நீங்கள் வாங்குவதற்கு ஏற்ற பாலிவுட் நடிகைகள் அணிந்திருந்த கவர்ச்சிகரமான பேக்லெஸ் சோளிகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

நாம் அனைவரும், குறிப்பாக பெண்கள், சில நேரங்களில் தங்களின் முதுகை வெளிக்காட்ட விரும்புவார்கள்; அது திருமண நிகழ்வுகளாக இருக்கட்டும், இதர நிகழ்ச்சிகளாக இருக்கட்டும், பார்ட்டிகளாக இருக்கட்டும். தற்போதைய தலைமுறை மிகவும் நாகரீகத்துடன் உள்ளனர். அதனால் பலரும் மேற்கத்திய ஆடைகளையும், உலகளாவிய ஆடைகளையும் அணிய விரும்புகின்றனர். ஆனால் முதுகு தெரியும்படியான கவர்ச்சியான சோளியுடன் (ப்ளவுஸ்) அழகிய, அம்சமுள்ள சேலைக்கு ஏதாவது ஈடாகுமா?

ஆம், இன்றைய விவாத தலைப்பு சோளியைப் பற்றியது தான். அதுவும் சாதாரண சோளி அல்ல, முதுகை காண்பிக்கும் வகையிலான சோளி.

பெரும்பாலான நட்சத்திரங்களும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களும் பல நேரங்களில் சேலையிலும், பாரம்பரிய ஆடையிலும் ஜொலிக்கிறார்கள். கண்டிப்பாக அவர்கள் அழகாகவே உள்ளனர். சொல்லப்போனால், இந்திய சேலையில் எந்த பெண் தான் அழகாக இருக்க மாட்டார்? அதே போல் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் முதுகை காண்பிக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியான சோளிகளை அணிந்திருப்பதையும் நாம் கவனித்து வருகிறோம். பெண்களே, செக்ஸியான நம்முடைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களை பின்பற்றி நீங்களும் உங்களது முதுகை வெளிப்படுத்த போகிறீர்களா?

முதுகு மற்றும் முதுகைக் காண்பிக்கும் சோளிக்களின் அழகை வர்ணிக்கும் வகையில் உள்ளார்கள் சில நட்சத்திரங்கள். இவர்கள் அவ்வளவு அழகாக இருப்பதால், இந்த ஸ்டைலை உங்களால் அடுத்தவர்களுடன் பகிராமல் இருக்க முடியாது. முதுகைக் காட்டும் இப்படிப்பட்ட சோளிகளை அணிந்து உங்களது கவர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுங்கள்.

1. கஜோலின் முத்து சேர்க்கப்பட்ட முதுகை காட்டும் சோளி

ShaadiSeason: 4 Must Have Bollywood Celebrity Inspired Backless Cholis

அழகிய சேலையில் முதுகை காட்டும் கவர்ச்சியான சோளியில் காணப்பட்டார் கஜோல். இவரின் மொத்த சோளியும் முத்துக்களால் செய்யப்பட்டிருந்தது. அதனால் மிகவும் எளிமையான சேலையில் இருந்தாலும் கூட ஈர்க்கும் வகையிலான தோற்றத்தில் அவர் காணப்பட்டார். இந்த திருமண காலத்தில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஆடை இது.

2. தீபிகாவின் கயிறை கொண்ட முதுகை காண்பிக்கும் சோளி

ShaadiSeason: 4 Must Have Bollywood Celebrity Inspired Backless Cholis

ஐயோ! சூடாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது தானே. இந்த வகையிலான சோளி இன்றைய பெண்களுக்கானது. இதனை அணிந்து சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், முதுகு பக்கம் வெறுமனே ஒரு முடிச்சு போட்டால் போதும். நீங்களும் கவர்ச்சியாகி விடுவீர்கள்.

3. கரீனாவின் ஸ்ட்ராப் வகை முதுகை காண்பிக்கும் சோளி

ShaadiSeason: 4 Must Have Bollywood Celebrity Inspired Backless Cholis

சிவப்பு என்றாலே கவர்ச்சி, கம்பீரம், வெளிப்படையான மற்றும் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய நிறமாகும். கவர்ச்சிகரமான முதுகை காண்பிக்கும் சோளி டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இது சிறந்த தேர்வாக இருக்கும். ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய இரத்த சிவப்பு நிற சேலையில், முதுகை காண்பிக்கும் சூடான ப்ளவுஸில் காணப்பட்டார் கரீனா கபூர். இதை பயன்படுத்திப் பார்க்கலாமே!

4. பிபாஷாவின் முதுகை காண்பிக்கும் வெல்வெட் சோளி

ShaadiSeason: 4 Must Have Bollywood Celebrity Inspired Backless Cholis

வெல்வெட் என்பது பெண்களுக்கான சரியான குளிர் கால நண்பன். இது வெப்பத்தை அளிப்பதோடு ஸ்டைலையும் கொடுக்கும். வெல்வெட் ப்ளவுசிற்கு க்ரீப் வகை சேலை மிகவும் பொருத்தமாக இருக்கும். பிபாஷாவின் முதுகை காண்பிக்கும் பச்சை நிற சோளி டிசைன் சாதாரண சோளி டிசைனை போன்றது தான். ஆனால் அதன் மெல்லிய ஸ்ட்ராப் அதிக தேகத்தை வெளிப்படுத்தியது.

சீக்கிரம் பெண்களே! இத்தகைய ப்ளவுஸ்கள் தான் தற்போது ஃபேஷனாகி கொண்டிருக்கிறது. அதனால் அவற்றை வாங்குங்கள். மேலும் முதுகை காண்பிக்கும் இந்த செக்ஸியான சோலியை மலிவு விலையில் பெற்றிட இதை சொடுக்கவும். மேலும் உங்களது கருத்துக்களை கீழே தெரியப்படுத்தவும்.

English summary

ShaadiSeason: 4 Must Have Bollywood Celebrity Inspired Backless Cholis

This wedding season flaunt your backs with confidence with these Bollywood inspired backless cholis.
Subscribe Newsletter