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்கள் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டும்.
இந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ரோஸ்மேரி டீ பெரிதும் உதவி புரியும். ஆய்வுகளிலும் ரோஸ்மேரி டீயில் உள்ள கலவைகள் தசை செல்களுக்குள் க்ளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரித்து, இரத்த சர்க்கரையைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
மனநிலை மற்றும் நினைவாற்றல் மேம்படும்
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளின் குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஸ்மேரி டீயைக் குடித்து வந்தால், அதில் உள்ள கலவைகள் மனநிலையை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கும்.
மேலும் இந்த மூலிகை டீ வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரிக்க ஊக்குவித்து, உணர்ச்சிகள், கற்றல் மற்றும் நினைவுகளுடன் தொடர்புடைய மூளையின் பகுதியான ஹிப்போகாம்பஸில் வீக்கத்தைக் குறைத்து, ஒருவரை ரிலாக்ஸாக்குகிறது.
செரிமானம் மேம்படும்
செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் ரோஸ்மேரி டீயைக் குடித்து வந்தால், மலச்சிக்கல், வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரது செரிமானம் சிறப்பாக இருந்தான், அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தை திறம்பட குறைக்க முடியும்.
ரோஸ்மேரி டீயை தயாரிப்பது எப்படி?
ரோஸ்மேரி டீயைத் தயாரிப்பது என்பது மிகவும் எளிதானது. இந்த ரோஸ்மேரி டீ தயாரிப்பதற்கு இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும். அவை
* நற்பதமான ரோஸ்மேரி இலைகள் அல்லது காய்ந்த ரோஸ்மேரி இலைகள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
ரோஸ்மேரி டீ செய்முறை:
* இந்த டீயைத் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதில் நற்பதமான ரோஸ்மேரி இலைகள் அல்லது காய்ந்த ரோஸ்மேரி இலைகளைப் போட்டு, உங்களுக்கு எவ்வளவு ஸ்ட்ராங்காக ரோஸ்மேரியின் சுவை வேண்டுமோ, அதற்கேற்ப 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வேண்டுமானால், அத்துடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
* இந்த டீயை தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications