1980-களில் இருந்து ஸ்ரீதேவி பத்திரிக்கை அட்டைப்படங்களுக்கு கொடுத்த போஸ்கள்!

Posted By:
Subscribe to Boldsky
தலைமுறைக்கு ஏற்றவாறு ஸ்ரீதேவி கொடுத்த போஸ்கள்- வீடியோ

பல ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ஸ்ரீதேவி, சமீபத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென்று மரணத்தை சந்தித்தது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நடிகை ஸ்ரீதேவியின் ஸ்டைலே தனி தான். அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ஸ்டைலைப் பின்பற்றி வருபவர் ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவிக்கு நடிப்பில் மட்டுமின்றி, ஃபேஷன் துறையிலும் அதிக ஆர்வம் இருந்தது எனலாம்.

பொதுவாக பெண்கள் திருமணத்திற்குப் பின் அல்லது ஒரு கட்டத்திற்கு மேல் லேட்டஸ்ட் ஃபேஷனைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால் நடிகை ஸ்ரீதேவியோ, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்றவாறு தனது ஸ்டைலையும் மாற்றிக் கொண்டு தான் வந்துள்ளார். பொதுவாக நடிகைகள் பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களில் இடம்பெறுவது சாதாரணமான ஒன்று தான்.

அப்படி தான் நடிகை ஸ்ரீதேவியும் 1980-களில் இருந்து இன்று வரை பல பத்திரிக்கைளின் அட்டைப்படங்களில் இடம் பெற்றிருந்தார். இப்போது அவரை நினைவுக்கூறும் வகையில், அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை நடிகை ஸ்ரீதேவி இடம் பெற்றிருந்த பத்திரிக்கைக்களின் அட்டைப்படங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபிலிம்பேர் (1984)

ஃபிலிம்பேர் (1984)

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓர் பத்திரிக்கை தான் ஃபிலிம்பேர். அத்தகைய ஃபிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி 1984 ஆம் ஆண்டே இடம் பிடித்துவிட்டார். இவர் அட்டைப்படத்திற்காக ஸ்லீவ்லெஸ் லேஸ் டாப் மற்றும் நெக்லேஸ் அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தார்.

ஃபிலிம்பேர் (1985)

ஃபிலிம்பேர் (1985)

இது 1985 ஆம் ஆண்டு 'The Empress' (பேரரசி) என்று பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் குறிப்பிட்டு இருந்தது. இது ஒன்றும் பொய் இல்லையே. அக்காலத்தில் அவர் காண்பதற்கு பேரரசி போன்று தானே இருப்பார். இந்த அட்டைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள போஸ் கூட அவரை பேரரசியாகத் தானே காட்டுகிறது. சொல்லப்போனால், இதில் ஸ்ரீதேவி மிகவும் கிளாமராக காட்சியளிக்கிறார்.

மூவி பத்திரிக்கை (1988)

மூவி பத்திரிக்கை (1988)

80-களில் பாலிவுட்டில் பிரபலமான ஓர் பத்திரிக்கை தான் மூவி. இந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ஸ்ரீதேவி அற்புதமான அவதாரத்தில் போஸ் ஒன்றை கொடுத்திருந்தார். அதவும் உடைக்குப் பொருத்தமாக ஆரஞ்சு நிற டர்பன் அணிந்து, பெரியளவிலான காதணியை அணிந்து கொடுத்த போஸ், ஸ்ரீதேவி மிகவும் அழகாக காட்டியது எனலாம்.

ஷோ டைம் (1991)

ஷோ டைம் (1991)

1991-இல் பிரபலமான ஓர் பாலிவுட் பத்திரிக்கை தான் ஷோ டைம். இந்த பத்திரிக்கைக்காக நடிகை ஸ்ரீதேவி ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து, காதுகளில் மிகப்பெரிய மஞ்சள் நிற பூ வடிவ காதணியை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

டின்செல் டவுன் (1991)

டின்செல் டவுன் (1991)

90-களில் உள்ள மற்றொரு பிரபலமான ஓர் பத்திரிக்கை தான் டின்செல் டவுன். இந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் க்யூட்டான அவதாரத்தைக் காணலாம். இந்த அட்டைப்படத்திற்காக ஸ்ரீதேவி நீல நிற உடை அணிந்து, மேட்ச்சாக ஆபரணங்கள் மற்றும் பொட்டு வைத்து, மேற்கொண்டிருந்த ஹேர் ஸ்டைல், அவரை மிகவும் சிறப்பாக காட்டியது.

மூவி (1994)

மூவி (1994)

ஸ்ரீதேவி 1994 ஆம் ஆண்டு மூவி என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்தார். அப்போது அந்த அட்டைப்படத்திற்காக கருப்பு நிற உடை அணிந்து, தனது முதுகைக் காண்பித்தவாறு போஸ் கொடுத்திருந்தார். இதில் ஸ்ரீதேவி சற்று கொழுகொழுவென்று க்யூட்டாக உள்ளார் தானே!

