Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
உங்க பல் வெள்ளையாக இருக்கணுமா? இதோ சில வீட்டு குறிப்புகள்.. ட்ரை பண்ணுங்கள்..!
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்காக நாம் தினமும் பல் துலக்குகிறோம். ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை அதிகரிக்க முகத்தின் பொலிவுடன் புன்னகை சேர்க்க வேண்டும். அப்படி நாம் சிரிக்கும்போது நமது பல் ஆகாகவும் வெண்மையாகவும் இருந்தால்தான் உடலும் வாழ்வும் ஆரோக்கியமாக இருக்கும். நமது வாய் பற்களை சுத்தமாக வைத்திருக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும்.
சமீப காலமாக பற்களின் நிறமாற்றம் பிரச்சனை பலரையும் வாட்டுகிறது. சில வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் மருந்துகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். பற்களை ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மாற்ற சந்தையில் பல பொருட்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் விலையும் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு, வீட்டில் கிடைக்கும் பல்வேறு பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையில் பற்களை வெண்மையாக்குவதற்கான டிப்ஸ்கள் உள்ளன.. அது என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலா வாங்க...

மஞ்சள்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே, இது பற்களை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முதலில் சிறிதளவு மஞ்சளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அதன் பிறகு இந்தக் கலவையைக் கொண்டு இரண்டு நிமிடம் பல் துலக்கவும். ஒரு வாரம் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
கரி துண்டுகள்
பச்சை நிறமாக மாறிய பற்களை வெண்மையாக்குவதில் செயல்படுத்தப்பட்ட கரி பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிறிய அளவு செயல்படுத்தப்பட்ட கரியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த கலவையுடன் இரண்டு நிமிடங்கள் பல் துலக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களுக்குப் பிறகு பற்களில் மாற்றத்தைக் காணலாம்.
தேங்காய் எண்ணெயுடன் ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால ஆயுர்வேத நுட்பமாகும். வாயில் இருக்கும் பாக்டீரியா மற்றும் நச்சுக்களை வெளியேற்ற இந்த முறை பின்பற்றப்பட்டது. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உங்கள் வாயில் போட்டு 15-20 நிமிடங்கள் கொப்பளிக்கவும். அதன் பிறகு அதை துப்பவும், பின்னர் உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெயில் பற்களை வெண்மையாக்கும் தன்மை உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த முறை பழங்காலத்தில் பின்பற்றப்பட்டது.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மூலம் கறை படிந்த பற்களை பளபளப்பாக்கலாம். இது சிராய்ப்புப் பொருளாகச் செயல்பட்டு பற்களைச் சுத்தப்படுத்துகிறது. முதலில் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். அதன் பிறகு இந்தக் கலவையைக் கொண்டு பல் துலக்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் துலக்கிய பிறகு, பறகாளி நன்றாக சுத்தம் செய்யவும். ஆனால் இதை தினமும் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறை மட்டும் செய்யுங்கள்.
ஹைட்ரஜன் பெராக்சைடு
ஹைட்ரஜன் பெராக்சைடு பற்களின் நிறத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் ப்ளீச்சிங் தன்மை பற்களை வெண்மையாக்கும். முதலில் சம அளவு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் தண்ணீரைக் கலந்து ஒரு கலவையை உருவாக்கவும். தினமும் வாய் கழுவ பயன்படுத்தவும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறைகளை நீக்கலாம். மேலும், அவை வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும். இது பல் சிதைவை ஏற்படுத்தும் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் அமிலங்களை அழிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications