Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
வேக வைத்த வேர்க்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா?
Boiled Groundnut Benefits In Tamil: நீங்கள் வேர்க்கடலைப் பிரியரா? அடிக்கடி வேர்க்கடலை வாங்கி சாப்பிடுவீர்களா? நட்ஸ்களிலேயே வேர்க்கடலை ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொண்டது. இந்த வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேர்க்கடலை சாப்பிடும் பலரது மனதில் இருக்கும் ஒரு கேள்வி, இந்த வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவது நல்லதா அல்லது வறுத்து சாப்பிடுவது நல்லதா என்பதாகவே இருக்கும்.
வறுத்த வேர்க்கடலை சாப்பிட நன்றாக இருக்கும். இருப்பினும், வேர்க்கடலையில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற நினைத்தால், அதற்கு அவற்றை ஆவியில் வேக வைத்து சாப்பிட வேண்டும்.

அதுவும் இப்படி வேக வைத்த வேர்க்கடலையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள பல உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
சத்துக்கள் அதிகம்
வேக வைத்த வேர்க்கடலையில் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இதய ஆரோக்கியம்
வேக வைத்து வேர்க்கடலையை சாப்பிடும் போது, அதில் உள்ள மோனாஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்ற இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் கிடைக்கும். இந்த கொழுப்புக்களை ஒருவர் மிதமான அளவில் எடுத்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்
வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ரெஸ்வெராட்ரால் வளமான அளவில் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
எடை இழப்புக்கு உதவும்
பலரும் வேர்க்கடலை உடல் பருமனை அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அதுவும் மிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் பசியுணர்வு குறைவதோடு, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களால் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். எனவே டயட்டில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.
இரத்த சர்க்கரை சீராகும்
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடச் செய்து, இரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோயின் அபாயத்தில் இருப்பவர்களுக்கு வேக வைத்த வேர்க்கடலை ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.
மூளைக்கு நல்லது
வேர்க்கடலையில் ஃபோலேட் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். அதுவும் இச்சத்துக்களானது அறிவாற்றல் செயல்பாட்டிலும், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
குறிப்பு
வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்த நட்ஸ்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். அதோடு, இந்த நட்ஸை நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினசரி உணவில் சேர்க்கும் முன், மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பின் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Image Courtesy: Butter Be Ready
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications