Latest Updates
-
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? இந்த மாவட்டம்தானா? -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உங்க தசைகளை இரும்பு மாதிரி வலிமையாக மாத்த இறைச்சி மட்டுமில்ல இந்த காய்கறிகளையும் சாப்பிடலாமாம்...!
வலிமையான தசைகளுடன் அழகான தோற்றத்தை பெற வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவு. தசைகளை வலிமையாக்க உடற்பயிற்சி செய்வது, பால் பொருட்களை எடுத்து கொள்வது, இறைச்சி மற்றும் செயற்கை ப்ரோட்டீன் பவுடர்களை எடுத்து கொள்வது போன்றவற்றை செய்கிறார்கள்.
இது மட்டும் போதுமா என்றால், போதாதுதான். அதனுடன் சேர்த்து சரிவிகித உணவுடன் சரியான ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் நாம் உண்ணும் காய்கறிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு நம் தசைகளை வலிமையாக்க தேவைப்படும் புரதம், மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை பார்க்கலாம்.

ப்ரோக்கோலி
இது அதிக ஊட்டச்சத்து மற்றும் அதிக புரதம் கொண்ட ஒரு அற்புறமான காய்கறி ஆகும். இதில் மிக அதிக அளவு நார்ச்சத்து, வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட் உள்ளது. இது தசைகளை சரிசெய்வதற்கும், சோர்விலிருந்து மீட்டெடுக்க உதவும் கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோக்கோலியை வேகவைத்தோ, வறுத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம்.
கீரைகள்
கீரை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த இலை வகை பச்சை காய்கறியாகும். இதில் அதிக அளவில் இருக்கும் சத்தின் காரணமாக சூப்பர்ஃபுட் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் கணிசமான அளவு புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. சரியான தசை செயல்பாடு மற்றும் தசை சோர்வை சரி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. கீரையை தினசரி உணவில் சாலடு, ஸ்மூத்தி அல்லது உங்களுக்கு பிடித்தார் போல் எளிதாக சமைத்து சாப்பிடலாம்.
பச்சை பட்டாணி
புதிய பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து, மக்னீசியம் ஆகியவற்றுடன் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. தசையை வலிமையடைய செய்யும் உணவுகளில் இதுவும் ஒன்று. இதை உணவில் வேகவைத்தோ, சூப்பாகவோ, அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த வடிவத்திலும் சமைத்து சாப்பிடலாம் அல்லது அதை துணை உணவாகவும் எடுத்து கொள்ளலாம்.
காளான்
காளானில் நல்ல புரதச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இவை ஆன்டிஆக்ஸிடன்டஸ், நார்ச்சத்து மற்றும் சில அத்தியாவசிய தாதுக்களை கொண்டுள்ளது. இது தசை வளர்ச்சி மற்றும் வலிகளை குறைக்க உதவுகிறது. இதை வதக்கியோ அல்லது வறுத்தோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எடமேம்
இளம் சோயாபீன்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பு அறுவடை செய்யப்படுவது எடமேம் எனப்படும். அவை புரதத்தின் அற்புதமான ஆதாரமாக விளங்குகின்றன. மேலும் இதில் ஃபோலேட், வைட்டமின் கே, நார்ச்சத்து போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது தசை வளர்ச்சி மற்றும் மீட்சியை அதிகரிக்கிறது. இதை தின்பண்டங்களாகவோ அல்லது ஸ்டிர் ஃப்ரை செய்தோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காலே
இது புரதங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பச்சை இலைக் காய்கறியாகும். இது வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றால் நிரம்பி இருக்கிறது. இது தசை ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை சாலடுகள், ஸ்மூத்திகள் அல்லது சைட் டிஷ் என விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம்.
பீர்க்கங்காய்
சீமை சுரைக்காய் என்றும் அழைக்கப்படும் பீர்க்கங்காய் சமச்சீரான உணவில் சேர்க்கப்படும் போது வலிமையான தசைகளை உருவாக்க உதவுகிறது. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பை குறைவாக கொண்டுள்ளதோடு அதிக அளவில் நல்ல புரதத்தையும் கொண்டிருக்கிறது. இது தசை வளர்ச்சிக்கு பயன்படுவதோடு, மெலிந்த உடலமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

