Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க பலவீனமான இதயத்தை வலிமையாக மாற்றணுமா? இந்த பயிற்சிகளில் ஒன்றை தினமும் செய்யுங்க போதும்...!
உங்கள் இதயத்தை வலுப்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் இதயத்தையும் வலுப்படுத்த சிறந்த வழி உடற்பயிற்சி. உண்மையில், நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும்.
உங்களுக்கு ஏற்கனவே இதய நோய் இருந்தால், அல்லது உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட்டால், நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்யுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் இதயத்தை வலுப்படுத்த உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடைபயிற்சி
இது மிகவும் எளிதான பயிற்சியாகத் தோன்றலாம். ஆனால் நடைபயிற்சி, குறிப்பாக வேகமான நடைபயிற்சி, உங்கள் இதயத்தை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். வேகமாக நடப்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் மற்ற உடற்பயிற்சிகளை விட மூட்டுகளுக்கு எளிதாக இருக்கும். நீங்கள் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் நல்ல வசதியான காலணிகள் மட்டுமே. ஒரு நாளைக்கு குறைந்தது 60 நிமிடங்கள் நடக்கலாம்.
எடைப்பயிற்சி
உங்கள் உடலில் உள்ள மற்ற தசைகளை வலிமைப்படுத்துவது உங்கள் இதயத்தை வலுப்படுத்த உதவும். எடை பயிற்சி உங்களுக்கு தசை வலிமையை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவும். எடைதூக்கும் பயிற்சியை செய்ய நீங்கள் ஜிம்மிற்கு செல்லலாம் என்றாலும், உங்கள் சொந்த உடல் எடையை தூக்கும் பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். புஷ்-அப்கள், ஸ்குவாட்ஸ் அல்லது புல்-அப்கள் போன்றவை தசைகளை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கவும் உதவுகின்றன.
நீச்சல்
நீச்சல் புத்துணர்ச்சியளிக்கும் பயிற்சி மட்டுமல்ல. நீச்சல் பயிற்சியை எடுத்துக்கொள்வது உங்கள் உடலை மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் பலப்படுத்தும் முழு உடல் பயிற்சியாகும். மற்ற வகை உடற்பயிற்சிகளைப் போலல்லாமல், நீச்சல் உங்கள் மூட்டுகளுக்கு மிகவும் எளிதானது மற்றும் அதிக வலி இல்லாமல் உங்கள் உடலை வலுப்படுத்த அனுமதிக்கிறது.
யோகா
யோகா கடுமையான உடற்பயிற்சி போல தெரியவில்லை என்றாலும் யோகா உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. யோகா செய்வது உங்கள் தசைகளை வலுப்படுத்தவும், சரியான அமைப்பிற்குக் கொண்டு வரவும் உதவும். சில வகையான யோகாக்கள் உண்மையில் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அமைதியை வழங்கும்.
சைக்கிள் ஓட்டுதல்
சைக்கிள் ஓட்டுவது நீங்கள் எதிர்பார்ப்பதை விட உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கலாம். சைக்கிள் ஓட்டுதல் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் கால்களில் உங்கள் பெரிய தசைகளைப் பயன்படுத்துகிறது, இது உங்கள் இதயத் துடிப்பை உயர்த்த உதவுகிறது. போனஸ் நன்மையாக சைக்கிள் ஓட்டுதல் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது.
ஸ்கிப்பிங்
ஸ்கிப்பிங் ஒரு எளிய மற்றும் செலவே இல்லாத உடற்பயிற்சியாகும். இது உங்கள் இதயத் துடிப்பை நிமிடத்திற்கு 150-180 துடிக்க வைக்கிறது. இது இரத்தம் அதிக அழுத்தத்துடன் பாய்வதை உறுதி செய்யும், எனவே உடலை முழுமையாக சுத்தம் செய்து, உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மாற்றப்படும் திறனை அதிகரிக்கும். இந்த பயிற்சிக்கு, உங்களுக்கு பெரிய இடம் தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் செய்வது போதுமானது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


