Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
Chicken Liver: வாரம் ஒருமுறை சிக்கன் ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Chicken Liver Benefits In Tamil: உலகளவில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு இறைச்சி என்றால் அது சிக்கன்/கோழி தான். ஏனெனில் சிக்கன் அனைத்து தரப்பினரும் வாங்கக்கூடிய வகையில் விலை குறைவில் கிடைக்கிறது. அதே சமயம் மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் சிக்கனில் கொலஸ்ட்ரால் சற்று குறைவு.
ஆனால் சிக்கனை சமைக்கும் பலர் அதன் ஈரலை சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் சிக்கன் ஈரல் ஆரோக்கியமானதல்ல என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையில் மட்டன் ஈரலைப் போன்றே சிக்கன் ஈரலும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. சிக்கன் ஈரலை சாப்பிடும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இப்போது சிக்கன் ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. இரும்புச்சத்து அதிகம்
சிக்கன் ஈரலில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ஈரலை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பெண்கள் சிக்கன் ஈரலை சாப்பிடுவது ரொம்பவும் நல்லது. சிக்கன் ஈரலில் உள்ள இரும்புச்சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது.
2. கலோரிகள் குறைவு
தற்போது நிறைய பேர் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளனர். இதனால் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். சிக்கன் ஈரலில் புரோட்டீன் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிக்கன் ஈரல் மிகச்சிறந்த உணவு. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு சட்டென்று நிரம்புவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
3. புரோட்டீன் அதிகம்
சிக்கன் ஈரலில் கலோரிகள் மூலம் 73 சதவீதம் புரோட்டீன் உள்ளது. அதுவும் 100 கிராம் சிக்கன் ஈரலில் 116 கலோரிகள் உள்ளன. இவற்றில் 85 புரோட்டீனில் இருந்து நேரடியாக வருகின்றன. எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்க நினைப்பவர்கள் சிக்கன் ஈரலையும் தங்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
4. பி வைட்டமின்கள் அதிகம்
பி வைட்டன்களானது உடல் செல்களின் முறையான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இவை தான் உணவுகளை ஆற்றலாக மாற்ற உதவுகின்றன, புதிய இரத்த செல்களை உருவாக்கவும, சரும செல்கள், மூளை செல்கள் மற்றும் பிற உடல் திசுக்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகின்றன. இப்படிப்பட்ட பி வைட்டமின்கள் சிக்கன் ஈரலில் அதிகம் உள்ளன.
5. ஆரோக்கியமான இரத்தம்
சிக்கன் ஈரல் உடலின் ஆரோக்கியமான மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதில் ஹீம் இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் கலந்திருப்பதால், இரத்த சோகை அல்லது பிற இரத்த சிவப்பணு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற சிறப்பான உணவுப் பொருள். சிக்கன் ஈரலை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் வேறு எவ்விதமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.
6. வைட்டமின் ஏ அதிகம்
வைட்டமின் ஏ பார்வைக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்திலும், இனப்பெருக்க மண்டலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான சத்தாகும். மேலும் வைட்டமின் ஏ இதயம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புக்கள் சரியாக செயல்பட உதவுகிறது. இப்படிப்பட்ட வைட்டமின் ஏ சிக்கன் ஈரலில் அதிகமான அளவில் நிறைந்துள்ளன. சிக்கனை ஈரலை வாரந்தோறும் உட்கொண்டு வந்தால் சருமம், நகம், தலைமுடி, கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.
7. உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும்
விலங்குகளின் உறுப்பு இறைச்சியை உட்கொள்வதால் கிடைக்கும் சுவாரஸ்யமான நன்மைகளுள் ஒன்று, நமது உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்களின் உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சிக்கன் ஈரலை சாப்பிடுங்கள்.
8. செலினியம் அதிகம்
செலினியம் பல்வேறு நொதிகள் மற்றும் புரோட்டீன்களின் இன்றியமையாத அங்கமாகும். இதை செலினோபுரோட்டீன்கள் என்றும் அழைப்பர். இது டிஎன்ஏவை உருவாக்கவும், செல்கள் சேதம் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் இந்த வகை புரோட்டீன்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்தவும் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் வளர்சிதை மாற்றத்திலும் ஈடுபடுகின்றன. இந்த செலினியம் உடலில் குறைவாக இருந்தால், நோய்த்தொற்றுகள் விரைவில் தொற்றக்கூடும். எனவே செலினியம் அளவை அதிகரிக்க விரும்பினால் சிக்கன் ஈரலை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications