Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
இசை விருது விழாவிற்கு கணவருடன் தொடை தெரியும் செக்ஸியான உடையில் வந்த பிரியங்கா சோப்ரா!
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாஃப்ட் தியேட்டரில் பில்போர்டு மியூசிக் விருது விழா நடைபெற்றது. இந்த இசை இசை விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் பாடகர் நிக் ஜோனஸ் உடன் சிவப்பு கம்பளத்தில் ஜோடியாக வந்தார்.
உலகளாவிய பிரபலமான பிரியங்கா சோப்ரா, தனது நடிப்பால் மட்டுமின்றி, தைரியத்தாலும் அனைவராலும் பேசக்கூடியவர். அதோடு இவரது ஸ்டைலும், இவர் உடுத்தும் உடைகளும் கண்களைக் கவரும் வண்ணம் இருக்கும். இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, அட்டகாசமான மற்றும் தைரியமான சில உடைகளால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாஃப்ட் தியேட்டரில் பில்போர்டு மியூசிக் விருது விழா நடைபெற்றது. இந்த இசை இசை விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் பாடகர் நிக் ஜோனஸ் உடன் சிவப்பு கம்பளத்தில் ஜோடியாக நடந்து வந்தார். கீழே பில்போர்டு மியூசிக் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா ஜோனஸ் அணிந்து வந்திருந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டோல்ஸ் & கபனா உடை
நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் பில்போர்டு மியூசிக் விருது விழாவிற்கு டோல்ஸ் & கபனா கலெக்ஷனில் இருந்து ஒரு மின்னும் தங்க நிற ஷீர் உடையை அணிந்து வந்திருந்தார். இந்த ஷீர் உடையானது ஒட்டுமொத்த உடலும் தெரியுமாறு இருந்ததுடன், தொடை முழுவதும் தெரியும் வண்ணம் தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்தது.

டீப் லோ நெக்
பில்போர்டு மியூசிக் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுத்து அணிந்து வந்த தை-ஹை ஸ்லிட் கவுனின் முன்புறத்தின் மேல் எடுத்துக் கொண்டால், கவர்ச்சியை கூடுதலாக்கிக் காட்டும் வகையில் உடையானது டீப்-லோ நெக் கொண்டிருந்தது. இதனால் பிரியங்காவின் கவர்ச்சி ஒருபடி மேலோங்கி காணப்பட்டது எனலாம்.

மெட்டாலிக் பெல்ட்
அதோடு பிரியங்கா சோப்ரா இந்த உடைக்கு கூடுதலாக வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில், கோல்டன் நிற மெட்டாலிக் வகை பட்டையான பெல்ட்டை இடுப்பில் அணிந்திருந்தது, அவரது உடல் வடிவமைப்பை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியது எனலாம்.

பிரியங்காவின் மேக்கப்
பிரியங்கா சோப்ரா இந்த உடைக்கு மேற்கொண்டிருந்த மேக்கப் பற்றி கூற வேண்டுமானால், இவர் கண்களுக்கு மின்னும் ஐ-ஷேடோ, கண் மை மற்றும் கண்களின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட மஸ்காரா போட்டிருந்தார். அதோடு உதடுகளுக்கு உடைக்கு பொருத்தமான ப்ரௌன் லிப்ஸ்டிக் மற்றும் ஹைலைட்டரும் போட்டிருந்தார்.

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்
பிரியங்காவின் ஹேர் ஸ்டைல் என்றால், இவர் நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். ஆபரணங்கள் என்றால், காதுகளுக்கு புல்காரி காதணியையும், கைக்கு புல்காரி பிரேஸ்லெட்டையும் அணிந்திருந்தார். அதோடு உடைக்கு பொருத்தமான கோல்டன் நிற ஹை ஹீல்ஸ் காலணியையும் அணிந்து வந்திருந்தார்.

பாடகர் நிக் ஜோனஸ் தோற்றம்
பாப் பாடகரும், பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோனர் இந்த மியூசிக் விருது விழாவிற்கு வித்தியாசமான பச்சை நிற ஃபென்டி சூட் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
