ஸ்ரீதேவியின் உயிரை குடித்தது பிளாஸ்டிக் சர்ஜரியா? பரவும் சர்ச்சைகளும், பல்வேறு தோற்றங்களும்!

Posted By:
Subscribe to Boldsky

திரையுலகில் மிகச்சிறிய வயதில் கால்பதித்து மாபெரும் சாதனையாளர்களாக உருவெடுத்தவர்கள் இருவரே. ஒருவர் கமல், மற்றொருவர் ஸ்ரீதேவி. இருவருமே இந்திய அளவில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து நட்சத்திரங்கள். இருவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்காக அதிகம் மெனக்கெடல், உழைப்பை தரக்கூடியவர்கள். இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்த பெருமை இருவருக்குமே உண்டு.

பிரபலங்கள் என்றாலே சர்ச்சைகள் குவியும். அப்படி ஸ்ரீதேவியின் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். காதல் விவகாரம் என்றில்லாமல், ஸ்ரீதேவி குறித்து எழுந்த பெரிய சர்ச்சை பிளாஸ்டிக் சர்ஜரி. அவர் இறந்த பிறகும் கூட இந்த பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை ஓய்ந்த பாடில்லை.

ஸ்ரீதேவியை ஆரம்பக் கால மூன்று முடிச்சில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்கு தெரியும். அவரது முக வடிவம், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு மாற்றம் தென்பட்டது. அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சார்ஜரி செய்து வந்தவர் ஸ்ரீதேவி என்றும் சிலர் கூறுகிறார்கள்.

கடைசியாக இதழ் குறித்த பிளாஸ்டிக் சர்ஜரி உண்மையல்ல என்று ஸ்ரீதேவி அவர்களே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக நடித்த ஆரம்பக் காலத்தில் இருந்து கடைசி காலக்கட்டம் வரை ஸ்ரீதேவியின் பல்வேறு தோற்றங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம்

அறிமுகம்

ஸ்ரீதேவியின் தோற்றம்... குழந்தை நட்சத்திரமாக.

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் என்ற படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா என தென்னிந்தியா படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

நாயகி!

நாயகி!

நடிகை ஸ்ரீதேவியின் பதின் வயது தோற்றம்... மூன்று முடிச்சு படத்தில்!

ஸ்ரீதேவி முதன் முறையாக ஒரு கதையின் முதன்மை நாயகியாக நடித்த படம் மூன்று முடிச்சு (1976). இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 13 மட்டுமே. இதில் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையாக நடித்திருந்தார்.

மூக்கு!

மூக்கு!

மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற ஆரம்பக் காலக்கட்ட படங்களில் நடிகை ஸ்ரீதேவின் முகத் தோற்றத்திற்கும், அவர் பின்னாட்களில் நடித்த படங்களின் தோற்றத்திற்கும் முகத்தில் சிறிய வித்தியாசம் இருக்கும். முக்கியமாக அவரது மூக்கு பகுதி வேறுப்பட்டு காணப்படும். இதனாலேயே அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டார் என்று கூறப்பட்டு வந்தது.

90-களில்

90-களில்

ஸ்ரீதேவியின் தோற்றம் - 90களில்

80 - 90களில் இந்தி திரையுலகில் தனது திறமையால் முன்னணி நடிகையானார் ஸ்ரீதேவி. அந்த காலக்கட்டத்தில் உச்சபட்ச நட்சத்திரமாக மட்டுமின்றி, அதிக ஊதியம் வாங்கிய நடிகையாகவும் இருந்தார் ஸ்ரீதேவி.

சூப்பர்ஸ்டார்!

சூப்பர்ஸ்டார்!

இந்தி திரையுலகில் முதன் முறையாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகை ஸ்ரீதேவி தான். இவர் ஐந்து முறை பிலிம்பேர் விருதுகள் வென்றிருக்கிறார்.

