Latest Updates
-
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்..
தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீரைக் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Cardamom Water Benefits In Tamil: தினசரி சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொதுவான பொருள் தான் ஏலக்காய். இந்த ஏலக்காய் நல்ல நறுமணமிக்க மசாலா பொருள் மட்டுமின்,ற அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
இதன் மருத்துவ குணத்தால் நாட்டு வைத்தியம் மற்றும் ஆயுர்வேத வைத்தியம் போன்றவற்றில், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலினுள் ஏற்பட்டுள்ள வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதோடு ஏலுக்காயில் இருக்கும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளால் வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இப்படிப்பட்ட ஏலக்காயை வெறுமனே சமையலில் சேர்ப்பதைத் தவிர, அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ந்து 30 நாட்கள் குடிப்பதனால் உடலில் பலவிதமான நல்ல மாற்றங்களைக் காணலாம். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
1. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
ஏலக்காயில் உள்ள கலவைகள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் ஏலக்காய் நீரைக் குடித்து வந்தால், அது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் மற்றும் உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவும். எனவே சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் ஏலக்காய் நீரை குடித்து வாருங்கள்.
2. கொலஸ்ட்ரால் குறையும்
ஏலக்காய் நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். ஏனெனில் இந்த நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். எனவே இதைக் குடிக்கும் போது கொலஸ்ட்ரால் அளவு குறையும். முக்கியமாக ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்க உதவி புரியும்.
3. வயிற்றுப் புண் தடுக்கப்படும்
பல நூற்றாண்டுகளாக செரிமான பிரச்சனைகளுக்கு முதலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் ஏலக்காய். ஆய்விலும் ஏலக்காய் வயிற்றுப் புண்களை குணப்படுத்த உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதுவும் எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏலக்காய் நீரை கொடுத்து வந்ததில் எலியின் வயிற்றில் உள்ள புண்ணின் அளவு கணிசமாக குறைந்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும், வயிற்றுப்புண்களுக்கு இந்நீரை முழுமையாக நம்பி எடுப்பதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.
4. உயர் இரத்த அழுத்தம் குறையும்
ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றலை இயற்கையாகவே கொண்டுள்ளது. அதுவும் ஏலக்காய் நீரைக் குடித்து வந்தால், அது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் உப்பை சிறுநீரின் வழியே வெளியேற்ற ஊக்குவிக்கும். இந்த செயல்முறையால், இரத்தத்தின் அடர்த்தி குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் விளைவாக இரத்த அழுத்தமும் குறையும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தான்.
5. புற்றுநோயைத் தடுக்கும்
ஏலக்காய் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஏலக்காய் உடலில் உள்ள நொதிகளை ஊக்குவித்து, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மற்றும் புற்றுநோய் கட்டிகளை குறி வைத்து தாக்குவது தெரிய வந்துள்ளது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், ஏலக்காய் நீரை அடிக்கடி குடித்து வாருங்கள்.
ஏலக்காய் நீரைத் தயாரிப்பது எப்படி?
* ஏலக்காய் நீர் தயாரிப்பதற்கு முதல் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்க வேண்டும்.
* பின் அந்த நீரில் 1-2 ஏலக்காயை தட்டிப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி, வேண்டுமானால் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
* இல்லாவிட்டால் 3-4 ஏலக்காய் விதைகளை எடுத்து, ஒரு கப் நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
