Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஃபேஷன் என்ற பெயரில் இவர்கள் நடத்திய கூத்தை பாருங்க!
ஃபேஷன் என்ற பெயரில் சிலர் செய்திருக்கும் வினோதமான சங்கடமான நிகழ்வுகளை பாருங்கள்.
ஒருவருடைய விருப்பம்,சிந்தனையை வெளிப்படுத்தும் ஒர் அங்கமாக மாறிவிட்டிருக்கிறது இன்றைய நவநாகரிக உடை அலங்காரம். அதில் புதுமை புகுத்தி விதவிதமாக பேஷன் ட்ரண்ட் என்ற பெயரில் தங்களுடைய ஆடை அலங்காரத்தை காட்டிக் கொள்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் ஃபேஷன் உடைகள் என்று சொன்னவுடன் அவை போதுமான அளவு வரவேற்பினை பெற்றுவிடுவதில்லை. சில நேரங்களில் பேஷன் என்ற பெயரில் ரணக்கொடூரமான உடைகளை, அலங்காரங்களை செய்து கொண்டு எல்லாரையும் எரிச்சல் படுத்துவார்கள் அப்படியான எப்பிக் மொமண்ட்டுகள் தான் இங்கே!

#1
மேடை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோர் பிறரை விட சற்றே விசித்திரமான ஸ்டைல்களை எல்லாம் முயற்சி செய்வர். இதோ அப்படி முயற்சி செய்திருக்கும் ஒரு சிறுமி.
எதோ சர்ப்ரைஸ் கொடுக்கப்போவதாய் சொல்லி கண்ணை மூடி அழைத்து வந்திருக்கிறார்கள். கைத்தட்டல்களுடன் கண்ணை மறைத்திருந்த கையை எடுத்திருக்கிறார் பின்னால் நின்ற சிறுமி. என்னடா எந்த ரியாக்ஷனும் இல்ல நம்ம சர்ப்பரைஸ் வொர்க் அவுட் ஆகலையா என்று மிரட்சியுடன் முன்னாள் வந்து பார்க்க ஒரு கணம் அதிர்ந்தேவிட்டாராம்.

#2
இது த்ரட்டிங் பண்ண வேலை மட்டுமில்ல கொஞ்சம் மேக்கப்பும் சேர்ந்து செய்யுற வேலை. ரெண்டு நிமிஷம் செல்ஃபி எடுக்குறதுக்கு வேணும்னா இது நல்லாயிருக்கலாம். பாத்தும்மா ரெண்டு கொம்பு இருக்குற பொம்மைன்னு நினச்சு வாசல்ல மாட்டி வச்சிடபோறாங்க...

#3
ஒவ்வொருதரும் தங்கள ஒரு அல்ட்ரா லெஜன்டா நினைக்கிறாங்கன்னா இன்னொரு க்ரூப் அவங்கள இன்னும் குட்டிபாப்பான்னு நினைச்சிட்டு இருப்பாங்க.
ஹா ஹா ஹாசினின்னு சொல்றதா நினச்சுட்டு இன்னொசண்டன்னு நிறைய கொடூரங்களை எல்லாம் பண்ணுவாங்களே அப்படியான ஒரு கொடுமை தான் இது.

#4
சேண்ட்விச் பிரட் தினமும் சாப்பிட்டா இப்டித்தான்.... வாய பொளந்துட்டு அப்டியான்னு குருகுருன்னு பாக்குறது, கூகுள்ள சேர்ச் பண்றதுன்னு நேரத்தை வீணாக்காதீங்க....
இது ஒரு ஃபேஷனாம். நம்பித்தொலைக்கலாம். பொழுது போகணுமா இல்லையா?

#5
இது என்ன ஜன்னல்? அப்பறம் நீங்க ப்ளவுஸ்ல மட்டும் தான் ஜன்னல் வைப்பீங்களா? சட்டைலயும் வைப்போம். இப்டி முடிய கூட எடுத்துவிடுவோம். பின்னாடி இருந்து பாக்குறவங்களுக்கு தான் ஒரு செக்கண்ட் ஜெர்க் ஆகி நிற்பதும் இது சட்டையா? முடியா? என்று குழம்புவது தெரியும்.

#6
நம்ம பொண்ணுங்க எல்லாம் டிரஸ்ஸுக்கு மேட்சா தோடு, நெக்லஸ்,செருப்புன்னு போனா இந்த புள்ளைய பாருங்க.... டிரஸுக்கு மேட்ச்சா வாட்டர் பாட்டில்
யுஜுரு ஹன்யூ என்ற இந்த இளைஞர் ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர் ஸ்கேட்டிங் போட்டியில் ஜப்பான் சார்பில் உலகளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.