1977 - பதினாறு வயதினிலே, 1982 - மீண்டும் கோகிலா, 1991 - க்ஷனா - க்ஷணம், 1990 - சால் பாஸ், 1992 - லம்ஹே!

Image Source: Sridevi / Blogspot

ஃபேஷன் ஐகான்!

ஃபேஷன் ஐகான்!

இந்திய நடிகைகளில் அன்று முதலே இன்று வரை ஒரு பெரிய ஃபேஷன் ஐகானாக திகழ்ந்து வந்தவர் ஸ்ரீதேவி அவர்கள். அவர் செய்யாதே ஸ்டைலே இல்லை, அவர் உடுத்தாதே ஃபேஷன் உடைகளே இல்லை எனலாம். மேலும், பல ஃபேஷன் டிசைனர்களின் நிகழ்சிகளில் ராம்ப் வாக் மற்றும் ஷோஸ்டாப்பராக வந்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

மீண்டும் சர்ச்சை...

மீண்டும் சர்ச்சை...

சர்ச்சைக்குள்ளான ஸ்ரீதேவியின் பிளாஸ்டிக் சர்ஜரி தோற்றம்.

சென்ற மாதம் நடிகை ஸ்ரீதேவி ஒரு விழாவில் பங்கேற்க தனது கணவருடன் வந்திருந்தார்.அப்போது அவரது இதழ் பகுதியானது மிகவும் வீங்கிய நிலையில் இருந்தது. இதை மீடியாக்கள் மீண்டும் ஸ்ரீதேவி பிளாஸ்டிக் சர்ஜரி முயற்சித்துள்ளார். அதன் விளைவே இப்படியான தாக்கத்தை இதழில் ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் பரப்பினர்.

ஆனால், அப்படி ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி தான் செய்துக் கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் ஸ்ரீதேவி.

Image Source: Youtube

ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. ஜான்வி கபூரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் சில ஊடகங்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

ஸ்ரீதேவிக்கு இருந்தே அதே மூக்கு சர்ச்சையில் தான் ஜான்வி கபூரும் சிக்கியிருக்கிறார். அவரது பழைய புகைப்படம் மற்றும் சமீபத்திய புகைப்படங்களில் மூக்கில் இருக்கும் வித்தியாசத்தை மிக எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.

டயட் பில்ஸ்!

டயட் பில்ஸ்!

ஸ்ரீதேவி தான் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்காகவும், அதிகம் பசிக்காமல் இருப்பதற்காகவும் டயட் பில்ஸ் எடுத்து வந்தார் என்று சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. ஆனால், இதற்கு எல்லாம் ஆரம்பக் காலம் முதலே இல்லை என்ற விளக்கம் ஸ்ரீதேவி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தன. அவர் தனது தீவிர டயட் மூலமாக மட்டுமே தனது அழகை பாதுகாத்து வந்தார் என்றும் கூறினார்கள்.

ஆனால், அவரது திடீர் மரணமும், கார்டியாக் அரஸ்ட் என்ற பீதியும், அவரது பழங்கால சர்ச்சைகளுடன் முடிச்சு போட வைக்கின்றன.

தொடருமா?

தொடருமா?

பிளாஸ்டிக் சர்ஜரி, செயற்கையாக கொழுப்பை கரைப்பது, பசிக்காமல் இருக்க, உடல் எடை கூடாமல் இருக்க டயட் பில்ஸ் எடுத்துக் கொள்வது என உலக அளவில் பல பிரபலங்கள் பல முறைகளை பின்பற்றுகிறார்கள்.

ஆனால், ஆரம்பக் காலத்தில் எந்த விளைவுகள் இல்லை எனிலும், அவர்களது இறப்பு மட்டும் திடீரென நிகழ்கிறது. இதை மைக்கல் ஜாக்சன் முதல் ஸ்ரீதேவி வரை நாம் கண்டுவிட்டோம். இனியும், இது தொடருமா? என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Controversial Sridevi Plastic Surgery and Her Various Looks!

Controversial Sridevi Plastic Surgery and Her Various Looks!