Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் என்னென்ன தெரியுமா?
What Not To Do After Eating Food: வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செரிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், எப்போதுமே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னர் ஒருசில செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், அது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.
சரி, அது என்ன செயல்கள் என்று நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது. இங்கு வயிறு நிறைய ஒருவர் உணவை உட்கொண்ட பின்னர் கட்டாயம் செய்யக்கூடாத 5 செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..

1. முதலில் நீங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு முட்டக் குடிக்கக் கூடாது. இதனால் ஜீரண நீர் தீர்ந்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும். அதைப்போல், நீங்கள் சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் அப்போது குடிக்க வேண்டும்.
2. மேலும், சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் செயல்பட மிகவும் சிரமப்படும், அதனால் ஜீரணம் முறையாக நடக்காது. நீங்கள் குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும். வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின் தூங்குவது என்பது கேடு விளைவிக்கும். எப்படியெனில், உணவை உட்கொண்ட உடனேயே தூங்கி எழுவதனால், உண்ட உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், அதனால் வயிறு உப்புசத்தை உணரக்கூடும்.
3. அதைப்போல், சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும். புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உணவுக்குப் பிறகு புகைபிடிப்பது இன்னும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு முழு உணவுக்குப் பிறகு ஒரு சிகரெட் பத்து சிகரெட்டுகளுக்கு சமம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
4. சாப்பிட்ட உடனேயே சிகரெட் புகைப்பது செரிமானத்தில் குறுக்கிடுகிறது மற்றும் பல்வேறு இரைப்பை குடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் இதில் உள்ள நச்சுகள் நாம் உண்ணும் உணவையும் அழித்து விடுகின்றன.
5. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் பழங்களில் உள்ளன. ஆனால், உணவுக்குப் பிறகு இவற்றைச் சாப்பிடுவது நல்லதல்ல. பழங்கள் மற்ற உணவுகளை விட வித்தியாசமாகவும் வேகமாகவும் செரிக்கப்படுகின்றன. உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அவை செரிமானத்திற்கு கடினமாகின்றன.
6. டீ என்பது பலரின் விருப்பமான பானமாகும். இது ஒரு நல்ல புத்துணர்ச்சி மற்றும் நிதானமான உணர்வைத் தருகிறது. ஆனால் சாப்பிட்ட பிறகு டீ குடிப்பதால் உணவில் புரதம் கிடைக்காது. தேநீரில் அமிலங்கள் உள்ளன. அவை உணவு புரதங்களை உறிஞ்சுவதில் தலையிடுகின்றன.
7. இதன் விளைவாக, உடல் பருமன், வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் எழுகின்றன. எனவே முடிந்தவரை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அல்லது உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications