நடிகை பாவனாவின் திருமண போட்டோக்களை பாத்திருக்கீங்களா...?

Posted By:
Subscribe to Boldsky

மலையாளம் மற்றும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை பாவனா. நடிகைகளுள் இவர் மிகவும் க்யூட்டான தோற்றத்தைக் கொண்டவர். இதனாலேயே இவர் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். சமீபத்தில் இவருக்கு கேரளாவில் உள்ள திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. இவர் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை பாவனாவின் திருமணம் மிகவும் சிம்பிளாகத் தான் நடந்தது. இருப்பினும் இவர் மணமகள் அல்லவா, எனவே இவர் அதற்கு ஏற்ப கச்சிதமாகவும் அம்சமாகவும் காணப்பட்டார். பாவனா ஏற்கனவே க்யூட், அதிலும் திருமணத்திற்கு அவர் மேற்கொண்டிருந்த மேக்கப் மற்றும் ஸ்டைல், அவரது தோற்றத்தை மிகவும் சிறப்பாக காட்டியது.

இங்கு திருமணத்தின் போது பாவனா அணிந்திருந்த புடவையும், மேற்கொண்டிருந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குரோம் மஞ்சள் நிற புடவை

குரோம் மஞ்சள் நிற புடவை

பாவனா திருமண நாளன்று குரோம் மஞ்சள் நிற புடவை அணிந்திருந்தார். இவர் அணிந்திருந்த புடவை முழுவதும் பல நுண்ணிய எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. இந்த புடவையின் பார்டர் மற்றும் உடல் வித்தியாசமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜாக்கெட்

ஜாக்கெட்

பாவனா திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையை விட, அவர் அணிந்திருந்த ஜாக்கெட் கண்களைப் பறிக்கும் வகையில் அழகாக வேலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. அதிலும் இந்த மஞ்சள் நிற ஜாக்கெட் புராண வடிவங்களைக் கொண்டிருந்ததோடு, மணிகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.

பாரம்பரிய ஆபரணங்கள்

பாரம்பரிய ஆபரணங்கள்

பாவனா தனது திருமணத்தன்று மஞ்சள் நிற புடவை மற்றும் ஜாக்கெட்டிற்கு பொருத்தமாக, அழகாக வடிவமைக்கப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட பாரம்பரிய தங்க ஆபரணங்களை அணிந்திருந்தார். அதில் நெக்லேஸ், காதணிகள், நெற்றிச்சுட்டி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஹேண்ட்சம் மணமகன்

ஹேண்ட்சம் மணமகன்

பாவனாவை திருமணம் செய்யும் நவீன் கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், திருமணத்தன்று மலையாள மணமகன் போன்று மிகவும் ஹேண்ட்சம்மாக காணப்பட்டார். அதிலும் இவர் மலையாள ஆண் போன்று, பட்டு வேட்டி அணிந்து, மேலே பட்டு துண்டு போர்த்தியிருந்தது, அவரை அச்சுஅசல் மலையாளியாகவே காண்பித்தது.

மெஹந்தி தோற்றம்

மெஹந்தி தோற்றம்

பாவனாவின் திருமணத்திற்கு முன் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது பாவனா அழகிய மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் லெஹெங்கா அணிந்திருந்தார். இவர் அணிந்திருந்த லெஹெங்காவின் நெக்லைன் மிகவும் அற்புதமாக பிரகாசமான வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த உடைக்கு இவர் அணிந்திருந்த காதணி உடைக்கு பொருத்தமாக இருந்தது.

க்யூட் லுக்

க்யூட் லுக்

பாவனா தனது திருமணத் தோற்றத்தில் கூட தனது க்யூட் தனத்தைக் காண்பிக்கிறார். இது மெஹந்தி நிகழ்ச்சியின் போது, கண்ணாடி அணிந்து கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Malayalam Actress Bhavana Menon Wedding Looks

Malayalam actress Bhavana got married in a simple yet a stylish dreamy way. Have a look.
Subscribe Newsletter