#7
மீன் வாங்கினா மசாலாவோட சமச்சு சாப்பிடணுமா என்ன? இப்டி கைப்பையா கூட யூஸ் பண்ணலாம்! பாத்ததும் ஒரு கணம் ஷாக்காகி உத்து பாக்குற மொமண்ட் தான் அவங்களுக்கு வேணும்.
நிம்மதியா கடல்ல நீந்திட்டு இருந்த என்னைய எடுத்து மல்லா பொழக்க வச்சிருக்கியான்னு கடிச்சா தெரியும். என்ன பண்றது கடிக்கிறதுக்கு இது உண்மையான மீன் இல்லையே..... டிசைனரோட கை வண்ணத்தில் உருவான லெதர் பேக்.

#8
இது பேண்ட்டா, ஸ்கர்ட்டா, டெனிமா ஒண்ணும் புரியல ஆனா எல்லாம் சேர்ந்த கலவையா இருக்கே.... ஷூ தனியா போட்டிருக்கா இல்ல ஜீன்ஸோட சேந்து நிக்கிதான்னும் தெரியல.
இது ஒண்ணும் டிசைனர் புதுசா யோசிச்சு செஞ்ச மாதிரி தெரியல அவர் கிட்ட இருந்த மீத துணிய எல்லாம் ஒண்ணா சேத்து தச்சு போட்டமாதிரி இருக்கு

#9
இத ஃபேஷன்னு சொன்னா நம்பித்தான் ஆகணும். ஒரு பக்கம் கிழிஞ்சு போன ஜீன்ஸ் இன்னொரு பக்கம் ஸ்கின் கலர் ல பேண்ட் போட்டிருக்காங்க ஆனாலும் ஸ்கின் கலர் இவ்ளோ ஃபெர்ஃபெக்டா... சான்ஸே இல்ல பாஸ்.
ஒரு பொண்ணுதான் இப்டின்னு நினச்சா அதோட தோஸ்த்தும் அப்டியே தான் இருக்கு.

#10
கத்திரி வெயில் சுட்டு எரிக்கிற ஊர்ல இப்படியான ஐடியா எல்லாம் வந்திருக்கா? ஃபேஷன்ற பேர்ல புடிச்சிட்டான். மேடம் இயற்கை ஆர்வலரா இருப்பாங்க போல.... ஆர்வலர் எல்லாம் சேரி அதுக்குன்னு இப்டி முட்டைகோஸை கேப் மாதிரி போட்டு வர்றதெல்லாம் ரொம்ப ஓவருங்க....

#11
தலை சீவாதவங்கள பாத்து காக்கா வந்து முட்டப்போடப்போகுதுன்ன்னு விளையாட்டுக்கு சொல்வாங்க.... அத அப்டியே நிஜமாக்கி வந்திருக்கிற ஃபேஷன் ஐகான்!
இது ப்ளாஸ்டிக் முட்டையா? ஒரிஜனல் முட்டையா???.... நம்ம பிரச்சனை நமக்கு...

#12
அட இப்டி ஒரு ஃபேஷனா கைய பின்னாடி வைக்கிற மாதிரியான சட்டைய எங்கயும் பாத்ததில்லையேன்னு அப்டியே ஷாக் ஆக வேண்டாம். தம்பி திருபி போட்டிருக்காப்ல....
அட பாத்தவைங்க யாரவது சிக்னல் காமிங்களேம்ப்பா...

#13
சரி சரி பயப்பட வேண்டாம். கிளம்புற நேரத்துல பேண்ட் கிளிஞ்சு போக அது தான் ஃபேஷன்னு சொல்ல மனுஷனுக்கு சரியா வர்ல.... சரின்னு வீட்டுல கிடந்த க்ரீன் கவர் தாறுமாறா ஒட்டிட்டு... புது பிராண்ட் பேரும் டிசைனர் பேரும் ஒண்ணு அவுத்து விட அட! என்று ஒரே ஆச்சரியம் தான் போங்க....
டிசைனர் பேர இன்னொருவாட்டி கேட்டா அவருக்கே தெரியாதாமா....

#14
புதுசா ஒரு டிரஸ் போட்டுட்டா வேணும்னே நம்ம எதிரிங்களுக்கு கடுப்பேத்துறதுக்காகவே அவங்க முன்னாடி போய்ட்டு போய்ட்டு வருவோம். யாராவது கேக்க மாட்டாங்களான்னு சுத்தி வளைச்சு காமிக்கிறது, பேசுறதுன்னு நாசுக்காக உணர்த்துவோம். ஆனா ஐயா அப்டி எல்லாம் இல்ல...
சார் புதுசா சாக்ஸ் வாங்கியிருக்காரு... அதன் காமிக்கணும்னு பேண்ட மடிச்சு விட்டிருக்கிற லெஜண்ட்!



Click it and Unblock the Notifications