Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
லெஹெங்கா வாங்க போறீங்களா? அப்போ இதுலாம் பாத்துட்டு வாங்குங்க.
இந்தியா பல்வேறு மதங்கள் மற்றும் பல பண்டிகைகள் நிறைந்த நாடாகும். ஒவ்வொரு பண்டிகை, திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் பெண்கள் அனைவரும் அணிய பாரம்பரிய உடைகளை தான் தேர்ந்து எடுப்பார்கள்.
இந்தியா பல்வேறு மதங்கள் மற்றும் பல பண்டிகைகள் நிறைந்த நாடாகும். ஒவ்வொரு பண்டிகை, திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் பெண்கள் அனைவரும் அணியப் பாரம்பரிய உடைகளைத் தான் தேர்ந்து எடுப்பார்கள். இப்போது பாரம்பரிய உடைகள் எல்லாம் நவீனக் காலத்திற்கு ஏற்ப மாறிவருகிறது. அதில் ஒன்று தான் லெஹெங்கா. இது நிச்சயமாக எல்லா பெண்களின் மனதிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

திருவிழாக்கள் அல்லது விசேஷ விழாக்களுக்கு நீங்கள் செல்ல போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயமாக லெஹெங்கா மிகப் பொருத்தமாக இருக்கும். உங்கள் தோற்றத்திற்கு அழகினை சேர்க்கவும் மற்றவர்களின் கண்களைக் கவர்வதற்கு நீங்கள் லெஹெங்கா சோலியை அணியலாம். லெஹெங்காவில் பல வகைகள் உள்ளன அவற்றில் மிக டிரெண்டில் உள்ள சில லெஹெங்காக்கள் இங்கே உள்ளன. இதில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்வு செய்து அணிந்து அசத்துங்கள்.

ஜாக்கெட் ஸ்டைல் லெஹெங்கா
இந்த வகை லெஹங்காவில் ஜாக்கெட் மட்டும் மிகவும் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எப்போதும் போல் லெஹெங்கா அணிந்து அதன் மேல் ஒரு நீண்ட வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட் அணிவதே ஜாக்கெட் ஸ்டைல் லெஹெங்கா ஆகும். இதில் ஒரு சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் அல்லது மின்னும் கற்கள் கொண்ட வேலைப்பாடுகள் நிறைந்து இருக்கும். இந்த ஆடை அணியும் போது நீங்கள் வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளிப்பீர்கள்.

சேலை லெஹங்கா
சில பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் லெஹங்கா அணியச் சற்று சங்கடமாக உணருவார்கள். அவர்களுக்காகச் சேலை லெஹங்கா என்ற ஒன்று உள்ளது. இது அணியும்போது சேலை அணிந்தவாறு இருக்கும். இது அணியும் போது சேலையை விடச் சிறந்ததாக இருக்கும். சேலை கட்ட தெரியாத பெண்களும் சேலை கட்ட நேரம் எடுத்துக் கொள்ளும் பெண்களும் இந்த சேலை லெஹங்காவை அணிந்து திருமண விழாக்களில் அசத்தலாம்.

ஷராரா கட் லெஹங்கா
தற்போதைய நவநாகரீக காலத்தில் திருமண விழாக்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இந்த கட் லெஹங்கா விளங்கும். ஷராரா லெஹங்கா இந்திய பேஷன்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது உங்களுக்கு ட்ரெண்ட் ஆன லுக்கை கொடுக்கும். இது ஒரு பக்க கோணலுடன் ஒரு நேரான பலாஸ்ஸோவை ஒத்து இருக்கும். நீங்கள் அணியும் கட் லெஹங்காவிற்கு மேட்ச் ஆக அணிகலன்களை அணியும் போது உங்கள் அழகு மேலும் மெருகூட்டப்படுகிறது.

ஸ்டைல் லெஹங்கா
ஸ்டைலான லெஹெங்கா இது சற்று எளிமையான ஒன்று தான். உங்களுக்கு கிராண்ட் லெஹங்கா அணிய விருப்பம் இல்லாத போது எளிமையான ஸ்டைல் லெஹங்காவை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் ஸ்டைல் லெஹங்கா தேர்வு செய்யும் போது அதன் நிறத்தை உங்களுக்குப் பிடித்தவாறு தேர்வு செய்து அதற்கு இணையான நகைகளை அணிந்து பிரதிபலியுங்கள்.

பிராட் ஃபிளேர்டு லெஹங்கா
இது வரையும் நம் பார்த்த லெஹங்கா சற்று ஒடுங்கிய ஒன்றாக இருக்கும். ஆனால் இது சற்று ஸ்பெஷல் ஒன்று. அதாவது கொஞ்சம் பறந்து விரிந்து காணப்படும் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்டைலான லெஹங்கா பரந்து விரிந்து காணப்படுவதால் சற்று தனித்துவமான தோற்றத்தால் நீங்கள் ஜொலிப்பீர்கள். இந்த லெஹங்கா தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ஒன்றாகவும் உள்ளது. இதற்கு மேட்ச்சான நகைகளை அணிந்து விசேஷ வீடுகளில் கலக்குங்கள்.



Click it and Unblock the Notifications
