ஐ.ஐ.எப்.ஏ விருது விழாவில் ரசிகர்களை சிலிர்க்க வைத்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஹைத்ராபாத்தில் உள்ள கச்சிபவ்லி அரங்கத்தில் கடந்த ஜனவரி 24-ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவான ஐ.ஐ.எப்.ஏ நடந்தது. இதில் இந்தியாவின் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். எப்போதும் போல இந்த வருடமும் சில பிரபலங்களின் உடை அலங்காரங்கள் கொஞ்சம் கண்ணை கட்டும்படி தான் இருந்தது.

குறிப்பாக விழாவை தொகுத்து வழங்கிய ரெஜினா கேசென்ட்ராவின் உடை பிரபலங்களையே சில நொடிகள் அவரை உற்று நோக்க வைத்தது. ஊதா நிற உடையில் முக்கால்வாசி கண்ணாடி போல டிரான்ஸ்பரன்சியாக தான் இருந்தது அவரது உடை.

ஏதோ ஃபேஷன் ஷோவில் பங்கெடுக்க வந்த மாடலை போல தான் அவர் விழா மேடையில் தோன்றினார். மேலும், இதில் கலந்துக் கொண்ட பிரபலங்களின் தொகுப்பில் ஒரு பகுதியை இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சார்மி

சார்மி

சப்யாசச்சி முகர்ஜி எனும் ஆடை வடிவமைப்பாளர் சார்மி அணிந்து வந்த உடையை டிசைன் செய்திருந்தார். கருப்பு வண்ண உடையில் வெள்ளை தேவதை போல தோற்றமளித்தார் சார்மி.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

ஃபால்குனி அண்ட் ஷேன் பீக்காக் (Falguni And Shane Peacock) எனும் டிசைனர்ஸ் ஸ்ரேயாவின் ஆடையை வடிவமைத்திருந்தார்கள். ஸ்லீவ்லெஸ் வெள்ளை நிற கவுனில் ப்ளோரா டிசைன்கள் கொண்டு எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது இந்த உடை.

ரெஜினா கேசென்ட்ரா

ரெஜினா கேசென்ட்ரா

இரண்டாம் நாள் இந்த விழாவை தொகுத்து வழங்கிய ரெஜினா கேசென்ட்ராவின் உடை தான் பல ஃபேஷன் விரும்பிகளின் கண்களை களவாடியது என்று கூறலாம். மிகவும் செக்ஸியான தோற்றத்தில் உலா வந்தவர் இவர் தான். இவரது உடல் வாகிற்கு அந்த ஊதா வண்ண டிரான்ஸ்பரன்ட் உடை எடுப்பாகவும் இருந்தது.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதியும் ஸ்லீவ்லெஸ் கவுனில் தான் விழாவிற்கு வந்திருந்தார். ஏறத்தாழ புகைப்பட கருவிகள் ஓரிரு நொடிகள் பட்டாம்பூச்சி போல இவர் முன் படபடத்துக் கொண்டே இருந்தன.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

இளம் ரோஜா நிற உடையில் சிவப்பு வண்ண பூக்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. படையப்பாவில் இவர் கூறிய வசனம் இவருக்கே பொருந்தும் வண்ணம். வயதானாலும், ஸ்டைலாக வந்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

பூனம் கவுர்

பூனம் கவுர்

தென்னிந்திய நடிகை பூனம் கவுர் பழுப்பு மற்றும் கருப்பு வண்ணத்திலான ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்திருந்தார். கழுத்து, தோள்பட்டை பகுதியில் டிரான்ஸ்பர்ன்ஸ் ப்ளோரா டிசைன்ஸ் இடம்பெற்றிருந்தது..

ப்ரீத்தி சிங்

ப்ரீத்தி சிங்

தனது பின்னழகை மொத்தமாக வெளிகாட்டும் வண்ணமாக ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து வந்து ரசிகர்களை கவர்ச்சி கடலில் தள்ளினார் ப்ரீத்தி சிங்

இஷா தல்வார்

இஷா தல்வார்

பச்சை வண்ண சேலையும், கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ப்ளௌஸ் அணிந்து வந்திருந்தார் இஷா. எளிமையாக இருப்பினும், அவரது உடல் வாகிற்கு மிகவும் எடுப்பாகவும், அழகாகவும் இருந்தது அவர் அணிந்து வந்திருந்த சேலை.

நிகித்தா

நிகித்தா

"கோடான கோடி" நிகித்தா மெல்லிய சாண்டல் நிற எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்த ஸ்லீவ்லெஸ்

ஃபேஷன் சேலை அணிந்து வந்திருந்தார்.

பார்பி கேள் தமன்னா

பார்பி கேள் தமன்னா

தமன்னா பச்சை வண்ண ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். கடந்த சில விழாக்களில் சர்ச்சை எழுப்பும் வகையில் உடை அணிந்து வந்த இவர். இந்த விழாவில் ஓர் பார்பி பொம்மையை போல் தோற்றமளித்தார்.

சுவாதி

சுவாதி

"சுப்ரமணியபுரம்" சுவாதி கருப்பு வண்ண பேன்ட் மற்றும் வெள்ளை நிற ஓவர் கோட் அணிந்து வந்திருந்தார். ரெட்டை ஜடை எல்லாம் இட்டுக்கொண்டு பள்ளி செல்லும் பெண் போல தோற்றமளித்தார் சுவாதி.

ரெஜினா

ரெஜினா

சிவப்பு மற்றும் கருப்பு வண்ண ஃபேஷன் ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார் "கேடி பில்லா, கில்லாடி ரங்கா" நாயகி ரெஜினா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sizzling Celebrities In IIFA 2016 Award Function

Take look on Sizzling Celebrities attended IIFA 2016 Award Function,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter