Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
எச்சரிக்கை! 'கக்கா' வந்தா அடக்காதீங்க.. இல்ல உங்களுக்கு சீக்கிரம் மாரடைப்பு வந்துடுமாம்..
Heart Attack: தற்போதைய பிஸியான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளும் நமது தினசரி வழக்கங்களை கூட சரியாக மேற்கொள்ள முடியாமல் உள்ளோம். அதுவும் காலையில் எழுந்ததும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றினால் தான், உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் தற்போதைய அவசர உலகில் மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல், காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக குளித்துவிட்டு, இயற்கை அழைப்பைக் கூட கட்டுப்படுத்திக் கொண்டு வேலைக்கு புறப்பட்டு விடுவோம்.
சரி வீட்டில் தான் நேரம் கிடைக்கவில்லை என்றால், அலுவலகம் செல்லும் சில பெண்கள் சுகாதார காரணங்களுக்காக அலுவலகத்தில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த விரும்பாமல், ஒருவேளை மலம் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திவிடுகின்றனர். இப்படி ஒருவர் தனது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றாமல், கட்டுப்படுத்தினால், பின் அது ஆரோக்கியத்தையே சீரழித்துவிடுவதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

மலத்தை கட்டுப்படுத்துவது எப்படி ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது?
நிறைய பேருக்கு வெளியிடங்களை விட வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க பிடிக்கும். இதனால் வீட்டிற்கு வந்ததும், தங்களின் வயிற்றை சுத்தம் செய்ய, மலம் கழிக்க தோன்றவிட்டாலும், மலத்தை வெளியேற்ற முயற்சிப்பர். ஆனால் இப்படி இயற்கை அழைப்பை புறக்கணித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் குடலை காலி செய்ய வேண்டுமென்று மலத்தை வெளியேற்ற முயற்சித்தால், குடல் முழுமையாக சுத்தம் ஆகாமல் இருப்பதோடு, குடல் சுத்தமான திருப்தியும் கிடைக்காது.
மேலும் ஒருவர் இப்படி இயற்கை அழைப்பை புறக்கணித்து, மலத்தை வெளியேற்றாமல் கட்டுப்படுத்தும் போது, அதன் விளைவாக வேறு பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். அதில் வயிற்று உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர மலத்தைக் கட்டுப்படுத்தும் போது, அது மலக்குடல் விரிசலுக்கு வழிவகுக்கும்.
மலக்குடல் விரிசல் என்றால் என்ன?
பெருங்குடலின் கீழ் முனைப்பகுதி தான் மலக்குடல்/ஆசனவாய். இந்த மலக்குடலில் இறுக்கமான மலம் வெளியேறும் போது, அந்த குடலில் விரிசல் ஏற்படும். இதையே மலக்குடல் விரிசல் என்பர். இந்த மலக்குடல் விரிசல் கடுமையான வலியுடன் மிகுந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
எப்போது ஒருவர் இயற்கை அழைப்பின் போது மலத்தை வெளியேற்றாமல், தானாக முயற்சித்து பெருங்குடலில் உள்ள தசைகளை பயன்படுத்தி மலத்தை வெளியேற்றுகிறாரோ, அப்போது மலக்குடலில் உள்ள உணர்வை இழக்க நேரிடும். இதன் விளைவாக அது மலம் அடங்காமைக்கு வழிவகுக்கும். அதாவது எந்த சூழ்நிலையிலும் மலத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
மேலும் இயற்கை அழைப்பின் போது மலத்தை வெளியேற்றாமல் இருந்தால், அது மலச்சிக்கலை ஏற்படுத்தி, இந்த இறுக்கமான மலத்தை வெளியேற்ற அதிகமாக ஒருவர் முக்கும் போது, அதன் விளைவாக பைல்ஸ் என்னும் மூல நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் நாள்பட்ட மலச்சிக்கல் வயதானவர்களில் இரத்த அழுத்தத்தை உயர்த்தி, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆய்வு ஒன்றில் மூல நோயாளிகளுக்கு குறைந்தது 27 சதவீத இதயநோயின் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் மூல நோயாளிகளிடையே இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் அதிகம் உள்ளன. எனவே மலம் கழிக்கும் விஷயத்தை எவரும் அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாமல், ஒவ்வொரு நாளும் இயற்கை அழைப்பின் போது தவறாமல் மலம் கழிக்க வேண்டும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ்...
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஒருசில சின்ன சின்ன விஷயங்களை மனதில் கொண்டு பின்பற்றி வந்தாலே போதுமானது. அவை பின்வருமாறு:
* நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வகையான உணவுகளை மலத்தை மென்மையாக வெளியேற்ற உதவும்.
* பால் பொருட்கள், பிரட், பாஸ்தா போன்றவற்றை அளவாக உட்கொள்ளவும்.
* முக்கியமாக தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரை தவறாமல் அருந்த வேண்டும்.
* ஒரு நாளைக்கு பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
* குறிப்பாக உடற்பயிற்சியில் தவறாமல் சிறிது நேரம் ஈடுபட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications