நவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்!!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

துர்கா பூஜை என்று சொன்னாலே போதும் உலகத்தில் எந்த மூலைகளில் வாழும் பெங்காலி மக்களின் முகத்தில் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் காணலாம். பெங்காலி மக்கள் மற்ற கொண்டாட்டத்திற்கு தங்களை ஸ்டைலாக காட்டுவதை விட துர்கா பூஜைக்கு தங்களது முழுமையான ஸ்டைலையும் அழகையும் காட்ட விரும்புவார்கள்.

ஹில்ஷா, ரசகுல்லா மற்றும் அரசியல் இதுக்கு மட்டும் பெங்காலி மக்கள் புகழ்பெற்று இருப்பதோடு ஸ்டைலிலும் குறிப்பாக லால் பார் சதா புடவையை ஸ்பெஷலாக அணிவதிலும் அவர்களுக்கு மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது.

Bolly Durga Puja Special: True Essence Of The Bengali Traditional “Laal Paar Shada” Sari

அவர்களுடைய அந்த புடவை கட்டும் ஸ்டைல் "ஆட் பூரி" என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மதச்சார்பான விழாக்களில் இந்த ஸ்டைலில் அணிவார்கள். குறிப்பாக துர்கா பூஜையின் அஷ்டமி மற்றும் தசமி (8 மற்றும் 9 ஆம் நாள்) இந்த ஸ்டைலை மேற்கொள்ளுகின்றனர்.

இந்த லால் பார் சதா புடவையின் உடம்பு முழுவதும் வெள்ளை நிறமும் பாடர் மட்டும் சிகப்பு நிறத்துடனும் இருக்கும். பெங்காலி பெண்கள் இந்த புடவையில் அப்படியே தங்க நகைகள் அணிந்து சிவப்பு நிற பொட்டு வைத்து மற்றும் கால்களுக்கு அல்தாவால் நிற மூட்டு இருக்கும் அழகே ஒரு தனி பேரழகு தான் எனலாம்.

எனவே இங்கே உங்களுக்காக வேறுபட்ட பெங்காலி லுக்கை சில பாலிவுட் நடிகைகளின் ஸ்டைலிலும் சில பெங்காலி நடிகைகளின் ஸ்டைலிலும் காணலாம்

கீழ்க்கண்ட ஸ்டைலில் உங்களுக்கு பிடித்தமான லுக்கை தேர்ந்தெடுத்து வருகின்ற துர்கா பூஜையில் நீங்களும் பெங்காலி ஸ்டைலில் அசத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிபாசா பாசு

பிபாசா பாசு

எங்களது பார்வை பாலிவுட் பெங்காலி குயின் பிபாசா பாசுவிடமிருந்து தொடங்குகிறது. ஆமாங்க அவர் பெங்காலி பாரம்பரிய உடையான லால் பார் சதா புடவையில் இரண்டு முறை வந்து மயக்கடித்து விட்டார். இதில் பெரிய பிளஸ் என்னவென்றால் அவர் கட்டிருந்த ஸ்டைல் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

லேக்மி பேஷன் வாரத்திற்கும் மற்றும் போட்டோ ஜூட்டுக்கும் பிபாசா பாசு வந்திருந்த ஸ்டைல் ரெம்ப கவர்ச்சியாகவும், அதே நேரம் அழகாகவும் இருந்தது.

அந்த இரண்டு ஸ்டைலான புடவைகளும் வித்தியாசமான எம்பிராய்டரி டிசைனுடன் சிவப்பு பார்டருடன் வெள்ளை கலர் உடம்பு முழுவதும் நிரம்பி வந்து இருந்தது.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி மும்பையில் கஜோலின் குடும்ப துர்கா பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரின் ப்ரிட்டியான அழகு காண்போரை மயக்கத்தில் ஆழ்த்தியது. அவர் நிறைய தடவை பெங்காலி லால் பார் சதா புடவை அணிந்திருந்தாலும் இந்த தடவை பாரம்பரிய புடவையை மாடர்னாக கட்டி வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார்.

 கஜோல்

கஜோல்

கஜோல் ராணி முகர்ஜியின் உறவினர் தான். இந்த தடவை கஜோல் பெங்காலி பாரம்பரிய உடையில் வந்து மிகவும் சிறப்பாக காணப்பட்டார். அட்டகாசமான பெங்காலி லுக்கில் பாரம்பரிய பெங்காலி புடவையை வித்தியாசமான முறையில் அணிந்து எல்லாரையும் பொறாமை பட வைத்து விட்டார்.

சுஸ்மிதா சென்

சுஸ்மிதா சென்

மற்றொரு பெங்காலி நடிகை நம்ம உலக அழகி சுஸ்மிதா சென். இவர் பாரம்பரிய பெங்காலி புடவையை வழக்கமான ஸ்டைலில் கட்டாமல் தனித்துவமான ஒரு மறுவடிவத்தை கொடுத்து கட்டிருந்தது மிகவும் அழகாக இருந்தது. துர்கா பூஜையின் போது பட்டால் ஆன லால் பார் சதா புடவையை அணிந்து ஜொலிப்பான நகைகளுடன் காணப்பட்டது நம் கண்களுக்கு அவர் மீண்டும் உலக அழகியாக காட்சியளித்தார்.

ரீடாபாரி சக்ரபர்த்தி

ரீடாபாரி சக்ரபர்த்தி

ரீடாபாரி புகழ்பெற்ற பெங்காலி நடிகை ஆவார். அவர் தற்போது ஆயுஷ்மான் குரானா இசையில் கல்கி கோச்லினுடன் நடித்த குறும் படத்தில் தேவதை போல் பெங்காலி பாரம்பரிய புடவையில் வலம் வருகிறார். இந்த பெங்காலி லுக் அவரின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. லால் பார் சதா புடவையில் முத்துக்கள் நிறைந்த ஜூவல்லரி அணிந்து சிவப்பு நிற பொட்டு வைத்து அவர் கொடுத்துள்ள ஒரு லுக் பார்ப்பவர் மனதை எளிதாக கவர்ந்திழுத்து விடும்.

அதே மாதிரி இன்னொரு பார்வையில் பாரம்பரிய புடவையில் புல்கா டாட் பிரிண்ட்டேடு ப்ளெவ்ஸ் அணிந்து தங்க நகைகள் அணிந்து வந்திருந்தது பேரழகாக இருந்தது. என்ன உங்களுக்கு இப்பொழுது இரண்டு விதமான ரீடாபாரி ஸ்டைல் இந்த துர்கா பூஜைக்கு கிடைத்திருக்கும் அல்லவா.

 சோனம் கபூர்

சோனம் கபூர்

இவரும் இரண்டு தடவை பெங்காலி பாரம்பரிய உடையில் வலம் வந்து இருக்கார். ஒன்று பட சூட்டிங் போது மற்றொன்று பேஷன் அணிவகுப்பின் போது வந்துள்ளார். இந்த இரண்டு ஸ்டைலுமே அவருக்கு அழகாக தான் இருந்தது. "ஆட் பூரி" ஸ்டைலில் கலக்கலான பொட்டு வைத்து வந்தது இரண்டு ஸ்டைலையும் மிகைப்படுத்தி காட்டியது. கண்டிப்பாக இந்த இரண்டில் ஒரு ஸ்டைலை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் அல்லவா.

ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி

தற்போது நடைபெற்ற மாம் பட வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய பெங்காலி டெலிவிஷன் ஸ்ஷோக்கு நடிகை ஸ்ரீதேவி பெங்காலி ஸ்டைலில் வருகை தந்தார். அவரிடம் இன்னும் அப்படியே இருக்கும் அழகோடு பாரம்பரிய பெங்காலி புடவையில் வந்தது அவர் அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்தது.

அந்த புடவையை "ஆட் பூரி" ஸ்டைலில் கட்டியிருந்தது அந்த ஸ்டைல் அவரை நிஜமாகவே பெங்காலி பெண்ணாக மாற்றிவிட்டது எனலாம்.

செலினா ஜெயிட்லி

செலினா ஜெயிட்லி

கவர்ச்சி புயல் செலினா ஜெயிட்லி தன்னுடைய போட்டோ ஷூட்டுக்கு பாரம்பரிய பெங்காலி ஸ்டைலில் வந்தார். அவர் " ஆட் பூரி" ஸ்டைலில் கட்டியிருந்தது மிகவும் அழகாக இருந்தது. இந்த போட்டோ ஜூட்டாக விலை மதிப்புள்ள ராயல் லுக்குடன் கூடிய கோல்டன் எம்பிராய்டரி நெய்யப்பட்ட லால் பார் சதா புடவையுடன் தங்க நகைகளையும் அணிந்து வலம் வந்தார். சிவப்பு நிற பொட்டு வைக்காமல் குங்குமம் வைத்து ஷகா போலா வளையல்களுடன் பெங்காலி மணப்பெண் மாதிரி இருந்தார்.

இந்த ஸ்டைல் ஒரு முழுமையான துர்கா பூஜையின் தசமி கொண்டாட்டத்திற்கான சிறப்புடன் இருக்கிறது.

ரிதுபர்னா செங்குப்தா

ரிதுபர்னா செங்குப்தா

ரிதுபர்னா 90களில் சில பாலிவுட் படங்களில் நடித்துள்ள பெங்காலி நடிகை ஆவார். இவர்" ஆட் பூரி" ஸ்டைலில் பெங்காலி பாரம்பரிய புடவையை அணிந்து கையில் பூ தட்டுடன் இருக்கின்றார். அதாவது இதை "போரான் டாலி" என்று பெங்காலியில் கூறுவர். இதற்கு பொருள் அன்னை துர்கா தேவி யிடம் இருந்து விடை பெறுதல் என்பது பொருளாகும்.

இந்த ஸ்டைல் உங்களுக்கு ஒரு பொருத்தமான துர்கா தசமி கொண்டாட்டத்திற்கான குங்கும விளையாட்டிற்கு தயாரான ஸ்டைலை காட்டுகிறது.

என்னங்க இன்னும் ஏன் வைட் பண்றீங்க இந்த பெங்காலி ஸ்டைலில் உங்களுக்கு பொருத்தமான ஸ்டைலை தேர்ந்தெடுத்து வருகின்ற துர்கா பூஜையில் ஒரு கலக்கு கலக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bolly Durga Puja Special: True Essence Of The Bengali Traditional “Laal Paar Shada” Sari

Bolly Durga Puja Special: True Essence Of The Bengali Traditional “Laal Paar Shada” Sari
Story first published: Monday, September 18, 2017, 15:18 [IST]
Subscribe Newsletter