Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த ஒரு இலை போதும்.. டெங்கு, டைபாய்டுக்கு டாடா சொல்லிடலாம்.. அருமருந்து... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
பப்பாளி இலையில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களை ஜீரணிக்கக்கூடியது. இது மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது. தசை வலி, மூட்டு வலி உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற வலிகளுக்கு பப்பாளி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய இந்த பப்பாளி இலைகள் மழைக்காலத்தில் வரும் டெங்கு காய்ச்சல் , டைபாய்டு காய்ச்சலை குணப்படுத்தும் என்றால் நம்புவீர்களா? ஆம் இந்த பப்பாளி இலைகளை மழைக்காலத்தில் தவறாமல் ஜூஸாக அல்லது கசாயமாக அருந்தி வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. பப்பாளியின் ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும்.. அதுமட்டுமின்றி பப்பாளி இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி இலைச்சாறு பண்டைய காலங்களிலிருந்து இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலை சாறு அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ளது.
2. இதில் பாப்பைன் மற்றும் சைமோபாபைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இது உங்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி இலையில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இ, கே, பி ஆகியவையும் உள்ளன.
3. பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளை குணப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. டெங்குவின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் வெடிப்பு மற்றும் வாந்தி. சில கடுமையான சந்தர்ப்பங்களில், இது குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையையும் ஏற்படுத்தும். இது இரத்தப்போக்கு அபயாயத்தை அதிகரிக்கும். சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் அது உயிரிழக்க வைத்து விடும். டெங்கு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பப்பாளி இலைச் சாறு இரத்தத்தில் பிளேட்லெட் அளவை கணிசமாக அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது..
4. டெங்கு, டைபாய்டு போன்ற நோய்களால் உடல் வலி மற்றும் காய்ச்சலால் விறைப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை நீக்குவதில் பப்பாளி இலைகள் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி இலையில் பல நன்மைகள் இருந்தாலும், இது டெங்கு, மலேரியா, டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்தாகும். பப்பாளி இலைச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூருகின்றனர்..
5. பப்பாளி இலையில் டெங்கு, புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, நரம்புத் தடுப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்றார். பப்பாளி இலைகளை வேகவைத்து சாப்பிட்டால் மலேரியா, டெங்கு காய்ச்சல் குணமாகும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கை, வெள்ளை இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. பப்பாளி இலைகளில் சபோனின்கள், பினாலிக் கலவைகள், அமினோ அமிலங்கள், லிப்பிடுகள், கிளைகோசைடுகள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், கார்போஹைட்ரேட்கள், நொதிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
ஒரு நோயாளி 30 மில்லி சாற்றை அரை கப் வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் சுவை கசப்பாக இருப்பதால் சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications