Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Aloe Vera Juice Benefits In Tamil: பெரும்பாலான இந்திய வீடுகளில் அழகுக்காகவும், திருஷ்டிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்த கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
எனவே கற்றாழையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். முக்கியமாக இந்த ஜூஸ் செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும் மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும்.

அதுவும் கற்றாழை ஜூஸை வெறுமனே குடிப்பதை விட, வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் கற்றாழையை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். இப்போது காலையில் எழுந்ததும் லெமன் கலந்த கற்றாழை ஜூஸைக் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. செரிமானம் மேம்படும்
கற்றாழையில் உள்ள கலவைகள் செரிமான பிரச்சனைகள் தடுக்கும், அழற்சியைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், இது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். இந்த ஜூஸில் சேர்க்கப்படும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி பித்த நீர் உற்பத்தியைத் தூண்டி செரிமானத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான நீரில் இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அது செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.
2. அழற்சி எதிர்ப்பு பண்புகள்
கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இது உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் அல்லது அழற்சிமிக்க குடல் நோய்களில் இருந்து விடுவிக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது.
3. நீரேற்றம்
லெமன் கலந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, உடல் வறண்டு போகாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். உடல் நீரேற்றத்துடன் இருந்தால் தான், உடலுறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
4. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன.
5. உடல் சுத்தமாகும்
இந்த கற்றாழை ஜூஸானது கல்லீரலை சுத்தப்படுத்தி உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். அதுவும் இந்த ஜூஸில் உள்ள எலுமிச்சை ஒரு நேச்சுரல் டையூரிக்காக செயல்பட்டு, உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
6. ஆற்றல் மேம்படும்
நீங்கள் நிறைய சோம்பேறித்தனமாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் இந்த கற்றாழை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் சோர்வு நீங்கி, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
7. எடை இழப்பு
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், இந்த கற்றாழை ஜூஸ் நல்ல பலனைத் தரும். ஏனெனில் கற்றாழை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவும். மேலும் இதில் உள்ள எலுமிச்சை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், பசியைத் தடுக்கவும் உதவுகிறது.
8. ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி
எலுமிச்சை கலந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்ஸிடன்ட்டுகள், சரும அமைப்பையும், தோற்றத்தையும் மேம்படுத்த உதவும். அதுவும் கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும், எலுமிச்சை முகப்பருவை எதிர்த்து போராடவும் உதவுகிறது. மேலும் இந்த ஜூஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், தலைமுடி உதிர்வதைத் தடுத்து, ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications