Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சர்வதேச எம்மி விருது விழாவிற்கு செக்ஸியான உடையில் வந்து மிரட்டிய ராதிகா ஆப்தே!
2019 ஆம் ஆண்டின் சர்வதேச எம்மி விருது விழாவிற்கு நடிகை ராதிகா ஆப்தேவுடன், அப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். பொதுவாக ராதிகா ஆப்தே இந்தியாவிலேயே பல செக்ஸியான உடையில் ரசிகர்களை அசர வைப்பார்.
சமீபத்தில் நியூயார்க்கில் சர்வதேச எம்மி விருது விழா நடைபெற்றது. இது சர்வதேச அளவில் சின்னத்திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்தியாவின் சார்பில் இந்த விருது விழாவிற்கு இரண்டு விருதுகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த நடிகைக்கான விருதிற்கு 'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்னும் வெப் சீரியஸில் நடித்த ராதிகா ஆப்தேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஆகவே 2019 ஆம் ஆண்டின் சர்வதேச எம்மி விருது விழாவிற்கு நடிகை ராதிகா ஆப்தேவுடன், அப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். பொதுவாக ராதிகா ஆப்தே இந்தியாவிலேயே பல செக்ஸியான உடையில் ரசிகர்களை அசர வைப்பார். அதிலும் இது சர்வதேச விருது விழா, எப்படிப்பட்ட உடையில் வந்திருப்பார் என்று நீங்களே சற்று நினைத்துப் பாருங்கள்.
உங்களுக்கு 2019 எம்மி விருது விழாவிற்கு ராதிகா ஆப்தே எப்படிப்பட்ட உடையில் வந்திருந்தார் என்பதை தான் உங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம். மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரை தைரியமான பெண்மணியாக காட்டியது.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
ராதிகா ஆப்தே அணிந்து வந்தது ஐரிஸ் வான் ஹெர்பன் கவுன். இது ஒரு ஸ்ட்ராப்லெஸ் உடை. மேலும் இந்த உடையானது ஒன்றிற்கு இரண்டு முறை உற்று பார்க்கும் வகையில், செக்ஸியாக இருந்தது.

மஞ்சள் மற்றும் பிங்க் நிறங்கள்
ராதிகா ஆப்தே அணிந்திருந்த கவுனில் மஞ்சள் மற்றும் பிங்க் நிறங்களின் மாறுபட்ட வண்ணங்கள் தெறிக்கப்பட்டிருந்தது. இது இந்த உடையை மிகவும் சூப்பராக வெளிக்காட்டியது.

மேக்கப்
ராதிகா ஆப்தே இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப்பான உதட்டிற்கு அடர் பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு கண் மையுடன் பிங்க் நிற ஐ-ஷேடோ போட்டு, லேசாக பிளஷ் போட்டிருந்தது, அவரை ஒரு தைரியமான பெண்மணி போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

'நோ' ஆபரணங்கள்
பொதுவாக இந்திய பிரபலங்கள் ஆபரணங்களால் தான் பலரை ஈர்ப்பார்கள். ஆனால் ராதிகா ஆப்தே எந்த ஒரு ஆபரணத்தையும் அணியாமல் வந்திருந்தார். இது அவரை அந்த உடையில் சிறப்பாக காட்டியது.

கோல்டன் ஹீல்ஸ்
ராதிகா ஆப்தே, தான் அணிந்து வந்த உடைக்கு பொருத்தமாக கால்களில் கோல்டன் ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார். இதுவும் அவருக்கு அற்புதமாக இருந்தது.
உங்களுக்கு ராதிகா ஆப்தேவின் இந்த தோற்றம் மற்றும் உடை பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
