Latest Updates
-
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
அம்பானி வீட்டு திருமணத்துக்கு பாரம்பரிய உடையில் வந்து கலக்கிய தென்னிந்திய நடிகைகள்! - இதுல யாரோட லுக் சூப்பர்?
Anant Ambani and Radhika Merchant's Wedding: சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் மும்பையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு உலகின் மற்ற நாடுகளில் இருந்தும் பிரபலங்கள் வந்து கலந்து கொண்டனர். இது தவிர பல இந்திய திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
முக்கியமாக இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்து வந்து, விழாவை இன்னும் சிறப்பாக்கினர். அதுவும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் அணிந்து வந்த ஆடைகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அற்புதமாக இருந்தன.

கீழே முகேஷ் அம்பானி வீட்டு திருமண விழாவில் பாரம்பரிய உடையில் கலந்து கொண்ட தென்னிந்திய நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு எந்த நடிகையின் லுக் பிடித்துள்ளது என்று கூறுங்கள்.
காஜல் அகர்வால்
முகேஷ் அம்பானியின் இளைய மகள் திருமணத்திற்கு நடிகை காஜல் அகர்வால் முதலாவதாக பிங்க் மற்றும் சில்வர் நிற புடவையிலும், அடுத்ததாக கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பச்சை நிற லெஹெங்காவிலும் வந்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ராஷ்மிகா மந்தனா மஞ்சள் மற்றும் கோல்டன் நிற லெஹெங்காவிலும், இரண்டாவதாக நீலம் மற்றும் கோல்டன் கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஸ்டைலிஷ் புடவையிலும் வந்திருந்தார்.
ராஷி கன்னா
நடிகை ராஷி கன்னா அம்பானி வீட்டு திருமணத்தின் போது ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிற புடவையிலும், அடுத்ததாக கோல்டன் நிற மினுமினுக்கும் லெஹெங்கா உடையை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.
தமன்னா பாட்டியா
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண விழாவிற்கு நடிகை தமன்னா கருப்பு மற்றும் கோல்டன் நிற லெஹெங்காவை அணிந்து, பிரைடல் ஆபரணங்களை அணிந்து கவர்ச்சிகரமாக வந்திருந்தார்.
ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆனந்த் அம்பானியில் திருமண விழாவின் போது சில்வர் கல் வேலைப்பாடு செய்யப்பட்ட வெள்ளை நிற ஸ்டைலான புடவையை அணிந்து தேவதை போன்று க்யூட்டாக வந்திருந்தார்.
நயன்தாரா
நடிகை நயன்தாராவும் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கோல்டன் நிற சில்க் புடவையை அணிந்து, அதற்கு ஹெவியான நகைகளை அணிந்து கண்ணைப் பறிக்கும் அழகில் வந்திருந்தார்.
ஜோதிகா
நடிகை ஜோதிகா தனது கணவரும் நடிகருமான சூர்யாவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். இவரும் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது ஜோதிகா பீச் மற்றும் கோல்டன் நிற பட்டுப் புடவை அணிந்து, அதற்கு பச்சை நிற வைர கற்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications







