விராத்-அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கு ஜோடியாக வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமணம் இத்தாலியில் நடந்திருந்தாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டெல்லி, மும்பை போன்ற இடங்களில் வைத்திருந்தனர். அதில் டெல்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்துவிட்டது. நேற்று மும்பையில் செயிண்ட் ரீகஸ் ஹோட்டலில் விராத் மற்றும் அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Celebrities At Virushka's Mumbai Reception Party

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அட்டகாசமான உடையில் வந்து அசத்தினர். இக்கட்டுரையில் மும்பையில் நடந்த விராத் மற்றும் அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன்

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன்

விராத் மற்றும் அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கு நடிகர் அபிஷேக் பச்சன் கருப்பு நிற கோட் சூட் அணிந்தும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் வெள்ளை நிற அனார்கலி உடை அணிந்தும் வந்திருந்தனர்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் எப்போதும் போன்று கருப்பு நிற கோட் சூட்டில் விராத்தின் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

மாதுரி பூ வேலைப்பாடு செய்யப்பட்ட அழகிய புடவை அணிந்து விராத் மற்றும் அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

ரன்பீர் கபூர், நீத்தா அம்பானி

ரன்பீர் கபூர், நீத்தா அம்பானி

ரன்பீர் எப்போதும் போன்று கோட் சூம் அணிந்து வந்திருந்தார். நீத்தா அம்பானி கருப்பு நிற லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.

கத்ரீனா கையிப்

கத்ரீனா கையிப்

நடிகை கத்ரீனா கையிப் டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த அழகிய வெள்ளை நிற லெஹெங்கா அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் சப்யசாச்சி டிசைனர் செய்த புடவை மற்றும் ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

ரேகா

ரேகா

நடிகை ரேகா எப்போதும் போன்று காஞ்சிபுர பட்டு சேலை அணிந்து, அழகிய ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.

ஸ்வேதா மற்றும் அமிதாப் பச்சன்

ஸ்வேதா மற்றும் அமிதாப் பச்சன்

இது நடிகர் அமிதாப் பச்சனும், ஸ்வேதா நந்தாவும் விராத் கோலி மற்றும் அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த போது எடுத்தது.

சச்சின் டெண்டுல்கர், சாரா, அஞ்சலி

சச்சின் டெண்டுல்கர், சாரா, அஞ்சலி

விராத் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பிற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாராவுடன் வந்திருந்தார்.

சாரா அலி கான்

சாரா அலி கான்

சாரா அலி கான் அழகிய பூப்போட்ட லெஹெங்கா அணிந்து, திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்.

சித்தார்த் மல்ஹொத்ரா

சித்தார்த் மல்ஹொத்ரா

நடிகர் சித்தார்த் நீல நிற கோட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து, விராத் -அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பூமி பெட்னேக்கர்

பூமி பெட்னேக்கர்

நடிகை பூமி பெட்னேக்கர் அழகிய வெள்ளை நிற லெஹெங்கா அணிந்து, மும்பையில் நடந்த விராத்-அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

லாரா துட்டா மற்றும் மகேஷ் பூபதி

லாரா துட்டா மற்றும் மகேஷ் பூபதி

நடிகை லாரா துட்டா மற்றும் மகேஷ் பூபதியும் விராத்-அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம் எஸ் டோனி, சாக்ஷி, ஜிவா

எம் எஸ் டோனி, சாக்ஷி, ஜிவா

கிரிக்கெட் வீரர் எம்எஸ் டோனி, தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தனது மனைவியுடன் விராத்-அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கு எப்போதும் போன்று சிம்பிளாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities At Virushka's Mumbai Reception Party

These celebrities stunned us with their style statements at Virushka’s Mumbai reception party. Have a look.