மணப்பெண் அலங்காரத்தில் சோனம் கபூரின் அட்டகாசமான தோற்றம்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

டிசைனர்கள் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஸ்லா தாங்கள் டிசைன் செய்த ஆடைகளைக் கொண்டு நேற்று மும்பையில் உள்ள JW மேரியாட் ஹோட்டலில் பேஷன் ஷோ ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாப் சோனம் :

டாப் சோனம் :

இந்நிகழ்சியின் டாப்பராக நடிகை சோனம் கபூர் டிசைனர்களின் லேட்டஸ்ட் ப்ரைடல் கலெக்‌ஷனை அணிந்து வந்தார். அவர் அணிந்திருந்த ஆடை மற்ற எல்லாரையும் விட தனித்துவமாக தெரிந்தது. ப்ரைடல் என்றாலே பெரும்பாலும் சிகப்பு நிறத்திலான ஆடை இருக்கும் ஆனால் இதிலிருந்தே டிசைனர்கள் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஸ்லா தங்களின் கை வண்ணத்தை காட்டியிருந்தார்கள். சோனம் கபூரைத் தவிர ஏராளமான மாடல்கள் ரேம்ப் வாக்கில் நடந்தனர்.

மாடல்களை விஞ்சிய பாலிவுட் ஸ்டார்ஸ் :

மாடல்களை விஞ்சிய பாலிவுட் ஸ்டார்ஸ் :

சோனம் வெள்ளை நிறத்திலான ப்ரைடல் வியரில் தேவதையைப் போல காட்சியளித்தார். நிகழ்ச்சிக்கு ஏராளமான பாலிவுட் ஸ்டார்கள் வருகை தந்திருந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல்களைத் தாண்டி நிகழ்ச்சியை காண வந்திருந்த பிரபலங்களின் ஆடைகளும் வெகுவாக கவர்ந்தன.

திசா படாணி :

திசா படாணி :

க்ரீம் நிறத்தில் வெள்ளை நிற ஃப்ளோரல் எம்பிராய்டரியுடன் அனார்கலியில் பார்க்க மிகவும் அழகாக இருந்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் திசா தி பெஸ்ட் எனலாம். தன் அழகை குறைத்திடாமல் இருக்க நகைகளை தவிர்த்திருந்தார்.

சரா அலி கான் :

சரா அலி கான் :

சாராவின் லெஹங்கா வெகுவாக கவர்ந்தது. சில்வர் நிறத்தில் சோலி,பல வண்ணங்களில் ஃப்லோரல் பிரிண்ட் செய்யப்பட்ட லெஹங்கா கச்சிதமாக இருந்தது. நகைகளுக்கு அவ்வளவாக மெனக்கடவில்லை பெரிய தோடுகளும் மோதிரமும் மட்டும் அணிந்திருந்தார்.

அம்ரிதா சிங் :

அம்ரிதா சிங் :

சாரா,அவருடைய அம்மா அம்ரிதா சிங்வுடன் தான் வந்திருந்தார். அம்ரிதா சிங் வெள்ளை நிற சல்வா அணிந்திருந்தார். துப்பட்டாவில் இருந்த கோல்டன் டாட்ஸ் கிராண்ட் லுக் கொடுத்தது. லைட் மேக்கப் மற்றும் கையில் க்ளட்ச் என சிம்பிள் லுக்கில் அசத்தினார்.

ஜெயா பச்சன் :

ஜெயா பச்சன் :

வெள்ளை நிற அனார்காலி அதே நிறத்தில் எம்ப்ராய்டரியுடன் அழகாக இருந்தது. க்ளாஸியாக இருந்த ஜெயா பச்சன் சில்வர் நிறத்தில் க்ளட்ச் மற்றும் அதே சில்வர் நிறத்தில் செருப்பு என எல்லாமே மேட்சிங் தான்.

ஸ்வேதா நந்தா:

ஸ்வேதா நந்தா:

ஜெயாபச்சனை பாதுகாப்பாக அழைத்து வந்தது, அவரது மகள் ஸ்வேதா நந்தா. ஷேடட் மஞ்சள் நிறத்தில் அனார்கலி அணிந்திருந்தார் ஸ்வேதா. உடல் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் எம்பிராய்டரி இருந்தது. இந்த ஆடை அணிந்தால் கம்பீரமான தோற்றம் கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion tips bollywood dress
English summary

Sonam Kappoor Dazzles Bridal Wear

Sonam kapoor bridal wear
Story first published: Saturday, July 22, 2017, 17:30 [IST]