Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட போகிறது என்றால் இந்த 5 அறிகுறிகள் ஒரு மாதத்துக்கு முன்பே தெரியுமாம்.. உஷாரா இருங்க..
Cardiac Arrest Symptoms In Tamil: கார்டியாக் அரெஸ்ட் என்றதும் பலரும் இதை மாரடைப்பு என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மையில் கார்டியாக் அரெஸ்ட் என்பது வேறு, மாரடைப்பு என்பது வேறு. இவ்விரண்டுமே வேறுபட்டவை. மாரடைப்பு என்பது இதயக் குழாய்களில் எப்போது இரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்போது ஏற்படும்.
கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயத்தின் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்படும் போது ஏற்படும். இதில் மாரடைப்பை விட கார்டியாக் அரெஸ்ட் தான் நிறைய பேரின் உயிரைப் பறிக்கும் அளவில் மோசமானது. கார்டியாக் அரெஸ்ட் பிரச்சனைக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், உயிரையே இழக்க நேரிடும்.

இந்த கார்டியாக் அரெஸ்ட் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே இதன் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம். சொல்லப்போனால் ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அபாயம் இருந்தால், அந்நபருக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ஒருசில அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்த அறிகுறிகளை தெரிந்து கொண்டால், மருத்துவ உதவியை முன்கூட்டியே பெறலாம். இப்போது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படப் போகிறது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
கார்டியாக் அரெஸ்ட்டின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று தான் மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம். அதுவும் இந்த அறிகுறிகளை ஒருவர் திடீரென்று சில வாரங்களாக அனுபவித்து வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சாதாரண உடல் சோர்வு என்றால் நன்கு தூங்கி போதுமான ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். ஆனால் இதய பிரச்சனை இருந்தால், எவ்வளவு ஓய்வு எடுத்தாலும், உடல் சோர்வு நீங்காமல் இருக்கும் மற்றும் உடல் பலவீனமாக இருப்பது போன்று உணரக்கூடும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
மூச்சுத்திணறல்
சிறு வேலைகளை செய்தாலோ அல்லது ஓய்வில் இருக்கும் போதோ மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அது இதயத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதன் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இப்படி மூச்சுத்திணறலுடன் நெஞ்சு பகுதியில் லேசான வலி அல்லது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்மல் மருத்துவரை அணுக வேண்டும்.
நெஞ்சு பகுதியில் அசௌகரியம்
நெஞ்சு பகுதியில் சந்திக்கும் அசௌகரியங்கள் இதய நோயுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. அதனால் தான் இதயத்தில் பிரச்சனை இருந்தால், எப்போதும் நெஞ்சு பகுதியில் அழுத்தம், இறுக்கம் போன்ற உணர்வை சந்திக்க நேரிடுகிறது. அதோடு இது அப்படியே கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. அதுவும் ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படப் போகிறது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நெஞ்சு பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
ஒழுங்கற்ற இதயத்துடிப்பை அரித்மியா என்று அழைப்பர். இது கார்டியாக் அரெஸ்ட்டின் மற்றொரு அறிகுறியாகும். அதுவும் சில வாரங்களாக நீங்கள் உங்களின் இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருப்பதை கவனித்தால், அதை அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். ஏனெனில் இது இதயம் சரியாக இயங்கவில்லை என்பதன் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
கால் வீக்கம்
ஒருவரது கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டால், அது நல்லதல்ல. கால் வீக்கம் திரவங்களின் தேக்கத்தால் ஏற்பட்டாலும், இதயம் சரியாக இயங்காமல் இருந்தால் தான் இப்படி திரவங்கள் தேங்கும். எனவே நீங்கள் அடிக்கடி கால் வீக்கத்தை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை சந்தித்து, காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications