For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முறிந்த எலும்பையும் வேகமாக இணைத்து வைக்கும் பிரண்டை

பிரண்டை நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய மூலிகையாகவும் உணவுப் பொருளாகவும் இருந்து வருகிறது. அவற்றின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

|

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.

பிரண்டையின் சமஸ்கிருத பெயர், அஸ்திசம்ஹரகா. இதன் பொருள் எலும்புகளை பிணைப்பது என்பதாகும். பிரண்டை சாற்றை தினமும் இரண்டு முறை 20 மிலி பருகுவதால் எலும்பு முறிவிற்கான சிகிச்சை விகிதத்தை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. மேலும் எலும்புத் தாது அடர்த்தி குறைவு, எலும்புத் துளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் எலும்பு வலிமையை மறுசீரமைக்க உதவுகிறது. பிரண்டை தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெளிப்புறம் தடவுவதாலும், மேலே கூறிய எலும்பு வலிமை அதிகரிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cissus Quadrangularis - Health Benefits Of Pirandai

Used in traditional African and Ayurvedic medicine. All parts of the plant are used for medicine.
Desktop Bottom Promotion