Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கேன்ஸ் விழாவின் 3 ஆவது நாளில் வெள்ளை உடையில் கவர்ச்சியை தெறிக்கவிட்ட மிருணால் தாகூர்..!
Cannes 2023: தற்போது பிரான்ஸில் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த மிகப்பெரிய திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அதில் முதல் மற்றும் இரண்டாம் நாளில் சாரா அலி கான், மிருணால் தாகூர், ஊர்வசி ரவுடேலா ஆகியோர் பல அழகான மற்றும் செக்ஸியான ஆடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தனர்.

இந்நிலையில் கேன்ஸ் விழாவின் 3 ஆவது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். பல ஆண்டுகளாக தவறாமல் கேன்ஸி விழாவில் கலந்து வரும் ஒரு இந்திய பிரபலம் தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் ஒவ்வொரு ஆண்டுமே மனதைக் கவரும் பல அட்டகாசமான ஆடைகளை அணிந்து வருவார்.
அந்த வகையில் கேன்ஸ் விழாவின் மூன்றாம் நாளில் முதன்முதலாக கலந்து கொள்ளும் போது சற்று வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அதேப் போல் மிருணால் தாகூர் கவர்ச்சியைத் தெறிக்கவிடும் வகையிலான ஆடையை அணிந்து வந்திருந்தார்.
அதுமட்டுமின்றி, ஊர்வசி ரவுடேலா அனைவரது கண்களையும் கவரும் படி, பொம்மை போன்ற தோற்றத்தைத் தரும் உடையணிந்ததோடு, வித்தியாசமான மேக்கப்பை போட்டு வந்திருந்தார். கேன்ஸ் விழாவின் 3 ஆவது நாள் சிவப்பு கம்பளத்தில் நடந்த இந்திய பிரபலங்களின் ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஐஸ்வர்யா ராய் பச்சன்
76 ஆவது கேன்ஸ் விழாவில் முதல்முறையாக கலந்து கொள்ளும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் சோஃபி கவுச்சர் லேபிளில் இருந்து சற்று வித்தியாசமான தோற்றத்தைத் தரும் சில்வர் கவுனை அணிந்து வந்தார். இந்த கவுனானது தலையை மூடியவாறான ராட்சத ஹூட் கொண்டிருந்தது. ஐஸ்வர்யா ராய் இந்த கவுனிற்கு அழகான மேக்கப் போட்டு, உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.
மிருணால் தாகூர்
நடிகை மிருணால் தாகூர் கேன்ஸ் விழாவில் இரண்டாவது முறையாக கலந்து கொள்ளும் போது, பார்ப்போர் அனைவரும் வாயைப் பிளக்கும் வகையில் ஒரு செக்ஸியான வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார். மிருணால் அணிந்து வந்த கவுனானது ஃபல்குனி ஷேன் பீக்காக் வடிவமைத்தது. இந்த கவுன் பல கட்-அவுட்டுகளைக் கொண்டதால், இவரது கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது. அதுவும் இந்த கவுனிற்கு மிருணால் அணிந்து வந்த காதணி இவரது அழகை மேம்படுத்திக் காட்டியது.
ஊர்வசி ரவுடேலா
கேன்ஸ் விழாவில் தொடர்ந்து 3 நாட்கள் ஊர்வசி ரவுடேலா கலந்து வருகிறார். முதல் இரண்டு நாட்கள் அழகான கவுனில் கலந்து கொண்ட ஊர்வசி, மூன்றாம் நாளிலும் அழகான நீலம் மற்றும் வெள்ளை கலந்த ஸ்ட்ராப்லெஸ் பால் கவுனில் கலந்து கொண்டார். இந்த உடையில் இவர் டிஸ்னி பிரின்சஸ் போன்று காணப்பட்டார். அதுவும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் லிப்ஸ்டிக், இவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிக்காட்டியது.



Click it and Unblock the Notifications