Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? இந்த மாவட்டம்தானா? -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா?
Chocolate Day 2024: சாக்லேட்டை இந்த மாதிரி சாப்பிட்டா.. செக்ஸ் வாழ்க்கை வேற லெவல்-ல இருக்கும் தெரியுமா?
Chocolate Day 2024: சாக்லேட் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட் தான் சாக்லேட். அதுவும் காதலர்கள் தங்கள் காதலிக்கு ரோஜா பூவிற்கு அடுத்தபடியாக சாக்லேட்டை தான் அதிகம் வாங்கி கொடுப்பார்கள். எனவே காதலில் சாக்லேட்டிற்கு தனி இடம் உண்டு.
இதனால் தான் என்னவோ காதலர் வாரத்தின் மூன்றாம் நாள், அதாவது பிப்ரவரி 09 ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலிக்கு அல்லது மனதிற்கு பிடித்தவர்களுக்கு, சாக்லேட்டுகளை வாங்கி கொடுப்பார்கள்.

நிறைய பேர் சாக்லேட் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருளாகவே நினைக்கின்றனர். ஆனால் சாக்லேட்டிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதுவும் டார்க் சாக்லேட்டை உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும், இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும்.
இது தவிர சாக்லேட் ஒருவரது பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது தெரியுமா? ஆம், சாக்லேட் சாப்பிட்டால் பாலியல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இதற்கு சாக்லேட்டில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம். இப்போது சாக்லேட் எப்படி ஒருவரது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்பதைக் காண்போம்.
பாலியல் உறுப்புக்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
சாக்லேட்டை உட்கொள்ளும் போது, அதில் உள்ள எல்-அர்ஜினைன் என்ற அமினோ அமிலம், ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் பாலுணர்ச்சியை அதிகரிக்கும். எப்படியெனில், இந்த அமினோ அமிலமானது பாலியல் உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நைட்ரிக் ஆக்ஸைடின் அளவையும் ஊக்குவித்து, பாலுணர்ச்சி மற்றும் ஆசையை அதிகரிக்கிறது. ஒருவருக்கு பாலுணர்ச்சி சிறப்பாக இருந்தால், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படலாம்.
மனநிலையை மேம்படுத்தும்
தற்போதைய அவசரமான உலகில், மன அழுத்தத்தால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி மன அழுத்தம் அதிகம் இருப்பதால், நிறைய தம்பதிகளின் காதல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருப்பதில்லை. சொல்லப்போனால் மன அழுத்தம் காரணமாக பாலுறவில் ஈடுபட எண்ணம் வருவதில்லை. ஆனால் சாக்லேட்டை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஃபைனிலெதிலமைன் என்னும் காதல் ரசாயனம், பாலுணர்ச்சியை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது. எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறக்க விரும்பினால், தினமும் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.
ஆற்றல் அதிகரிக்கும்
சாக்லேட்டில் தியோப்ரோமைன் என்ற கலவை உள்ளது. இது மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்கிறது. அதாவது, இந்த கலவை தான் ஒருவரது ஆற்றலை மேம்படுத்தி, உற்சாகத்தை உணர வைக்கிறது. இப்படிப்பட்ட கலலை சாக்லேட்டில் மட்டுமின்றி, டீ, கோலா பருப்புகளிலும் காணப்படுகிறது.
இதயத்திற்கு நல்லது
டார்க் சாக்லேட்டில் எல்-அர்ஜினைன் என்னும் பொருள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இரத்த அழுத்தம் சீரான அளவில் இருந்தால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான், காதலுணர்வை சிறப்பாக வெளிக்காட்ட முடியும்.
சீன மருத்துவத்தின் படி, இதயமானது நமது உணர்ச்சி மையமாக கருதப்படுகிறது. ஏனெனில் இதயம் அன்பு, அக்கறை, பிணைப்பு மற்றும் நெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கொக்கோ பீன்ஸில் காணப்படும் ப்ளேவோனால் ப்ரீ ராடிக்ல்களால் உடல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து, இதயத்தின் வழியாக இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் மேம்படுத்த உதவுகிறது.
எனவே உடல் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், தினமும் டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள். அதுவும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க விரும்பினால், விளையாட்டில் ஈடுபடும் முன் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
