Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த 5 மாத்திரைகள் இதயத்தை அமைதியாக சேதப்படுத்தி அழிக்குமாம் - எச்சரிக்கும் இதய நிபுணர்!
Medicines That Can Damage Heart: மருந்து மாத்திரைகளானது நமது உடலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும். அதில் சில மருந்துகள் உடலில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனையை சரிசெய்ய உதவும் அதே வேளையில் மற்றொரு பிரச்சனையை வரவழைக்கவும் செய்யும் என்பது தெரியுமா?
அதுவும் தற்போது மக்கள் பலர் தாங்கள் தினசரி சந்திக்கும் தலைவலி, சளி, இருமல் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமலேயே சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இப்படி அளவு, கட்டுப்பாடு என்று எதுவும் தெரியாமல், ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தாங்களாகவே சுயமாக மருந்துகளை எடுத்து வந்தால், அது நம்மை அறியாமலேயே உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக இதயத்தில் அமைதியாக சேதத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

அதுவும் சமீப காலமாக இதய நோயால் நிறைய பேர் இறந்து வருகின்றனர். இந்நிலையில் இதய ஆரோக்கியத்தின் மீது ஒவ்வொருவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் இருதயநோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரனோவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மக்களால் பரவலாக பயன்படுத்தப்படும் டாப் 5 மருந்துகள் குறித்து கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "ஒரு இருதயநோய் நிபுணராக, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் உங்கள் இதயத்தை எவ்வாறு அமைதியாக சேதப்படுத்தும் என்பதை நான் காண்கிறேன்." என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு இதயத்தை மெதுவாக சேதப்படுத்தும் 5 மருந்துகளைப் பற்றியும் கூறியுள்ளார். அந்த மருந்துகளாவன:
1. NSAIDகள் (எ.கா., இப்யூபுரூஃபன், நாப்ராக்ஸன்)
தலைவலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு இப்யூபுரூஃபன், நாப்ராக்ஸன் போன்ற மாத்திரைகள் சிறப்பான நிவாரணத்தை அளிக்கலாம். ஆனால் இந்த வகை மாத்திரைகளை தொடர்ந்து அல்லது அதிகமாக எடுக்கும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், உடலில் திரவங்களை தேங்க வைக்கலாம். இன்னும் சில சமயங்களல் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கலாம். எனவே இந்த வகை மாத்திரைகளை எடுக்கும் முன் மருத்துவரிடம் அவசியம் கேட்க வேண்டும்.
2. ஹீமோதெரபி மருந்துகள் (எ.கா., டாக்ஸோரூபிகின், டிராஸ்டுஜுமாப்)
புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் ஒரு வகையான சிகிச்சை தான் ஹீமோதெரபி. இந்த ஹீமோதெரபியின் போது பயன்படுத்தப்படும் சில மருந்துகள் இதயத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் டாக்ஸோரூபிகின், டிராஸ்டுஜுமாப் போன்ற ஹீமோதெரபி மருந்துகளை தொடர்ந்து எடுக்கும் போது, அது இதய தசைகளை பலவீனப்படுத்தி, இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் இந்த மருந்துகளை எடுப்பவர்கள் சிகிச்சையின் போதும், அதற்குப் பிறகும் வழக்கமான இதய கண்காணிப்புக்கு உட்படுகிறார்கள்.
3. ஸ்டிமுலண்ட்ஸ் (எ.கா., ஆம்பெடமைன்கள், ADHD மருந்துகள்)
ADHD மற்றும் நார்கோலெப்சிக்கு பரிந்துரைக்கப்படும் ஆம்பெடமைன்கள் போன்ற மருந்துகள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். சில சமயங்களில் இவை அரித்மியா அல்லது மாரடைப்பைத் தூண்டக்கூடும். முக்கியமாக ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதிய இதய ஆபத்து உள்ளவர்கள் இந்த வகை மருந்துகளை எடுப்பது மிகவும் ஆபத்தானது.
4. நீரிழிவு மருந்துகள் (எ.கா. ரோசிகிளிட்டசோன்)
சில வகையான பழைய சர்க்கரை நோய்க்கான மருந்துகள் இதய செயலிழப்பின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வகை மருந்துகள் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவினாலும், இதய ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே சர்க்கரை நோய்க்கு இப்படியான பழைய மருந்தை எடுப்பதை விடுத்து, தற்போது பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான சர்க்கரை நோய் மருந்தை கேட்டு வாங்கி பயன்படுத்துங்கள்.
5. சூடோஎஃபெட்ரின்
பெரும்பாலான சளி மற்றும் காய்ச்சல் மருந்துகளில் சூடோஎஃபெட்ரின் காணப்படுகிறது. இந்த சூடோஎஃபெட்ரினை அதிகமாக எடுக்கும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் அரித்மியாவை ஏற்படுத்துகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற இதய நோயை கண்டறிந்தவர்கள், இந்த வகை மருந்தை உட்கொள்ளும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













