Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்க வேண்டுமா? அப்ப முருங்கைக்கீரையுடன் இத சேர்த்து சாப்பிடுங்க..
Moringa And Immunity: காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும். மேலும் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் H3N2, டெங்கு போன்ற பல வைரஸ் தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுகளானது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால், எளிதில் தொற்றிக் கொள்ளும்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால், உணவுகள் பெரிதும் உதவி புரியும். குறிப்பாக முருங்கைக்கீரை அதிகம் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவற்றால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும்.

இது தவிர முருங்கைக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கங்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது குடல் ஆரோக்கியம், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
எனவே உங்களின் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால், முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் அந்த முருங்கைக்கீரையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு வலுபெறும். இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்கீரையுடன் எந்த பொருட்களை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
1. மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த பொருள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கம் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலுபெறும். அதுவும் முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் சேர்த்து சூப் தயாரித்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
2. இஞ்சி
ஆயுர்வேதத்தின் படி, இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த இஞ்சியை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். அதற்கு இஞ்சி முருங்கை டீயை தயாரித்து குடிக்கலாம். இந்த டீயைத் தயாரிக்க கொதிக்கும் நீரில், சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு, அத்துடன் முருங்கைக்கீரையையும் சிறிது சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
3. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து சிறப்பாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதற்கு சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்துடன் முருங்கையை சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இதை செய்ய சிறிது முருங்கை கீரை அல்லது பொடியை மிக்சர் ஜார் அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஆரஞ்சு ஜூஸ், வாழைப்பழம், ஆளி அல்லது சியா விதைகளை சேர்த்து நன்கு அரைத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்தால், ஸ்மூத்தி தயார்.
4. பூண்டு
பூண்டில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இப்படிப்பட்ட பூண்டு பற்களை முருங்கைக்கீரையுடன் சேர்த்து எடுக்கும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். அதற்கு முருங்கைக்கீரையைக் கொண்டு பூண்டு பற்களை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இப்படி அடிக்கடி பூண்டு சேர்த்த முருங்கைக்கீரை பொரியலை உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இந்த பாதாமை பொடி செய்து, முருங்கைக்கீரை பொரியலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமும், சக்தியும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
