இது உங்களுக்கே நியாயமா படுதாம்மா!

Posted By:
Subscribe to Boldsky

பிப்ரவரி மாத வோக் பத்திரிக்கையை பார்த்தவர்கள் தீபிகா படுகோனேவின் ஸ்டைலிஷ் லுக்கில் அசந்திருப்பீர்கள். பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிற கண்ணைக் கவரும் பளீச் வண்ணத்தில் தீபிகாவின் அசத்தலான மேக்கப் மற்றும் காஸ்ட்யூம்.

சமீபத்தில் தான் ராயல் லுக்கில் மிகவும் தோரணையுடன் பத்மாவதியாக நகைகள், அழகிய வேலைப்பாடுடைய ஆடைகளை அணிந்து கொண்டு மகாராணியாக காட்சியளித்த அந்த தீபிகாவா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறது இந்த லுக்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெயின்போ :

ரெயின்போ :

ஆஷிஷ் டிசைன் செய்திருந்த ரெயின்போ வண்ணத்தில் ஸ்குயின் சட்டையை அணிந்திருந்தார் தீபிகா. இவரது சட்டை க்ளிட்டரிங் தன்மையுடன் பளபளப்புடன் காணப்பட்டது. ஆஷிஷ் ஸ்குயின் கலெக்‌ஷ்ன்களுக்கு பெயர் பெற்றவர்.

இந்த உடையில் தீபிகா மிகவும் கவர்சியாக இருந்தார். இந்த ரெயின்போ ஸ்குயின் சட்டையுடன் அடர் சிகப்பு நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அதோடு உடைக்கு இன்னும் மெருகேற்ற டார்க் ரெட் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார்.

வண்ணங்கள்... :

வண்ணங்கள்... :

இதிலும் அதே போல பல வண்ணங்கள் இருக்கிறது. கேமிசோல் மல்டி கலர் ஸ்ட்ரிப் ஆடையை இதில் தீபிகா அணிந்திருந்தார். இந்த ஆடையை டிசைன் செய்தது டயானே வோன் ஃபர்ஸ்டன்பெர்க்.

பாதி கட் செய்யப்பட்ட கேக் அருகில் தீபிகா அளித்த போஸ்!

ஃப்ரில் :

ஃப்ரில் :

தீபிகா கொடுத்திருக்கும் செக்ஸியான போஸ் இது. சோனியா ரைகீல் வடிவமைத்திருந்த ரெயின்போ ஃபிரில் உடையில் கச்சிதமாக இருந்தார் தீபிகா. இந்த உடைக்கு ஏற்ப மேட் பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக்கும், ஊதா நிற நெயில் பாலிஷும் அணிந்திருந்தார்.

மேஜிக் :

மேஜிக் :

இந்த உடையில் தீபிகா ஓர் மேஜிக் போல தெரிந்தார் என்றே சொல்லலாம். பிகினி மேலாடை மற்றும் நீள நிறத்தில் ஸ்குயின் டரவுசர் அணிந்து அசத்தலான லுக் கொடுத்திருந்தார் தீபிகா.

இந்த உடையை ஹல்பெர்ன் ஸ்டுடியோவிலிருந்து வடிவமைக்கப்பட்டிருந்தது. ரேடியம் நிறத்தில் நியான் பெட்சீட்டை அணைத்துக் கொண்டும், அதே ரேடியம் நிற தலையணை அருகில் ப்ராப்ர்ட்டியாக இருந்தது.

டால்பின் சவாரி :

டால்பின் சவாரி :

காற்று நிறப்பப்பட்ட டால்பின் மீதேறி சந்தோஷ சவாரி மேற்கொள்வது போல மகிழ்ச்சியான போஸ் கொடுத்திருந்தார் தீபிகா. இதில் டாப் ஷாப்பிலிருந்து வடிவமைக்கப்பட்ட பிங்க் வண்ண டாப் மற்றும் நீள நிறத்திலான செரிலியன் எட்லின் லீ நவஜோ என ஒரு வகை ஸ்க்ர்ட்டை அணிந்திருந்தார்.

இவற்றுடன் மெலோன் சோலியர்ஸிடன் தங்க நீர் ஹீல்ஸ் செருப்பும் அணிந்திருந்தார்.

மஞ்சள் அழகி :

மஞ்சள் அழகி :

எளிமையான லுக்கில் அசத்தியிருக்கிறார் தீபிகா. ப்ரபால் குருங் டிசைன் செய்திருக்கும் இந்த ஆடை மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் பார்க்க எளிமையாக இருந்தது. குழந்தைத்தனமான சிரிப்பு மற்றும் குறும்புத் தனத்துடன் போஸ் கொடுத்திருந்தார் தீபிகா

பொம்மை பொம்மை :

பொம்மை பொம்மை :

பேலட் நடனக் கலைஞர்களைப் போல கொடுத்திருக்கும் இந்த போஸில் தீபிகா வேற லெவல்.... பார்க்க அப்படியே லேட்டின் அமெரிக்கா பொம்மை போன்றே காட்சியளிக்கிறார்.

மொசிச்னோ டிசைன் செய்திருக்கும் இந்த சிகப்பு நிற ஆடைக்கு ஏற்ப நியூட் மேக்கப் மற்றும் ரெட் லிப்ஸ்டிக் பிரமாதம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion bollywood wardrobe
English summary

deepika padukone turns sexy and glittery for a magazine

deepika padukone turns sexy and glittery for a magazine
Story first published: Wednesday, February 7, 2018, 17:26 [IST]