Latest Updates
-
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்
வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக் காலங்களில் சாப்பிட கூடாதவை..!
ஆஸ்துமா உலகில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். ஒருவருக்கு ஆஸ்துமா இருந்தால், அவர்களது சுவாசக் கருவியின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், நமது வாழ்க்கை முறை, உணவுகள் மற்றும் பிற காரணிகளால் கட்டுப்படுத்த முடியும்..
அதிலும் மழைக் காலம், குளிர் காலத்தில் ஆஸ்துமா, வீசிங் தொல்லை அதிகமாக இருக்கும். தாய்மார்களும் கர்ப்பிணிகள்கூட இதனால் அவதிப்படலாம். உணவுகள் மூலமாகவே வீசிங், ஆஸ்துமாவை விரட்டுவது எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க..

சில உணவுகள் மழைக்காலங்களில் ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர்ஃபுட்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. இந்தக் கட்டுரையில், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், இந்த மழைக்காலத்தில் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர்ஃபுட்கள் என்னென்ன? சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? என்ற லிஸ்டை தெரிந்துக் கொள்ளலாம்..
ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக் காலங்களில் சாப்பிட கூடாதவை
நீர்க்காய்கறிகள் அனைத்தும் தர்பூசணி, குளிர்பானம், செயற்கை பழச்சாறுகள் மில்க் ஸ்வீட், சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகள் எதுவும் வேண்டாம். சாக்லெட் கண்டிப்பாக சாப்பிடாதீர்கள். குழந்தைகளுக்கு டார்க் சாக்லெட்கள் இருந்தால் கொடுக்கலாம்..
ஆஸ்துமாவால் அவதிப்படும் தாய், குழந்தைகள் சாப்பிட கூடாதவை
புளி, உருளைக்கிழங்கு, மூக்கடலை (கொண்டைக்கடலை) துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி குளிர்பானங்கள் கமலா, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை மருந்து எடுக்கும் காலத்தில் தவிர்க்கலாம். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவு உணவுகளை தவிர்க்கவும். இது வாயுவைத் தரும். மூட்டுவலி மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வீசிங், ஆஸ்துமா இருப்பவர்களுக்கான சத்தான டயட் லிஸ்ட்
சிவப்பரிசி அவல் உணவுகள் - உப்புமா, கஞ்சி, அளவுடன் இனிப்பு சேர்த்த கீர் முருங்கை கீரை பொரியல் மற்றும் சாம்பார் புழுங்கல் அரிசி கஞ்சி மற்றும் துவையல் மிளகு ரசம், திப்பிலி ரசம், தூதுவளை ரசம், பைன் ஆப்பிள் ரசம் ஆகியவை சாப்பிடலாம். முசுமுசுக்கை இலைகள் சேர்த்த அடை சாப்பிடுவது நல்லது.
வீசிங், ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஏற்ற கஷாயம்
வீசிங்கால் குழந்தைகளோ பெரியவர்களோ அவதிப்பட்டால், அவர்களுக்கு கற்பூரவல்லி, கரிசலாங்கண்ணி, துளசி ஆகியவைக் கலந்து கஷாயம் செய்து தேன் அல்லது கருப்பட்டி கலந்து கொடுக்கலாம்.
ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக் காலங்களில் சாப்பிட வேண்டியவை
மிளகு, திப்பிலி, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, கற்பூரவல்லி, சுக்கு காபி, பூண்டு, இஞ்சி, நெல்லிக்காய், சோளம், தயிர், சமைத்த காய்கறிகள் ஆகிவற்றை மழைக்காலத்தில் சாப்பிடலாம்.. இவை அனைத்திலும் நோயெதிர்ப்பு அமைப்பு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் B6, ஃபோலிக் அமிலம், துத்தநாகம் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களின் இருப்பைப் பெரிதும் சார்ந்துள்ளது. முக்கியமாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. அதனால் நோயெதிர்ப்பு பண்புகள் வலுவாக இருக்கும்..
முடிவில், சில சூப்பர்ஃபுட்கள் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். இது தவிர, பரிந்துரைக்கப்பட்ட எந்த மருந்துகளையும் தவறாமல் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கும் உணவுகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications