விராத்தின் அதிரடி கேள்வி! விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பு ஹைலைடஸ்!!!(வீடியோ)

Posted By:
Subscribe to Boldsky
விராத்-அனுஷ்கா திருமண வரவேற்பு வீடியோ

யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக கடந்த வாரம் விராட் கோஹ்லி - அனுஷ்காஷர்மாவின் திருமணம் நடந்தது முடிந்தது. இத்தாலியில் நடைப்பெற்ற அந்த நிகழ்ச்சியில்மிகவும் நெருங்கிய உறவினர்கள்... கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கும் குறைவானோர் கலந்து கொண்டனர்.

மஞ்சள் பூசும் நிகழ்ச்சி,மெஹந்தி,பேச்சுலர் பார்ட்டி,நிச்சயதார்த்தம்,திருமணம் என வெகுவிமர்சையாக நடந்து முடிந்து அதன் படங்கள் வெளியான போது தான் நமக்கு விவரமேதெரியும். அப்போதே டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதோ நேற்று டிசம்பர் 21 2ஜி தீர்ப்பு,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்ற பரபரப்பில் இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மறந்திருப்போம். இதோ திருமண வரவேற்பு பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களின் தொகுப்பு வந்திருக்கிறது. அதோடு ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைக்கப்பட்டிருக்கிறது பார்த்து ரசித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

டெல்லியில் இருக்கும் தாஜ் பேலஸ் ஹோட்டலில் தான் வரவேற்பு நிகழ்ச்சி. திருமண ஆடையினைப் பார்த்து இவர்கள் வரவேற்பிற்கு எந்த ஆடை செலக்ட் செய்வார்கள் என்று நாம் யூகித்து வைத்திருந்தவற்றை எல்லம தவிடு பொடி ஆக்கியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

#2

#2

நாம் எதிர்ப்பார்த்ததை விட ஸ்ட்டன்னிங் லுக்கில் இருந்தார்கள்.அதை விட அவர்களது தோற்றமும் மிடுக்கான அழகும் ராயல் லுக் கொடுத்தது.

 #3

#3

ரிஷப்சனுக்கு அனுஷ்கா தேர்ந்தெடுத்திருந்தது சிகப்பு பனாரஸ் சேலை. அதனை கொல்கத்தாவைச் சேர்ந்த மிகவும் புகழ்ப்பெற்ற ஃபேஷன் டிசைனரான சபயாக்ஷி தயாரித்திருந்தார்.

#4

#4

சிகப்பு நிற சேலையில் தங்க நிறத்தில் ஜரி வேலைப்பாடுகள் இருந்தது. அந்த டிசைன் உடல்முழுவதும் வந்திருப்பது கிராண்ட் லுக் கொடுத்தது.

#5

#5

இந்த சேலை டிசைனை பனாரஸ் வகைகளில் பீலி கோதி என்கிறார்கள்.பட்டுச் சேலைகளின் துவக்க இடம் தான் இந்த பீலி கோதி. உயர்தரமான பட்டு சேலைகளுக்கு பீலி கோதி பனாரஸ் சேலை என்கிறார்கள். அனுஷ்கா அணிந்திருந்தது இந்த வகைச் சேலை தான்.

#6

#6

மணப்பெண் சேலை அலங்கரித்தல மட்டும் போதுமா அதற்கேற்ப நகை வேண்டுமே.அழகுக்கு மெருகேற்ற இந்த அணிகலன்கள் அவசியம் தானே இதோ ஒற்றை சோக்கர் டைப் பெரிய மாடல் நெக்லஸ் அணிந்திருந்தார் அனுஷ்கா அன் கட் டைமண்ட் கற்கள் அதில் இருந்தது.

பாரம்பரிய வகையில் பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தன.அதற்கு மேட்சிங்காக பெரிய ஜிமிக்கி தோடுகளை அணிந்திருந்தார்.

#7

#7

இந்த ஆடையை வடிவமைத்த டிசைனர் பெங்காலைச் சேர்ந்தவர் என்பதால் அனுஷ்காவின் திருமண வரவேற்பு ஸ்டைலில் பெங்கால் டச் இருந்தது.

இந்த டார்க் வண்ணப் பட்டுசேலை, கொண்டை,நெற்றியில் நீளமான குங்குமம் எல்லாமே பெங்காலி பெண்கள் ஸ்டைல்.

#8

#8

அனுஷ்காவைப் பற்றியே பேசி நம் ஹீரோவை விட்டுவிட்டோமே அனுஷ்காவிற்கு சற்றும்குறையவில்லை விராத்தின் ராயல் கிராண்ட் ஸ்டைல்.

கருப்பு நிற ஷெர்வானி அதற்கு மேட்சிங்காக வெள்ளை நிற பைஜாமா.அதோடு இதில் முத்தாய்ப்பாக பஸ்மினா வகை ஷால் தான்.

#9

#9

விராத்தின் இந்த காஸ்ட்யூம் பெங்காலில் இருக்கிற ஜமீந்தார் போல இருந்தது. மாலை வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் அனுஷ்காவின் கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார் விராத்.

மேடையில் ஏறியதும் விராத் எதோ சொல்ல ஒரு கணம் விக்கித்து நின்ற அனுஷ்கா பின் சுதாரித்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

#10

#10

அதற்கு பதிலாக அனுஷ்க எதையோ சொல்லிவிட்டு அனுஷ்கா சிரிக்க விராத் சிரிப்பைகட்டுப்படுத்தி போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்.

விராத் -அனுஷ்காவிற்கு இடையிலான இந்த ரொமாண்ட்டிக் உரையாடல் பெரிதும் கவர்ந்தது என்றாலும்.

விராத் என்ன கேட்டார் ? அதற்கு அனுஷ்காவின் பதிலென்ன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை அவர்களாகவே ட்விட்டரில் தெரிவிக்கும் வரையில் காத்திருக்க வேண்டியது தான்.

#11

#11

வரவேற்பு நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஸ்டார் கப்பிலுக்கு வாழ்த்தினார்.

#12

#12

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றார்கள். அதை விட நாட்டின் பிரதமரே வந்து பங்கேற்ற நிகழ்ச்சி என்பாதால் உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Virat Anushka Wedding Reception Stunning Pictures

Virat Anushka Wedding Reception Stunning Pictures
Story first published: Friday, December 22, 2017, 9:30 [IST]