இந்தியா டுடே (2012)

இந்தியா டுடே (2012)

ஸ்ரீதேவி 2000 வருடத்தில் காலடியை எடுத்து வைத்ததும், அவரது ஸ்டைலில் சற்று மாற்றத்தைக் காணலாம். அதிலும் பல வருடங்களுக்குப் பின் 2012 ஆம் ஆண்டு இந்தியா டுடே என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில், ஹால்டர் நெக் கொண்ட பாடிகான் உடை மற்றும் ஹை-ஹீல்ஸ் அணிந்து சுவற்றில் சாய்ந்தவாறு போஸ் கொடுத்தது, பிரமாதமாக இருந்தது எனலாம்.

L'Officiel (2013)

L'Officiel (2013)

இது ஒரு சர்வதேச பத்திரிக்கை. என்ன தான் வயதாகிவிட்டாலும், ஸ்ரீதேவி தனது இளமைத் தோற்றத்தை கவனமாக பாதுகாத்து வந்தார் எனலாம். இந்த சர்வதேச பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக, ஸ்ரீதேவி ட்ரென்ச் உடை மற்றும் பொருத்தமான ஆபரணங்களை அணிந்திருந்தார். இதில் இவர் முற்றிலும் வித்தியாசமாக காணப்பட்டார்.

வோக் இந்தியா (2013)

வோக் இந்தியா (2013)

பிரபலமான வோக் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட போட்டோசூட் படங்கள் தான் இவை. இதில் பிங்க் நிற சுருக்கங்களைக் கொண்ட உடை அணிந்து எடுக்கப்பட்ட போட்டோ பத்திரிக்கையின் அட்டைப்படத்திலும், மற்றொரு ஆலிவ் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடை பத்திரிக்கையின் உட்புறத்திலும் இடம் பெற்றிருந்தது.

வோக் இந்தியா (2015)

வோக் இந்தியா (2015)

மனீஷ் மல்ஹொத்ராவின் பிரைடல் 2015 கலெக்ஷன்களுக்காக வோக் இந்தியா பாலிவுட் நடிகைகளைக் கொண்டு போட்டோ சூட் ஒன்றை எடுத்து பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் போட்டது. அதில் பாலிவுட் நடிகைகளான அலியா பட், ஷில்பா ஷெட்டி, கஜோல், கரீஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூருடன், நடிகை ஸ்ரீதேவியும் இருந்தார். ஸ்ரீதேவி அப்போது பாஸ்டல் ஷேடு புடவை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

ஹாய்! பிலிட்ஸ் (2016)

ஹாய்! பிலிட்ஸ் (2016)

ஹாய்! பிலிட்ஸ் என்பது பிரபலமான ஓர் பாலிவுட் பத்திரிக்கை. இதில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் பற்றிய செய்திகள் வரும். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாய்! பிலிட்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட கவுன் அணிந்து கொடுத்த போஸ் இடம் பெற்றிருந்தது.

வெர்வ் மற்றும் ஃபில்ம்பேர் (2017)

வெர்வ் மற்றும் ஃபில்ம்பேர் (2017)

2017 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி இருவேறு பத்திரிக்கைகளில் வித்தியாசமான உடைகளில் போஸ் கொடுத்திருந்தார். அதில் வெர்வ் பத்திரிக்கைக்கு மின்னும் காப்பர் நிற உடை அணிந்து, தலைக்கு மேலே கவசம் ஒன்றை அணிந்து கொடுத்த போஸ் இடம் பெற்றிருந்தது. ஃபிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ஹாப்-ஷோல்டர் கொண்ட கருப்பு நிற உடை அணிந்திருந்த ஸ்ரீதேவியின் போட்டோ இடம் பெற்றிருந்தது.

ஃபிலிம்பேர் 2018

ஃபிலிம்பேர் 2018

இது தான் கடைசியாக நடிகை ஸ்ரீதேவி இடம் பிடித்த ஃபிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப்படம். இந்த அட்டைப்படத்தில் கரீனா கபூர், சோனம் கபூர் மற்றும் அலியா பட்டுடன் சேர்ந்து, ஸ்ரீதேவி போஸ் கொடுத்திருந்தார். இதில் நடிகை ஸ்ரீதேவி மற்ற இளம் நடிகைகளுக்கு இணையாக அற்புதமான மின்னும் உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

All-time Best Magazine Coverages Of The “Reel Empress” Sridevi

Sridevi got featured in several magazines since 1980s and these are best coverages. Have a look.
Story first published: Wednesday, February 28, 2018, 18:59 [IST]