For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அறியாத இந்திய அழகிகளின் மறுபக்கம்!

இதுவரை பல்வேறு அழகிப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்தியப் பெண்களின் தொகுப்பு

|

பெண்கள் அழகானவர்கள். அதிலும் இந்தியப் பெண்கள் மிகவும் அழகு என்று எல்லாருக்கும் பறைசாற்றியது உலக அழகிப் போட்டிகள் நடைபெற்றபோதுதான்.

அதுவரை ஊரைத்தாண்டாத பெண்களுக்கு, தன்னம்பிக்கையோடு உலகை சுற்றி வரும் மனப்பான்மையும், பல்வேறு போட்டிகளில் பங்குபெறும் ஆவலும் அதிகரித்தது.

காலங்காலமாக பல இடங்களில் பெண்களின் அழகை வர்ணித்திருக்கிறோம். வர்ணனைகளில் மட்டுமல்ல உண்மையிலேயே இந்தியாவில் அழகிகள் அதிகம் அதை உலகமே ஒப்புக் கொண்டதற்கான சான்று தான் இது.

இதுவரை பல்வேறு அழகிப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்தியப் பெண்களின் தொகுப்பினை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இந்திராணி ரகுமான் :

இந்திராணி ரகுமான் :

சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் இவர். 1952 ஆம் ஆண்டு, உலக அழகிப் போட்டியில் பங்கேற்றப் போது இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர். ஒடிசி நடனக்கலையை மேற்கு வங்காளத்தில் அறிமுகப்படுத்தினார்.

Image Courtesy

ரைட்டா ஃபாரியா :

ரைட்டா ஃபாரியா :

சர்வதேச அழகிப்போட்டியில் பட்டம்பெற்ற முதல் இந்தியப் பெண். 1966 ஆம் ஆண்டில் மிஸ் வோர்ல்ட் பட்டம் வாங்கினார். மருத்துவத்துறையில் ஆர்வத்துடன் இருந்த ரைட்டா சினிமா வாய்புகளை எல்லாம் தவிர்த்து மருத்துவத்திலும் தேர்ச்சிப் பெற்றார். மிஸ் வோல்ட் போட்டியின் ஒன்பது நடுவர்களில் ஏழு பேர் வரையிலும் ரைட்டாவை முன்மொழிந்தனர். இதுவும் ஒரு சாதனையாகவே பார்க்கப்பட்டது.

Image Courtesy

குல் பனான்ங் :

குல் பனான்ங் :

1999 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்ற இவர் திரையுலகிலும் காலோச்சினார். பயிற்சி பெற்ற விமான ஓட்டியான இவர் பிட்னஸ் ஆப்ஸ் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் அரசியலிலும் கால்பதித்தார்.

Image Courtesy

எஸ்தர் தஸ்வானி :

எஸ்தர் தஸ்வானி :

இவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த தன்னம்பிக்கை அழகி. பல்வேறு நிறுவனங்களுக்காக மேடைகளில் ஒய்யார நடை நடந்து காண்போரின் கவனத்தை ஈர்த்தவர்.

Image Courtesy

சுஸ்மிதா சென் :

சுஸ்மிதா சென் :

பெண்கள் குறித்த பழமையான கற்பிதங்களை உடைத்தெரிந்த சுஸ்மிதா சென் 1994 ஆம் ஆண்டு உலக அழகிக்கான அலங்கார அணிவகுப்பில் வெற்றிப்பெற்றார். அதேயாண்டு மிஸ் யூனிவர்ஸாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் இந்தியவர் இவரே. இரண்டு குழந்தைகளையும் தத்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

 ஐஸ்வர்யா ராய் :

ஐஸ்வர்யா ராய் :

1994 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் இந்தியாவில் இரண்டாம் பெற்ற ஐஸ்வர்யா, அடுத்த நடைப்பெற்ற உலக அழகிப் போட்டியில் வெற்றிப்பெற்று பாலிவுட்டின் தவிர்க்க முடியாத திரைப் பிரபலமாகிவிட்டார்.

டயானா ஹைடன் :

டயானா ஹைடன் :

மிஸ் வோர்ல்ட் பட்டத்தை கைப்பற்றிய மூன்றாவது இந்தியர் டயானா. மிஸ் இந்தியா, மிஸ் வோர்ல்டு என பல பட்டங்களை ஜெயித்தாலும் இவரால் திரையிலகில் காலோச்ச முடியவில்லை.

 யுக்தா முகி :

யுக்தா முகி :

1999 ஆம் ஆண்டிற்க்கான மிஸ் வோர்ல்ட் போட்டியின் வெற்றியாளர். இருபத்திரெண்டு வயதில் வெற்றியை சுவைத்த இவர் சிறிது காலம் சினிமாவிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

ப்ரியங்கா சோப்ரா :

ப்ரியங்கா சோப்ரா :

2000 ஆம் ஆண்டின் மிஸ் வோர்ல்ட் ப்ரியங்கா சோப்ரா. இவரின் முன்னோடிகளைப் போலவே சினிமாவில் கால்பதித்தார். ஆனால் தொடர்ந்து சறுக்கலையே சந்தித்து வந்தவர் அவரது கடின உழைப்பால் அதனையும் தன் வசப்படுத்திக் கொண்டார்.

லாரா தத்தா :

லாரா தத்தா :

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வாங்கிய இரண்டாவது இந்தியர் இவர். பாலிவுட்டிலும் தன் திறமையை நிரூபித்தார்.

தியா மிர்சா :

தியா மிர்சா :

2000 ஆம் ஆண்டு. மிஸ் யுனிவர்ஸாக லாரா தத்தா, மிஸ் வோர்ல்டாக லாரா தத்தா, மிஸ் ஏசியா பெசிபிக்காக தியா மிர்சா என மூன்று வெற்றிகளை அள்ளியது. மிஸ் ஏசியா பசிபிக் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் தியா.

நிகோலே ஃபாரியா :

நிகோலே ஃபாரியா :

பெங்களூரைச் சேர்ந்த மாடல் அழகி. 2010 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauties From India

List of Miss World,Miss Universe And Miss Earth Title Winners From India
Desktop Bottom Promotion