For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிதாக திருமணமான பெண்களுக்கான 4 வகையான மணப்பெண் புடவைகள்!

By Aruna Saravanan
|

திருமணம் ஒரு அற்புத தருணம். மணப்பெண் என்பவள் எத்தனை கனவுகளோடு இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கின்றாள். அத்தகைய நன்னாளில், தான் ஜொளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பென்ணும் விரும்புவாள். என்ன புடவை எந்த நிறத்தில் கட்ட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் போடுவார்கள். அதிலும் இதுவரை யாரும் அணியாத ஆடை தான் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சாதாரண பண்டிகைக்கே பார்த்து பார்த்து ஆடை வாங்கும் போது, திருமணத்திற்கு எப்படி வாங்க வேண்டும். திருமணத்தில் எல்லோர் கண்ணும் மணமகனை விட மணமகளின் மீதுதான் அதிகம் இருக்கும். அதுவும் மணமகளின் திருமண புடவையைத் தான் அனைவரும் பார்க்க விரும்புவர்.

திருமண நாள் நெருங்க நெருங்க புடவையைப் பற்றிய கவலையே அதிகமாக இருக்கும். எந்த கடையில் வாங்க வேண்டும், எந்த நிறத்தில் வாங்க வேண்டும், எத்தனை புடவை வாங்க வேண்டும் என்று பல குழப்பங்கள் இருக்கும். அத்தை ஒரு நிறம் தேர்வு செய்தால், அம்மா ஒரு நிறம் தேர்வு செய்வார். எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில் புடவை அமைய வேண்டும்.

சிலர் திருமணப் புடைவையை மட்டுமே கருத்தில் கொண்டு அதற்கு அடுத்து வரும் நாட்களுக்கான புடவையை தேர்வு செய்யாமல் விட்டு விடுகின்றனர். இது மிகவும் தவறு திறுமண நாள் அன்று ஜொலிக்கும் பெண்ணை அதற்கு அடுத்து வரும் நாட்களும் எப்படி இருக்கின்றாள் என்பதை காண்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்து கொண்டிருக்கும். சிலர் வீடுகளில் திருமணம் முடிந்த மகிழ்ச்சியை கொண்டாடவே தனி விழா எடுப்பார்கள். அதற்கும் நல்ல புடவையை மணப்பெண் உடுத்த வேண்டும். திருமணத்திற்கு வர முடியாத சிலர் திருமணம் முடிந்த அடுத்தடுத்த நாட்களில் வந்து பார்பார்கள். எனவே திருமணத்திற்கு பின் வரும் சில நாட்களிலும் மணப்பெண் தன் புடவையை தேர்வு செய்வது மிகமிக அவசியம்.

அத்தகைய நாட்களுக்காக எங்களிடம் நான்கு நிறத்தில் புடவைகள் உள்ளன. அவற்றில் சில இங்கே. திருமணம் அதற்கு அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு என எங்களிடம் புடவைகள் உள்ளன.

சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த புடவை

Four Types Of Sarees For A Newlywed Bride

திருமண புடவை என்றால் நாம் அனைவருக்கும் நினைவில் வருவது சிவப்பு நிறம். சிவப்பு நிறம் நம் பாரம்பரிய நிறமாக கருதப்படுகின்றது. திருமண நாள் அன்று நீங்கள் சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த புடவையில் ஜொலிக்கலாம். அதற்கு தங்க நிறத்தில் ஜாக்கெட். சிவப்பு என்பது நம் பாரம்பரிய நிறமாக கருதப்படுகின்றது. பல பெண்கள் பாரம்பரிய நிறமான சிவப்பு நிறத்தில் புடவை அணிந்து திருமணம் செய்து கொள்வதையே விரும்புகின்றனர். இந்த புடைக்கு ஏற்ற தங்க நிற ஆபரணம் அணிந்து சிவப்பு நிற பொட்டு இட்டு வந்தால், உங்களவர் சொக்கியே போவார்.

அடுத்து பூப்போட்ட புடவை

சிலர் பாரம்பரிய புடவையை அணிந்து கொள்வதை விட தற்போதைய காலத்துக்கு ஏற்ற புடவையை அணிந்து கொள்வதையே விரும்புகின்றனர். அவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட புடவை தான் இந்த பூப்பிரிண்ட் போடப்பட்ட புடவை. இதை அணிந்து முத்தாலான நகை அணிந்து வந்தால் காண இரண்டு கண் போதாது. ஒரு பூந்தோட்டமே எழுந்து வந்ததைப் போன்று காட்சி அளிக்க முடியும்.

சிம்பிள் புடவை

சிலர் எம்பிராய்டரி கொண்ட புடவையை அணிந்து வருவதை விட சிம்பிளாக அணிந்து கொள்வதை விரும்புவர். சிம்பிள் ஆடைக்கென்று ஒரு தனி அழகு உண்டு. அதற்கென உள்ள புடவை சிக் புடவை (chic saree). இதன் டிசைன் உங்கள் பெண்மையை மேலும் கூட்டிக் காண்பிக்கும்.

மஞ்சள் புடவை இதோ உங்களுக்காக!

புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்கள் மஞ்சள் நிற புடவையை வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். மஞ்சள் மங்களம். முத்தாலான நகை அணிந்து தங்க வளையல் அணிந்து மஞ்சள் நிற புடவையில் வந்தால் நட்சத்திரமே வாளைப் பிளந்து பார்க்கும். 'மஞ்சக் காட்டு மைனா'வாக ஜொலிக்க இதோ மஞ்சள் நிற புடவை.

English summary

Four Types Of Sarees For A Newlywed Bride

Dont take your first day after wedding lightly. Hurry up! And read about the sarees youll need for the first few days after wedding.
Desktop Bottom Promotion