Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
ஜிகு ஜிகு புடவையில் செக்ஸியாக காட்சியளிக்கும் நடிகைகள்!
ஃபேஷன் டிசைனர்களுள் மிகவும் பிரபலமானவர் தான் மனீஷ் மல்ஹொத்ரா. இவர் வடிவமைக்கும் ஆடைகள் உண்மையிலேயே சிறப்பானவை மற்றும் மனதைக் கவரும் வண்ணம் தனித்துவமான டிசைன்களைக் கொண்டிருக்கும்.
பெண்களுக்கு மார்டன் உடைகளை விட புடவை தான் அழகு. சொல்லப்போனால் புடவை அணியும் பெண்களைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். மேலும் பெண்களுக்கும் புடவைகள் தான் விருப்பமான உடையாக இருக்கும். மேலும் காலத்திற்கு ஏற்ப புடவைகளிலும் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீக்வின் என்னும் மின்னும் புடவை.

பொதுவாக ஃபேஷன் டிசைனர்களுள் மிகவும் பிரபலமானவர் தான் மனீஷ் மல்ஹொத்ரா. இவர் வடிவமைக்கும் ஆடைகள் உண்மையிலேயே சிறப்பானவை மற்றும் மனதைக் கவரும் வண்ணம் தனித்துவமான டிசைன்களைக் கொண்டிருக்கும். இதனாலேயே பாலிவுட் நடிகைகள் பலரும் இவரது உடைகளையே பல நிகழ்ச்சிகளிலும் அணிந்து வர விரும்புவார்கள். இவர் மார்டன் உடைகளைத் தவிர, பலவிதமான புடவைகளையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளார். அதில் அவரது சீக்வின் புடவைகள் பாலிவுட் நடிகைகளைக் கவர்ந்ததாக இருக்கின்றன.
கீழே டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த சீக்வின் புடவைக்கு அட்டகாசமான ஜாக்கெட்டுகளை அணிந்து கவர்ச்சிகரமாக காட்சியளித்த நடிகைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து உங்களுக்கு எந்த நடிகையோட லுக் பிடிச்சுருக்குன்னு சொல்லுங்க...

ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தோழியின் திருமணத்திற்கு டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த மவ்வ் நிற மின்னும் புடவை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் பொருந்தமாக இதய வடிவ ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, காதுகளுக்கு பெரிய வைர காதணியை அணிந்து வந்தது, அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.

கஜோல்
பிக் பாஸ் 13 செட்டிற்கு தனது தன்ஹாஜி படத்தின் விளம்பரத்திற்காக நடிகை கஜோல் நேவி ப்ளூ நிற சீக்வின் புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் வெல்வெட் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, ஸ்மோக்கி ஐ மேக்கப் போட்டு, வைர ஆபரணம் அணிந்து, ப்ரீ ஹேர் விட்டு வந்தது அவருக்கு ஒரு போல்ட்டான லுக்கை கொடுத்தது எனலாம்.

நடாஷா பூனவல்லா
அம்பானி குடும்பத்தினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் போது நடாஷா பூனவல்லா மனீஷ் மல்ஹொத்ராவின் சேஜ் பச்சை நிற மின்னும் புடவை அணிந்து வந்திருந்தார். இந்த தனித்துவமான புடவைக்கு அவர் தேர்ந்தெடுத்த ஒரு ஜோடி பெரிய காதணி மற்றும் மரகத கற்கள் பதிக்கப்பட்ட சட்லாடா ஹார் போன்றவை அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது.

கரீஷ்மா கபூர்
2019 ஆம் ஆண்டு நடந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்து வந்த போது அழகான கருப்பு நிற மின்னும் புடவை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக இருந்தார். அதோடு இந்த உடைக்கு இவர் மேற்கொண்ட மேக்கப், ஹேர் ஸ்டைல் போன்றவை அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

கரீனா கபூர்
கரீனா கபூர் அணிந்துள்ள மனீஷ் மல்ஹொத்ராவின் இந்த பவள நிற மின்னும் புடவை மற்றும் அதற்கு பொருத்தமான சில்வர் நிற இதய வடிவிலான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் இவரை படு கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறது எனலாம். அதிலும் இந்த புடவைக்கு இவர் அணிந்திருந்த இரண்டு லேயர் கொண்ட வைர ஆபரணம் இவருக்கு மேலும் அழகூட்டியது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
மஞ்சள் என்பது தங்க நிறத்தைப் போல திகைக்க வைக்கும் நிறம். நடிகை ஜாக்குலின் மனீஷ் மல்ஹொத்ராவின் மஞ்சள் நிற மின்னும் சீக்வின் புடவைக்கு அணிந்திருந்த சில்வர் நிற இதய வடிவ ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், இவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது. அதிலும் இந்த புடவையை இவர் அணிந்துள்ள விதம் மற்றும் இந்த புடவைக்கு இவர் காதுகளில் அணிந்திருந்த சிறிய காதணி போன்றவை, இவரை இன்னும் கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

தாரா சுத்தாரியா
பாலிவுட்டின் புதிய நடிகர்களின் கனவு பெண் தாரா சுத்தாரியா. இவர் பச்சன் குடும்பத்தினர் அளித்த தீபாவளி பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது, சாம்பல் நிற மனீஷ் மல்ஹொத்ராவின் சீக்வின் புடவையில் வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் அணிந்து வந்த பிராலெட் ஜாக்கெட் இவரது தோற்றத்தை கவர்ச்சிகரமாக காட்டியது. இந்த புடவைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்மோக்கி ஐ மேக்கப், நியூட் லிப்ஸ் மற்றும் அடுக்குகளைக் கொண்ட வைர நெக்லேஸ் போன்றவை இவரை இன்னும் மெருகேற்றி காட்டியது.



Click it and Unblock the Notifications