Latest Updates
-
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்!
மருந்து மாத்திரை போடாம கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா? இந்த பானங்களை காலையில குடிங்க போதும்...
Cholesterol Reducing Juice In Tamil: கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் பிசுபிசுப்பான மெழுகுப் பொருள். இந்த கொலஸ்ட்ரால் நமது உடலில் புதிய செல்கள் மற்றும் அத்தியாவசியமான ஹார்மோன்களை உருவாக்கவும் மிகவும் இன்றியமையாதது.
என்ன தான் கொலஸ்ட்ரால் நமக்கு நன்மைகளை வழங்கினாலும், இந்த கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமானால், அது உடலில் தீவிரமான மற்றும் உயிரையே பறிக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை வரவழைத்துவிடும்.

எனவே கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிப்பது என்பது மிகவும் இன்றியமையாது. தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையின் காரணமாக நிறைய பேர் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கிறார்கள். உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு உடனே மருத்துவரை அணுகி, அதைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
பொதுவாக உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் இப்படி உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்க ஒருசில இயற்கை பானங்கள் உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் அந்த நேச்சுரல் பானங்களை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். இப்போது உயர் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் பானங்களைக் காண்போம்.
மிக்ஸ்டு பெர்ரி ஸ்மூத்தி
பெர்ரி பழங்கள் நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும். உங்களுக்கும் பெர்ரி பழங்கள் பிடிக்குமானால், அந்த பெர்ரி பழங்களைக் கொண்டு ஸ்மூத்தியை தயாரித்து குடித்து வாருங்கள். ஏனெனில் பெர்ரி பழங்களில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
பெர்ரி ஸ்மூத்தியைத் தயாரிக்க, மிக்சர் ஜாரில், 1 கப் மிக்ஸ்டு பெர்ரி பழங்கள், 1 கப் இனிப்பில்லாத பாதாம் பால், 1 வாழைப்பழம், 1/2 அவகேடோ பழம் ஆகியவற்றைப் போட்டு நன்கு அரைத்து, ஒரு டம்ளரில் ஊற்றி மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கிளறினால், மிக்ஸ்டு பெர்ரி ஸ்மூத்தி தயார்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த மஞ்சளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள், தினசரி சமையலில் மஞ்சளை சேர்ப்பதைத் தவிர, அதைக் கொண்டு ஒரு பானம் தயாரித்து குடித்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் சுக்குப் பொடி, 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
க்ரீன் ஜூஸ்
நற்பதமான பச்சை இலைக் காய்கறிகளை அனைத்து காலங்களிலுமே கிடைக்கும். இப்படிப்பட்ட பச்சை இலைக் காய்கறிகளைக் கொண்டு ஒரு பானத்தைத் தயாரித்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை மெழுகுப் போன்று கரையச் செய்து உடலில் இருந்து வெளியேற்றும். அதற்கு மிக்சர் ஜாரில் பசலைக்கீரை, வாழைப்பழம், அவகேடோ, 1 கப் பெர்ரி பழங்கள், 1 கப் சோயா பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, காலையில் குடிக்க வேண்டும்.
பட்டை
மஞ்சளுக்கு அடுத்தப்படியாக கொலஸ்ட்ராலை திறம்பட கரைக்கும் ஆற்றல் பட்டைக்கு உள்ளது. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பட்டைத் தூள் மற்றும் மஞ்சள் தூளை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் கரைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்த உதவுவதோடு, கொலஸ்ட்ரால் அளவை மறைமுகமாக குறைக்க உதவுகிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
