Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நட்சத்திர ஸ்டைல்: ஹைதரில் தபுவின் அழகிய காஷ்மீரி தோற்றம்!!!
சுத்தமான நயத்துடன் கூடிய அழகு மற்றும் அப்பாவித்தனம் என்றால் அது எப்போதுமே தபு தான். பாலிவுட்டில் வெற்றிகரமான சினிமா பாதையை கடந்து வந்து கொண்டிருப்பவர் இவர். குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்புடைய நடிகை இவர். சாந்தினி பார் மற்றும் காத் ஆகிய திரைப்படங்களில் இவருடைய மிகச்சிறந்த நடிப்பை யாரும் மறந்திருக்க முடியாது.

வெள்ளித்திரையில் இருந்து சற்று காலம் விலகியிருந்த அவர், ஹைதர் என்ற திரைப்படத்தின் மூலம் அற்புதமான முறையில் மீண்டும் நமக்காக திரையில் தோன்றியுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற நாடகத்தின் அடிப்படையிலான படம் தான் ஹைதர். படத்தில் தபு தன்னுடைய மைத்துனனுடன் வைத்திருக்கும் ரகசிய உறவைப் பற்றி தன் மகனான ஷாஹித் அறிந்தவுடன், பழி வாங்க திட்டமிடுகிறார்.
மேலும் காஷ்மீரில் நடந்த கிளர்ச்சி நிகழ்வுகளைப் பற்றியும் இந்த திரைப்படம் காண்பிக்கிறது. இத்தகைய சக்தி வாய்ந்த பாத்திரத்தை செய்யும் அளவிற்கு தபு எவ்வளவு தைரியமானவர் என்பதை இது நிரூபிக்கிறது. இந்த படம் காஷ்மீரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுள்ளதால், படம் முழுவதும் தபுவை நாம் பல்வேறு காஷ்மீரி ஆடைகளில் காணலாம். ஸ்டைல் மற்றும் சௌகரியத்துடன் கூடிய காஷ்மீரி ஆடைகளை தான் இவர் பெரும்பாலும் அணிந்திருந்தார். படம் முழுவதும் இந்த வகை சல்வார்களை அணிய அவர் விரும்பினார் என்பது இதற்கு சான்று. இன்று, ஸ்டார் சிக்னேச்சர் ஸ்டைல் பிரிவில், ஹைதர் திரைப்படத்தில் தபுவின் காஷ்மீரி ஆடைகளை பற்றி பேசுவோம்.
முதலில் அவருடைய சிகப்பு நிற ஆடை. ஒரு காட்சியில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட அழகிய சிகப்பு நிற ஆடையை தபு அணிந்திருப்பார். தன் தாயின் கள்ள உறவிற்கு பழி தீர்க்க நினைக்கும் போது, ஷாஹித் கபூர் தபுவின் அழகில் மெய்மறந்து போகும் காட்சியை ஞாபகப்படுத்தி பாருங்கள். அந்த சிகப்பு ஆடையை பற்றி தான் கூறுகிறோம். இனிமையான சிகப்பு நிறத்தில் மயக்கும் விதத்தில் இருந்தார்.
இரண்டாவதாக, பச்சை நிற ஆடையில் தபு தோன்றும் காட்சி. படத்தில் வரும் இந்த காட்சி மிகவும் தீவிரம் வாய்ந்தது; அவருடைய ஆடையும் கூட தான். இந்த இந்திய ஆடை மிகவும் சிக்கலான டிசைனை கொண்டிருந்தது. இந்த பச்சை பட்டு ஆடையில் அவர் மிகவும் அழகாக இருந்தார். இந்த ஆடை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தபுவிற்கான சிறந்த தேர்வாக அமைந்தது இது.
கடைசியாக, திரைப்படத்தில் ஷாஹித்துடன் உரையாடிக் கொண்டே நடக்கும் ஒரு காட்சியில் தபுவின் தோற்றம். இக்காட்சியில் நீண்ட, மெரூன் கஃப்தான் வகை ஆடையுடன் நீல நிற துப்பட்டாவை அணிந்திருப்பார். இது அவ்வளவு பொருத்தமாக இல்லாமல் இருந்தாலும் கூட தபுவிற்கு எடுப்பாகவே இருந்தது.
ஹைதர் படத்தில் தபுவின் அழகிய காஷ்மீரி தோற்றத்தைப் பற்றி பார்த்தீர்கள் தானே. உங்களுடைய கருத்துக்களை பகிரவும். மேலும் உங்களுக்கு விருப்பமான நட்சத்திரங்களை பற்றி சிக்னேச்சர் ஸ்டைலில் நீங்கள் படிக்க தவறியிருந்தால் அவற்றையும் படியுங்கள்.



Click it and Unblock the Notifications


