கோல்டன் குளோப் விருது விழாவில் அணிந்து வந்த உடையால் தர்ம சங்கடத்திற்கு உள்ளானவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky
கோல்டன் குளோப் விருது விழாவில் தர்ம சங்கடத்தை சந்தித்த பிரபலங்கள்- வீடியோ

விருது விழாக்களில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்களை அழகாக வெளிக்காட்ட பல அழகிய கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி அணிந்து வரும் போது, அவர்களுள் சிலரது உடை எதிர்பாராத விதமாக நழுவி, அவர்களை அந்த விழாவில் பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிவிடுகிறது.

சமீபத்தில் 75 ஆவது கோல்டன் குளோப் விருது விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது தனித்துவமான ஸ்டைலை வெளிக்காட்டும் விதமாக ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இந்த வருடம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் அவ்வளவாக யாரும் சங்கடத்திற்கு உள்ளாகவில்லை.

இருப்பினும் ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களுள் சிலர் மறக்க முடியாத வகையில் பெரும் தர்ம சங்கடத்தை சிவப்பு கம்பளத்தில் சந்தித்துள்ளனர். இப்போது இதுவரை கோல்டன் குளோப் விருது விழாவில் சங்கடத்திற்கு உள்ளான பிரபலங்களின் தருணங்கள் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹேடன் பனெட்டியர்

ஹேடன் பனெட்டியர்

மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகையான ஹேடன் பனெட்டியர் 2011 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, மிகவும் லோ நெக் கொண்ட ட்ரான்ஸ்லுசென்ட் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த நடிகை அணிந்து வந்த உடையால் அவரது நிப்பிள் பேடுகள் நன்கு புலப்பட்டது. இதனால் இவர் சற்று சங்கடத்திற்கு உள்ளானார்.

ஜெனிபர் அனிஸ்டன்

ஜெனிபர் அனிஸ்டன்

ஜெனிபர் அனிஸ்டன் பாணி எப்போதுமே சற்று கம்பீரமான தோற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் 2015 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் எதிர்பாராத விதமாக தர்ம சங்கடத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஜெனிபர் தை-ஹை சைடு ஸ்லிட் கொண்ட கருப்பு நிற ஷீர் கவுன் அணிந்து வந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உள்ளாடை தெரிய நேரிட்டது. இருப்பினும் நாசூக்காக அதை சமாளித்துவிட்டார்.

கெல்லி ஆஸ்போர்ன்

கெல்லி ஆஸ்போர்ன்

கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, நடிகை கெல்லி ஆஸ்போர்ன் பின்புறம் ஜிப் கொண்ட கருப்பு நிற கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கும் தருணம், அவரது அழகிய கவுனின் ஜிப் கிழிந்துவிட்டது. நல்ல வேளை அவரது அருகே உடை மற்றும் மேக்கப் குழு இருந்தது. அவர்கள் கிழிந்த உடையை ஊசி நூலால் தைத்துவிட்டனர். இல்லாவிட்டால், என்ன ஆயிருக்கும்-ன்னு யோசிச்சுப் பாருங்க...

ஜூலியானே ஹஃப்

ஜூலியானே ஹஃப்

மிகவும் பிரபலமான நடிகையும், டான்ஸருமான ஜூலியானா 2013 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தார். இவர் அணிந்திருந்த உடையின் தொடைப் பகுதி மிகவும் இறுக்கமாக இருந்ததால், போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது, எதிர்பாராத விதமாக இறுக்கமான தொடைப்பகுதி கிழிந்துவிட, பெரும் அசிங்கத்தையும், சங்கடத்திற்கும் உள்ளானார்.

ராபின் ரைட்

ராபின் ரைட்

ஒருமுறை கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் கைகளைத் தூக்கியவாறு நடனம் ஆடிக் கொண்டிருக்கையில், ராபின் ரைட் அணிந்து வந்த உடையினால், அவரது நிப்புள் பேடுகள் நகர்ந்து வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. இதனால் இவர் பெரும் சங்கடத்திற்கு உள்ளானார்.

சாரா ஹைலண்ட்

சாரா ஹைலண்ட்

கோல்டன் குளோப் விருது விழாவில் கெல்லி ஆஸ்போர்ன் சந்தித்த சங்கடத்தைப் போன்றே சாரா ஹைலண்ட்டும் தான் அணிந்து வந்த கவுனின் ஜிப் பறந்துவிட, அங்குள்ள அழகு கலைஞர்களின் உதவியால், சந்திக்கவிருந்த மாபெரும் சங்கடத்தில் இருந்து தப்பித்துவிட்டார்.

ஈவா

ஈவா

2013 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் நடிகை ஈவா தான் தர்ம சங்கட தருணத்தில் சிக்கினார். அதுவும் போட்டோவிற்கு போஸ் கொடுக்க நடந்து வரும் போது, இவர் அணிந்து வந்த தை-ஹை ஸ்லிட் கவுன் நகர்ந்து, அவரை சிவப்பு கம்பளத்தில் பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

சோலி சேவினி

சோலி சேவினி

2010 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில், நடிகை சோலி சேவினி சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற வரும் போது, சோலி அணிந்து வந்த கவுன் மிகவும் அழகாக இருந்தது. இருப்பினும் அவரது கவுன் தட்டிவிட்டு மேடையில் தடுமாறி வந்ததால், அனைவரது முன்பும் சங்கடத்திற்கு உள்ளாகினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Major Wardrobe Malfunctions At The Golden Globe Awards

These wardrobe malfunctions are iconic at the Golden Globe Awards. Have a look.