Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா!
2020 ஜீ சினி விருது விழாவிற்கு நயன்தாரா பார்டர் கொண்ட அடர் மெரூன் நிற கைத்தறி புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு மேட்ச்சாக முழங்கை அளவு நீளமுள்ள ஜாக்கெட் அணிந்து வந்தது சிறப்பாக இருந்தது.
சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான ஜீ சினி விருது விழா சென்னையில் நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான விருது விழாவில் ஏராளமான முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருது விழாவில் விருதுகள் மட்டுமின்றி, பிரபலங்கள் அணிந்து வரும் உடை மற்றும் ஆபரணங்களும் தான் பேசப்படும். அந்த வகையில் பல நடிகைகள் பல அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர்.
MOST READ: மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்!
லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் வந்திருந்தார். அதுவும் புடவையில் அற்புதமாக வந்திருந்தார். உங்களுக்கு ஜீ சினி விருது விழாவிற்கு நயன்தாரா மேற்கொண்டு வந்த ஸ்டைல் மற்றும் அணிந்து வந்த உடையை காண வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

கைத்தறி புடவை
2020 ஜீ சினி விருது விழாவிற்கு நயன்தாரா பார்டர் கொண்ட அடர் மெரூன் நிற கைத்தறி புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் மேட்ச்சாக முழங்கை அளவு நீளமுள்ள ஜாக்கெட் அணிந்து வந்தது சிறப்பாக இருந்தது.

மேக்கப்
நயன்தாரா இந்த புடவைக்கு சற்று அளவாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதுவும் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப், உதட்டிற்கு நியூடு நிற லிப் கிளாஸ் போட்டு, நெற்றியில் வட்ட வடிவ மெரூன் நிற பொட்டு வைத்துக் கொண்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், சைடு உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு கூந்தலின் முனையில் லேசாக கர்ல்ஸ் செய்து கொண்டு வந்திருந்தார். இது நயன்தாராவிற்கு புடவையில் சிறப்பான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

ஆபரணங்கள்
நயன்தாரா இந்த புடவைக்கு தங்க ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார். அதுவும் காதுகளுக்கு எதுவும் அணியாமல், கைக்கு வளையல், கழுத்தை ஒட்டியபடியான நெக்லேஸ் மட்டும் அணிந்து வந்திருந்தார்.

இரண்டு விருதுகள்
நயன்தாரா 2020 ஜீ சினி விருது விழாவில் இரண்டு விருதுகளைப் பெற்றார். ஒன்று ஸ்ரீதேவி விருது மற்றொன்று சிறந்த நடிகைக்கான விருது. இது அந்த இரண்டு விருதுகளுடன் நயன்தாரா போட்டோவிற்கு கொடுத்த போஸ்.

விக்னேஷ் சிவனுடன் நயன்
இது காதலன் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செல்பீ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.



Click it and Unblock the Notifications
