Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பெற்றோர்களே! உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அது புற்றுநோயோட அறிகுறி..எச்சரிக்கும் மருத்துவர்
Childhood Cancer Awareness Month: புற்றுநோய் என்றதுமே பலரும் இது பெரியவர்களுக்கு, வயதானவர்களுக்கு, கெட்ட பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தான் வரும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இந்த கொடிய புற்றுநோய் சில சமயங்களில் குழந்தைகளுக்கும் வரலாம் என்பது தெரியுமா? இந்த குழந்தைப் பருவ புற்றுநோய் அரிதானது தான். ஆனால் அந்த புற்றுநோய் உடலினுள் வளரும் போது அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும்.
அதுவும் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், சிறுகுழந்தைகளின் ஆரோக்கியம் கூட மோசமாக பாதிக்கப்படுகிறது. சொல்லப்போனால் நிறைய பெற்றோர்களுக்கு இன்னும் குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்றே கூற வேண்டும்.

எனவே பெற்றோர்களிடையே குழந்தைப்பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் குழந்தைப்பருவ புற்றுநோயின் அறிகுறிகள், அது எதனால் வருகிறது, பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்தும், அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் குறித்தும் ஆஸ்டர் ஒயிட்ஃபீல்டு மருத்துவமனையின் குழந்தை மருத்துவம், ஹெமாட்டாலஜி, ஆன்காலஜி & பிஎம்டியின் ஆலோசகரான டாக்டர் ரகுராம் சிபி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "குழந்தைப் பருவப் புற்றுநோய் பெரியவர்களைத் தாக்குவது போன்று பொதுவானதல்ல. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 70,000-க்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுகின்றனர். அதுவும் புற்றுநோய்களில் குழந்தைகளைத் தாக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய் என்றால் அது லுகேமியா என்னும் இரத்த புற்றுநோயாகும்" என்று கூறினார்.
குழந்தைப்பருவ புற்றுநோயின் அறிகுறிகள்
குழந்தைப்பருவ புற்றுநோயான இரத்தப் புற்றுநோய் குழந்தைகளுக்கு இருந்தால், பின்வரும் அறிகுறிகள் தெரியக்கூடும். அந்த அறிகுறிகளாவன:
* தொடர்ச்சியான காய்ச்சல்
* சருமம் வெளுத்துப் போவது
* எளிதில் காயங்கள் ஏற்படுவது
* கழுத்து, தொடை மற்றும் அக்குளில் வீக்கம்
* சில சமயங்களில் அடிவயிற்றிலும் வீக்கம் ஏற்படும்.
* தலைவலி
* வாந்தி போன்றவை.
முக்கியமாக இந்த அறிகுறிகள் பல வாரங்களாக நீடித்திருந்தால், அசால்ட்டாக இருக்கக்கூடாது. உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
குழந்தைப்பருவ புற்றுநோயை கண்டறிவது எப்படி?
"மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தெரிந்தால், உடனே குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். அப்போது மருத்துவர் ஒரு பளிய இரத்த பரிசோதனையை செய்ய சொல்வார். அதுவும் CBC அல்லது CBP இரத்த பரிசோதனையை செய்ய சொல்வார். இந்த சோதனை சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் உட்பட உங்கள் இரத்தத்தின் கூறுகளை அளவிடும் பொதுவான நோயறிதல் சோதனையைக் குறிக்கின்றன. இந்த சோதனையைக் கொண்டு இரத்தப் புற்றுநோய் உள்ளதா என்பதை அறியலாம்.
அதன் பின் இரத்த புற்றுநோய் கண்டறியப்பட்டால், குழந்தை ஹீமாடோ புற்றுநோயியல் நிபுணரை அணுக அறிவுறுத்தப்படும். இந்த நிபுணர் குழந்தைக்கு புற்றுநோய்க்கான சரியான சிகிச்சையை மேற்கொள்வார். ஆரம்பத்திலேயே குழந்தைப் பருவ புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்து, அந்த குழந்தைளால் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியும்." என்று டாக்டர் கூறினார்.
எனவே பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளிடம் மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தெரிந்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்திட முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
